Search
  • Follow NativePlanet
Share
» »டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

பஹாய் வழிபாட்டு இல்லம், பஹாய் மஷ்ரிகுல்-அத்கர் கோயில் மற்றும் கமல் மந்திர் என்றழைக்கப்படும் இந்த லோட்டஸ் டெம்பிள் டெல்லியில் அமைந்துள்ள நவீன காலத்தில் நாட்டின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகும்.

இதன் வெள்ளை பளிங்கு அமைப்பு காரணமாக இந்தக் கோவில் 20 ஆம் நூற்றாண்டின் தாஜ்மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை இதழ்கள் கொண்ட கண்கவர் தாமரை வடிவில், இது ஒரு கண்கொள்ளா காட்சியை உருவாக்குகிறது மற்றும் ஆண்டு முழுவதும் எண்ணற்ற பார்வையாளர்களை ஈர்க்கிறது.

உலகம் முழுவதிலும் மொத்தமே ஏழு லோட்டஸ் டெம்பிள்கள் தான் . உள்ளன, அந்த ஏழில் ஒன்று நம் நாட்டு தலைநகரில் அமைந்துள்ளது. இதனைப் பற்றிய மேலும் சிறப்பம்சங்களை இந்தப் பதிவில் காண்போம்!

லோட்டஸ் டெம்பிளின் அழகிய கட்டிடக்கலை

லோட்டஸ் டெம்பிளின் அழகிய கட்டிடக்கலை

தாமரை போன்ற வடிவமைப்பில் 26 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த இந்த கோவில் பசுமையான இயற்கை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. கிரீஸில் இருந்து சிறப்பாக கொண்டுவரப்பட்ட வெள்ளை பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த தாமரை வடிவம் மொத்தம் 27 இதழ்களைக் கொண்டுள்ளது.நீங்கள் கோவிலின் வளாகத்திற்குள் உள்ளே செல்லும்போதே, கண்களை மயக்கும் வகையில் உள்ள நுழைவு வாயில், அழகான மலர் தோட்டங்கள் மற்றும் ஒளிரும் குளங்கள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ளுவீர்கள். கோயில் கதவுகளுக்குச் செல்லும் பாதை பசுமையான புதர்களால் நிறைந்து உள்ளது. கோவிலின் வசீகரிக்கும் கட்டிடக்கலையானது உங்களை ஆழ்ந்த திளைப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.உட்புறங்களில் சிலைகள், படங்கள் அல்லது படங்கள் எதுவும் இல்லை. இதழ்களைச் சுற்றி அமைந்துள்ள ஒன்பது குளங்கள் கோயிலின் கண்ணைக் கவரும் அம்சமாகும். அவை நீர்நிலையில் பாதி மலர்ந்த தாமரை போன்ற தோற்றத்தை அளிக்கின்றன, மேலும் இரவில் ஒளிரும் போது முழு அமைப்பும் கண்கவர் காட்சியளிக்கிறது.

லோட்டஸ் டெம்பிளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

லோட்டஸ் டெம்பிளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

தேசிய தலைநகரில் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் முதல் கோயில் இதுவாகும்.ஆண்டுக்கு சுமார் 4.5 மில்லியன் பார்வையாளர்களுடன், இது உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.இந்தியாவில் 6.50 ரூபாய்க்கான தபால் தலையில் இந்தக் கோயில் இடம்பெற்றுள்ளது.இந்த பளபளக்கும் கோவிலைக் கட்டுவதற்கு 10,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவுகளில் பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.ஃபரிபோர்ஸ் சபா இந்த நுணுக்கமான கோவிலைக் கட்ட 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.சுமார் 40 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய மத்திய மண்டபத்திற்கு ஒன்பது நுழைவாயில்கள் உள்ளன. 1300 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இக்கோயிலில் ஒரே நேரத்தில் 2500 பேர் தங்கலாம்.இந்த ஆலயம் சர்வவல்லவரின் ஒருமையை பிரச்சாரம் செய்ய முயல்கிறது ஆகவே மக்களின் தேசியம், மதம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இங்கு எவ்வித தடையுமின்றி பிரவேசம் செய்யலாம்.எனவே, நீங்கள் இங்கு எந்த நம்பிக்கையின் மத நூல்களையும் படிக்கலாம் மேலும் கோயில் வளாகத்தில் எந்த தடையும் இல்லாமல் மத நூல்களின் இசை விளக்கங்களை பாடலாம்.கோவிலின் அற்புதமான கட்டிடக்கலைக்கு மட்டுமல்ல, ஆனந்தமான சூழலில் தியானத்தின் புதிய வழியை அனுபவிப்பதற்காகவும் பஹாய் லோட்டஸ் டெம்பிள்க்கு நீங்கள் கட்டாயம் வருகை தர வேண்டும்.

லோட்டஸ் டெம்பிள்க்கு எப்போது மற்றும் எவ்வாறு செல்ல வேண்டும்?

லோட்டஸ் டெம்பிள்க்கு எப்போது மற்றும் எவ்வாறு செல்ல வேண்டும்?

அமைதி, தியானம், பிரார்த்தனை மற்றும் படிப்பிற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல பார்வையாளர்கள் வரும் இடம் இது இது அதன் அழகிய மலர் போன்ற கட்டிடக்கலை மற்றும் அற்புதமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது, இது அனைத்து மதத்தினருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது.ஆண்டு தோறும் இந்த கோவிலுக்கு செல்லலாம் மேலும் மாலை நேரத்தில் இந்த கோவிலுக்கு செல்ல சிறந்த நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஃப்ளட்லைட்களால் கோவிலின் அழகு இன்னும் அதிகரிக்கிறது. திங்கட்கிழமையை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில் திறந்து இருக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை கோவிலுக்கு செல்லலாம்.இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள லோட்டஸ் டெம்பிள் பேருந்து மற்றும் மெட்ரோ மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் வயலட் லைன், கல்காஜி நிலையமாகும்.டெல்லி நாட்டின் அனைத்து நகரங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவர்க்கும் நன்கு தெரிந்த விஷயமே! ஆகவே, நீங்கள் இப்போது டெல்லியில் இருந்தாலும், அடுத்த முறை டெல்லிக்கு செல்லும்போதோ கட்டாயம் லோட்டஸ் டெம்பிள்க்கு சென்று வாருங்கள்!

Read more about: lotus temple delhi haryana
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X