Search
  • Follow NativePlanet
Share
» »அலாங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அலாங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அலாங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆறுகளும் ஷியாங் ஆற்றின் கிளையாறுகள் ஆகும். இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 300 மீ உயரத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இந்த நகரத்தின் எழில் மிகு இயற்கைக் காட்சிகள், மற்றும் மலைகளின் அமைதியான மற்றும் அழகிய பள்ளத்தாக்குகளின் கண்ணுக்கினிய காட்சியானது உங்களுக்கு ஒரு முடிவில்லா பயணத்தை இயற்கை அன்னையின் மடியில் வழங்குகிறது. வாருங்கள் நாமும் சென்று மகிழ்ந்திருப்போம்.

சாகசங்களும் இனிமை அனுபவங்களும்

சாகசங்களும் இனிமை அனுபவங்களும்

அலாங் நகரம் மேற்கு ஷியாங் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மலையேற்றம், டெரெக்கிங் மற்றும் படகுச் சவாரி போன்றவற்றிற்கு அலாங் ஒரு சிறந்த இடமாகும். இந்த நகரம் கரும்பு மற்றும் மூங்கில் பொருட்களுக்கு மிகவும் பிரபலமானது. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள பழங்குடி மக்களால் உருவாக்கப்படும் சால்வைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் பைகள் போன்ற சில கைத்தறி தயாரிப்புகள் மிகப் பிரபலமாக விளங்குகிறது.


Mousourik

சுற்றியுள்ள மிக முக்கியமான இடங்கள்

சுற்றியுள்ள மிக முக்கியமான இடங்கள்

அலாங்கைச் சுற்றி சிறியதும் மற்றும் பெரியதுமாகிய பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. பாட்டும் பாலம், தொங்கும் பாலங்கள், தடைசெய்யப்பட்ட மெச்ஹுக பள்ளத்தாக்கு, ஆகாஷகங்கா கோவில், டொனியோ கோவில், மிதுன் மற்றும் ஜெர்சி கலப்பு வளர்ப்பு பண்ணை, புவாக் காட், மாலிநித்ஹன், ராமகிருஷ்ண ஆசிரமம், கம்கி நீர்மின்சார அணை போன்றவை மிக முக்கியமான சுற்றுலா தலங்கள் ஆகும்.

இங்குள்ள ஆர்க்கிட் பாதுகாப்பப்பட்ட வனம் பல்வேறு அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளதால், இந்த வனம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

Jasminquantum

கயிறு பாலங்கள்

கயிறு பாலங்கள்

பாலங்கள் கயிறுகள் மற்றும் மூங்கிலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறிய பாலங்கள் உள்ளூர் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்வதற்காக கட்டப்பட்டுள்ளன.

சுமார் 60 மீ முதல் 70 மீ நீளமுள்ள இந்தப் பாலங்கள் இங்குள்ள பழங்குடி இன மக்கள் இந்தப் பிராந்தியத்தில் இருந்து ஏனைய மலைப்பாங்கான பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் மீன்பிடித்து மகிழலாம்.

Quentin Talon & Mario Geiger

நீல மலை பள்ளத்தாக்குகள்

நீல மலை பள்ளத்தாக்குகள்

நீல மலை பள்ளத்தாக்குகள் அதன் கண்ணுக்கினிய அழகு மற்றும் இங்குள்ள புத்த மடாலயத்திற்காக அறியப்படுகிறது. இங்குள்ள புத்த மடாலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. மேலும் இங்குள்ள நூலகத்தில் பல விலைமதிப்பற்ற புத்த மத சுவடிகள் மற்றும் புத்தகங்கள் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மடாலயம் அலாங் நகரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அழகான மெச்ஹுக ஏரி வளமான பசுமையால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியானது மனதை மயக்கும் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை நம் கண்களூக்கு விருந்தாக வழங்குகிறது. இதைத் தவிர ஸியோம் ஆறும் இந்த அழகிய மெச்ஹுக பள்ளத்தாக்கின் வழியாக பாய்கிறது.

மெச்ஹுக பள்ளத்தாக்கானது இந்திய சீன எல்லையில் இருந்து சுமார் 29 கீ.மீ தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் ஆதி பழங்குடி இனமான ராமோ மக்கள் வசிக்கின்றனர். இந்த இடத்திற்கு அருகில் உள்ள லிலபாரி விமான நிலையம் உள்ளது.

Quentin Talon & Mario Geiger

 ஆகாஸகங்கா

ஆகாஸகங்கா

ஆகாஸகங்கா அலாங்கில் உள்ள ஒரு புனிதமான இடம் ஆகும். இந்து மத புராணங்களின் படி இந்த இடத்தில் அன்னை பார்வதியின் துண்டிக்கப்பட்ட தலை விழுந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித நீர் குளத்தில் புனித நீராடுகின்றனர். இங்கே ஒரு புனித குண்டம் ஒன்றும் உள்ளது. மலைகளூக்கு கீழே பாய்ந்து ஓடும் அழகிய பிரம்மபுத்திரா நதியின் தோற்றத்தை நாம் இங்கிருந்து கண்டு மகிழலாம். இந்தப் புனித இடத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

Jaypait

Read more about: arunachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X