Search
  • Follow NativePlanet
Share
» »அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!

அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!

போராப்காட் என்றும் அழைக்கப்படும் சுதாகட் கோட்டை மகாராஷ்டிராவின் பாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டையாகும். கிமு 2 ஆம் நூற்றாண்டில், போராய் தேவியின் பக்தர்கள் உச்சியில் ஒரு கோயிலைக் கட்டினார்கள். பின்பு பஹாமனி சுல்தானால் கைப்பற்றப்பட்ட கோட்டைக்கு சுதாகட் என்று பெயரிடப்பட்டது, அதாவது இனிமையான கோட்டை என்று பொருள்.
பசுமையான புற்கள் மற்றும் நிலப்பரப்புகளால் சூழப்பட்ட சுதாகட் கோட்டையை அடைய நீங்கள் செங்குத்தான படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழியாக ட்ரெக்கிங் செய்ய வேண்டும். சாகச விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் பிடித்த இந்த இடம் ஒரு அழகான வார இறுதி விடுமுறை தலமாகும்.

சுதாகட் கோட்டை

சுதாகட் கோட்டை

2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சுதாகட் கோட்டை, சுமார் 600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுதாகட் ஒரு பெரிய பீடபூமியைக் கொண்ட பிரம்மாண்டமான கோட்டையாகும். சமயோசிதமாக பலப்படுத்தப்பட்ட இக்கோட்டை, அந்தக் காலத்தின் வலிமையான மற்றும் அணுக முடியாத கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டை செங்குத்தான பாறைகள், பசுமையான புற்கள் மற்றும் குறுகிற நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. பாலிக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டை சுமார் 50 ஏக்கர் செழுமையான, பச்சை மற்றும் பசுமை தூவப்பட்ட பீடபூமியை தழுவிக்கொண்டு உள்ளது எனலாம். சுதாகத் கோட்டைக்கு ட்ரெக்கிங் செய்வது நிறைய சாகசங்கள் மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைந்த ஒரு அற்புத பயணமாக இருக்கும். இக்கோட்டை புனே மற்றும் மும்பைக்கு அருகாமையில் இருப்பதால் இது மக்களுக்கு ஒரு இனிமையான மற்றும் குறுகிய வார இறுதி நுழைவாயிலாக திகழ்கிறது.

சுதாகட் ட்ரெக்கிங்

சுதாகட் ட்ரெக்கிங்

மலையின் அடிவாரமான தாக்கூர்வாடியை அடைய பாலியில் இருந்து பேருந்து அல்லது சொந்த வாகனங்களில் செல்லலாம். நீங்கள் மும்பையிலிருந்து வருகிறீர்கள் என்றால் தாதருக்கு ரயில் மூலம் வந்து, அங்கிருந்து தாக்கூர்வாடியை அடையலாம். நீங்கள் ட்ரெக்கிங்கை தாக்கூர்வாடி மற்றும் தோண்ட்சே கிராமம் என இரண்டு வழிகளிலும் தொடங்கலாம். ஆனால் தாக்கூர்வாடியிலிருந்து செல்வதே சற்று சுலபமாக உள்ளதால் பெரும்பாலானோர் இங்கிருந்தே செல்கின்றனர். தாக்கூர்வாடி பாலியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் ஒரு முதல் முறையாக ட்ரெக்கிங் செய்கிறீர்கள் என்றால், மலையேற்றப் பாதையில் உங்களுக்கு உதவ கிராமத்திலிருந்து வழிகாட்டியை உங்களுடன் அழைத்து செல்லலாம். மேலும் பல தரப்பட்ட தனியார் ஆபரேட்டர்கள் பேக்கேஜ் மூலமாக ட்ரெக்கிங்கை செய்து வருகிறார்கள். நீங்கள் அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
தாக்கூர்வாடியில் தொடங்கும் ட்ரெக்கிங் முதல் ஏணி, இரண்டாவது ஏணி, பச்சபூர் தர்வாஜா, ராஜ்வாடா என கோட்டையை அடைவீர்கள். பாதை முழுக்க சற்று சிரமமாக இருந்தாலும் கூட காலணிகளைக் போட்டுக்கொண்டு அழகான மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் செல்ல விரும்பும் அனைவருக்கும் இது ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவத்தை வழங்குகிறது என்பதே உண்மை.
சரஸ்கட் கோட்டையுடன் உங்கள் ட்ரெக்கிங்கை இணைக்க நீங்கள் திட்டமிட்டால் கோட்டைக்கு அருகே முகாமிடலாம். அங்கு தங்குமிடமாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு குகைகள் உள்ளன, ஆனாலும் நீங்கள் உங்கள் சொந்த கூடாரங்களை எடுத்துச் செல்லவே பரிந்துரைக்கப்படுகிறது. கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் தொலைவில் இருப்பதால், நகரத்தில் இருந்தே தண்ணீர் மற்றும் உணவை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

உடனே சாப்பிடக்கூடிய வகையில் இருக்கின்ற கேக்குகள், பழங்கள், சாக்லேட்டுகள், போன்ற உணவுகளை எடுத்துச் செல்லுங்கள். தண்ணீர், டார்ச், காலணிகள், உடை, குடை, குளுகோஸ், மருந்துகள், கொசு வத்தி ஆகிய அனைத்தையும் ஒரு பேக்பேகில் போட்டு எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக உங்களது அடையாள அட்டை மற்றும் கேமராவை எடுத்துக் கொள்ளவும், அவ்வளவு தூரம் சென்று அந்த அழகான இடத்தை படம் பிடிக்காமல் வந்தால் எப்படி! மேலும் ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளவர்கள், சிறுவர்கள், வயதான பெண்கள் மலை ஏறுவதை தவிர்ப்பது நல்லது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X