Search
  • Follow NativePlanet
Share
» »சாப்பாடு பிடிக்குமாங்க உங்களுக்கு ? அப்ப இந்த இடங்களுக்கு கண்டிப்பா வாங்க...

சாப்பாடு பிடிக்குமாங்க உங்களுக்கு ? அப்ப இந்த இடங்களுக்கு கண்டிப்பா வாங்க...

நைட்டுக்கு வீட்ல உப்புமா னு சொன்னதும் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து எங்காவது ஹோட்டலுக்கு சென்று பரோட்டாவையும் சிக்கன் சால்னாவையும் ஒரு பிடிபிடிக்கும் ஆளா பாஸ் நீங்க ?. இட்லி, தோசை, சாப்பாடுன்னு சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு ?. புதுசா தினுசுதினுசா சாப்பிடனும்னு ஆசையா இருக்கா ? வாங்க இந்தியாவில் கிடைக்கும் சில அற்புதமான உணவுகளை சுவைக்க கிளம்பலாம்.

Expedia தளத்தில் விமான கட்டணங்களில் 50% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லா கேக்குதுங்க. பாண்டிச்சேரின்னு சொன்னதும் நம்ம நினைவுக்கு வருவது குறைந்த விலையில் கிடைக்கும் 'பீர்' தான். இதை தாண்டி பிரஞ்சு உணவுகளை ருசிபார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தியாவிலேயே மிகச்சிறந்த இடமென்றால் அது பாண்டிச்சேரி தான்.

photo: Flikr

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

1950கள் வரை பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தினால் இன்றும் பாண்டிச்சேரியில் பிரஞ்சு கலாச்சாரத்தின் தாக்கத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இதன் வீதிகளில் நடைபோடுகையில் ஏதோ பிரான்ஸ் நாட்டுக்கே வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்ப்படும்.

Photo:R E B E L TM

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக திகழும் பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டியே இருக்கும் 'லே கபே' பிரஞ்சு உணவுகளை ருசிக்க மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாகும். 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த கபேயில் கிடைக்கும் காபிக்கு ஏராளமான ரசிகர் கூட்டமே உண்டு.

photo:Rashi Kalra

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது ஆரோவில்லே நகரமாகும். 'விடியலின் நகரம்' என்று பொருள்படும் ஆரோவில்லே நகரில் மொழி, இன, நிற மத வேறுபாடுகளை தாண்டி பல்வேறு நாட்டினரும் ஒற்றுமையுடன் வாழும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதாகும். பாண்டிச்சேரிக்கு வருபவர்கள் நிச்சயம் வரவேண்டிய இடமான இங்கே ஒரு பேக்கரி ஒன்றும் செயல்படுகிறது.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

கடை திறந்தவுடனேயே விற்றுத்தீர்ந்து விடும் அளவுக்கு இங்கு கிடைக்கும் நொறுக்கு தீனிகளை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. எனவே, நீங்களும் ஆரோவில்லே சென்றால் அங்கிருக்கும் ஆரோவில்லே பேக்கரிக்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.

Photo Source

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

'லே கபே'

Photo:Sandip Bhattacharya

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

'லே கபே'

Photo:Sandip Bhattacharya

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

'லே கபே'

Photo:Devaiah PA

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

'லே கபே'

Photo:Rain-In-The-Face

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

பாண்டிச்சேரி கடற்கரை.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் சில அழகான புகைப்படங்கள்.

பாண்டிச்சேரி கடற்கரை.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

கேரளத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகியதொரு நகரம் தான் தலசேரி. ஒரு காலத்தில் பிரான்சு நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்ததால் 'மலபார் கடற்கரையின் பாரிஸ்' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

இங்கு மிளகு மற்றும் ஏலக்காய் அதிகம் விளைந்ததால் ஐரோப்பிய மற்றும் அரேபிய வணிகர்கள் அதிகம் வரும் இடமாக இந்த தலசேரி இருந்துள்ளது. பல்வேறு கலாச்சாரங்களின் கேந்திரமாக திகழ்ந்ததால் இங்கு பரிமாறப்படும் உணவுகளும் தனித்தன்மை கொண்ட சுவையுடையதாக திகழ்கிறது.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

தலசேரியின் பிரத்யேகமான உணவு என்றால் அது தலசேரி பிரியாணி தான். பிரியாணி முகலாயர்களால் இந்தியாவினுள் கொண்டுவரப்பட்டது என்றாலும் அதன் சாயல் சற்றும் இல்லாமல் இருக்கிறது இந்த தலசேரி பிரியாணி.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

முகலாய பிரியாணியை போல பாஸ்மதி அரிசி கொண்டு இது செய்யப்படுவது இல்லை. ஜீரகசலா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணி பாரம்பரிய கேரளா விருந்தான சதயாவில் பரிமாறப்படும் ஒரே பிரியாணி என்ற பெருமையையும் பெற்றது. இதனாலேயே இது கேரளா பிரியாணி என்றும் அழைக்கப்படுகிறது.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

இந்த தலசேரி பிரியாணியுடன் ராய்த்தாவும், தேங்காய் மற்றும் புதினா இலைகளால் தயாரான பிரியாணி சட்னியும் பரிமாறப்படுகிறது. நீங்கள் பிரியாணிப்பிரியர் நிச்சயம் தலசேரிக்கு சென்று வாருங்கள்.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

தலசேரிக்கு அருகில் இந்தியாவின் ஒரே 'டிரைவ் - இன்' கடற்கரையான முளுபிலன்காட் கடற்கரை இருக்கிறது. அதேபோல விரைவில் வெளியாக இருக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் 'தெய்யம்' நடன கலைஞராக நடித்திருக்கிறார். அந்த நடனக்கலை தலசேரி இருக்கும் பகுதியின் பாரம்பரிய கலையாகும்.

 தலசேரி பிரியாணி :

தலசேரி பிரியாணி :

கண்ணூர் டிரைவ் இன் கடற்கரை.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

என்னதான் மெக்டோனால்ட்ஸ், கே.எப்.சி என்று பன்னாட்டு உணவகங்கள் வந்தாலும் வாழையிலை போட்டு சுட சுட கையால் சாப்பிடும் அனுபவத்திற்கு நிகரே இருக்க முடியாது. அப்படி சமைக்கப்படும் நம்ம ஊர் உணவுகளுள் செட்டிநாடு உணவுகள் ரொம்பவே சுவையானவை.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

மதுரையை அடுத்து அமைந்திருக்கும் சிவகங்கை, காரைக்குடி தேவகோட்டை ஆகிய பகுதிகள் செட்டிநாட்டின் கீழ் வருகின்றன.

இந்த பகுதிகளில் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கும் செட்டிநாட்டு சமையல் முறைப்படி உணவு தயாரிக்கும் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன. அங்கு சென்று அச்சுஅசலான சுவையான செட்டிநாட்டு உணவுகளை ருசி பார்க்கலாம்.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

பர்மா, சிலோன் போன்ற நாடுகளில் பெரும் வாணிபம் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட அறைகள் கொண்ட ஒரு தெரு நீளத்திற்கு கட்டப்பட்டிருக்கும் அரண்மனைகளை நாம் இன்றும் பார்க்கலாம்.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

செட்டிநாட்டு உணவுகளில் மிகவும் சுவையான உணவுகளாக கருதப்படுபவை நாட்டுக்கோழி குழம்பும், மீன் வருவலும் தான். கைகளால் தயாரான மசாலாவை கொண்டு செய்யப்படும் போதே இவை தங்களுக்குரிய தனித்துவமான ருசியை பெறுகின்றன. இவை தவிர சுவையான அடை தோசை வகைகள், தேன்குழல் போன்ற பல சுவையான உணவுகளும் இருக்கின்றன.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

மதுரை நகரில் இருந்து காரைக்குடி 86 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஒன்றரை மணிநேர பயணத்தில் நாம் மதுரையில் இருந்து காரைக்குடியை அடைந்து விட முடியும். காரைக்குடியில் செட்டிநாட்டு உணவை ருசித்து ரசித்து சாப்பிட்டு விட்டு அப்படியே செட்டிநாட்டின் மற்றொரு முக்கிய நகரமான புதுக்கோட்டைக்கும் சென்று வாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X