Search
  • Follow NativePlanet
Share
» »விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்

விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்

காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன

By Udhaya

காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன

மச்ச அவதாரம்

மச்ச அவதாரம்

மச்ச அவதாரத்தில், திருமால் 4 கைகளுடன் மேல்பகுதி தேவர்கள் வடிவிலும், கீழ்ப்பகுதி மீன் வடிவிலும் காட்சியளிக்கிறார். இந்த அவதாரக் கோயில்
திருப்பதிக்கு தென்கிழக்கே 70கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் நாகலாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. வேதநாரணயன் சுவாமி கோவிலில் மச்ச அவதாரத்தில் அருள்புரிகிறார் விஷ்ணு.

இந்த கோயில் அமைப்பு விஜயநகர அரசின் கட்டிடக் கலையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. வேதநாராயணர் சிலை மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் பூதேவி சீதேவி ஆகியோர் இருக்கின்றனர்.

Bhaskaranaidu

எப்படி செல்வது

எப்படி செல்வது


திருவள்ளூரிலிருந்து 1 மணி நேர பயண நேரத்தில் இந்த கோயிலை அடையலாம். இதன் தூரம் 37கிமீ ஆகும்.

இதன் அருகில் நாகலாபுரம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சென்று மகிழ்ந்துவிட்டு வரலாம்.

Shmilyshy

கூர்ம அவதாரம்

கூர்ம அவதாரம்


கூர்ம அவதாரத்தில் திருமால் ஆமை வடிவில் இருப்பார். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் பாம்பை மத்தாக வைத்துக் கடைந்து கொண்டிருக்கும்போது அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தாராம். இப்படி புராணக்கதை கூறுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் என்னும் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகூர்மம் என்னுமிடத்தில் கூர்மநாதர் என்னும் பெயரில் கூர்ம அவதாரத்தில் அருள்புரிகிறார் விஷ்ணு.
Adityamadhav83

எப்படி செல்வது

எப்படி செல்வது


விசாகப்பட்டினத்திலிருந்து 130 கிமீ தொலைவிலும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோயில்.

இதன் அருகிலேயே அரசவள்ளி எனும் இடத்தில் சூரியநாரயன கோயில் உள்ளது. கூர்மநாதசுவாமி எனும் பெயரில் விஷ்ணுவும், கூர்மநாயகி எனும் பெயரில் லட்சுமியும் இருக்கிறார்கள்.

Prasadgr83

வராக அவதாரம்

வராக அவதாரம்

விஷ்ணு இந்த அவதாரத்தில் பன்றி வடிவில் உள்ளார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் உள்ள லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் வாரகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

mountainamoeba

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருள்மிகு ஆதி வராக பெருமாள் கோயில். ஒரு மணி நேர பயணத்தில் இந்த கோயிலை அடைய முடியும்.

நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
தன் பரமபக்தனான பிரகலாதனை காப்பாற்ற இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரம். மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோயில்கள் புகழ்பெற்றவை.

இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன

Adityamadhav83

எப்படி செல்வது

எப்படி செல்வது

திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில், நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 44 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். இதுவே தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ள பாவூர்சத்திரம் என்ற ஊரிலிருந்து சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார்.
இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். காஞ்சிபுரத்திலுள்ள வாமனர் கோவிலில் இறைவன் வாமன அவதாரத்தில் காட்சி தருகிறார்.

Ssriram mt

எப்படி செல்வது

எப்படி செல்வது


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். திராவிடக் கட்டுமானக் கலை மூலம் கட்டப்பட்ட இந்த கோயில் மிகவும் அழகானதாகும்.

பரசுராமர்

பரசுராமர்

பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கன்னியாகுமரி கோவிலில் நீலநிறக் கல்லில் பரசுராம அவதாரத்தில் திருமால் அருளுகிறார்.

TheDashd

 எப்படி செல்வது

எப்படி செல்வது


கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது இந்த தேவி குமரி அம்மன் கோயில். பகவதி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயிலினுள் அமைந்துள்ள ஒரு இடத்தில் பரசுராம அவதாரம் புரிந்து காட்சிதருகிறார் விஷ்ணு.

Ranjithsiji

பலராமர்

பலராமர்

பலராமர் கிருஷ்ணரின் அண்ணன் ஆவார். இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம். இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்து இருந்தார். ஒரிஸாவில் கேன்டாபாரா என்னுமிடத்தில் பலராமருக்கு கோவில் உள்ளது.

MKar

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ஒரிஸா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து 90கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

இராமர்

இராமர்


இறைவன் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படுகிறார். தந்தையின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும், தீயசக்திகள் அழிக்கப்படும் ஆகியவற்றை இராமாவதாரத்தின் மூலம் இறைவன் உலகிற்கு உணர்த்தினார். ராமேஸ்வரத்திலுள்ள கோதண்ட ராமர் கோவிலில் ராமாவதாரத்தில் இறைவன் அருளுகிறார்.

Tej Kuma

 கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்


வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கம்சன் என்னும் அரக்கனை அழித்தல், பாண்டவர்களின் நியாயத்திற்கு போராடுதல், திரௌபதியின் மானத்தைக் காத்தல் ஆகியவை இந்த அவதாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளாகும். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கிருஷ்ணருக்கு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.

Ms Sarah Welch

 கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என கூறப்படுகின்றது. இதனால் கல்கி அவதாரத்தில் எந்த கோயிலும் இல்லை.
Anurag choubisa

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X