Search
  • Follow NativePlanet
Share
» »பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

சுற்றுலா என்றாலே தென்னிந்தியர்களுக்கு நினைவுக்கு வருவது கேரளமும், படகு வீடும்தான். கேரளத்தின் அழகியல்களில் மறக்கமுடியாத நினைவுகளைச் சுமந்து நிற்பது நிச்சயம் பேக் வாட்டர்ஸும் அதன் படகு இல்லங்களும். சரி படகு வீடுகள் பற்றியும் அது மிதக்கும் பேக் வாட்டர்ஸ் சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போமா?

இந்தியாவில் மிக முக்கிய பேக் வாட்டர் சுற்றுலாத் தளங்களான 7 இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம். மேலும் எப்படி செல்வது, அங்கே சுற்றிப் பார்க்க வேறென்ன இருக்கிறது என்பன பற்றியும் காணலாம் வாருங்கள்

 பேக் வாட்டர் என்றால் என்ன?

பேக் வாட்டர் என்றால் என்ன?

வீறு கொண்டு பாயும் ஆறு, சில இடங்களில் தனக்கென தனித்தன்மையோடு சில ஆசுவாசத்துக்காக ஓய்வெடுப்பதைப் போன்ற தோற்றத்தில் தேங்கி காணப்படும். அப்படிப்பட்ட இடங்கள் காண்பதற்கு மிக அழகாகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவதாகவும் இருக்கும். சரி இந்தியாவில் எங்கெல்லாம் பேக் வாட்டர் சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

Augustus Binu

அந்த ஏழு அழகிய நகரங்கள்

அந்த ஏழு அழகிய நகரங்கள்


இந்தியாவில்

ஆலப்புழா

பேக்கல்

ஹொன்னேமரடு

கொல்லம்

குமரகம்

பூவார்

சிந்துதுர்க்

என ஏழு இடங்களில் பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங் கழி சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. இவை சுற்றுலாப் பயணிகளால் அதிக அளவில் விரும்பப்படுவன. வாருங்கள் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் தனித்தனியே தெரிந்து கொள்வோம்.

Rison Thumboor

ஆலப்புழா

ஆலப்புழா

கீழைத் தேசத்து வெனிஸ் என்று அழைக்கப்படும் அழகிய ஆலப்புழா கேரளத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகும்.

கேரளத்தின் முதல் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இதுவாகும்

சிறப்பு

அழகிய உப்பங் கழிகள் எனப்படும் பேக் வாட்டர்ஸ்

ஆர்ப்பரிக்கும் அலைகள் வீசும் கடற்கரைகள்

எப்போது செல்லலாம்:

இந்த ஆலப்புழா நகரத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆனால் இங்கு சுற்றுலா சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை இருக்கும்.

Sachinmtk

 பேக்கல் :

பேக்கல் :

கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பேக்கல் நகரம் அமைதியின் இருப்பிடம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒரு அரண்மனை வரலாற்று சிறப்பு மிக்கது. அதன் விருந்தோம்பல் பண்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பேக்கல் நகரம் பிரபலமானது.

சிறப்பு:

பேக்கல் நகரத்தின் சிறப்புகள் என்பன கடற்கரைகளும், கோட்டைகளும், கோவில்களும் ஆகும். மேலும் இங்கு குகைகள், ஹவுஸ்போட், தெய்யம் திருவிழா, உப்பங்கழிகள், அரண்மனைகள் மற்றும் ஏரிகள் ஆகியவன காண்பதற்கு உகந்தவையாகும்.

எப்போது செல்லலாம்:

பேக்கல் நகரத்துக்கு செல்ல சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் முடியவுள்ள காலமாகும். இந்த சமயங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் காணமுடியும்.

Vijayanrajapuram -

ஹொன்னேமரடு:

ஹொன்னேமரடு:

ஹொன்னேமரடு என்ற இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும். இந்த சிறிய கிராமம் ஹொன்னேமரடு நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ளது. ஷிமோகா மாவட்டத்தில் பெங்களூரிலிருந்து 379 கி.மீ தூரத்தில் இந்த அழகு கிராமம் உள்ளது.

சிறப்பு:

பறவை இனங்கள், படகு சவாரி, நீர் விளையாட்டு, நடைபயணம், முகாமிடுதல், கயாக் சவாரி

எப்போது செல்லலாம்:

அக்டோபர்-மே

Sarthak Banerjee

கொல்லம்:

கொல்லம்:

‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள்.

சிறப்பு:

அமிர்தபுரி ஆஸ்ரமம், கலாச்சாரம், முந்திரி தொழிற்சாலை, சாஸ்தாம்கொட்டா ஏரி, அரண்மனைகள், கோயில் திருவிழாக்கள்

எப்போது செல்லலாம்:

ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்

elf

குமரகம்:

குமரகம்:

இந்தியப்பயணிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி தேடிவரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ‘குமரகம்' - இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாகும். கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாக கருதப்படும் வேம்பநாட் ஏரியில் பொதிக்கப்பட்டிருக்கும் இந்த ‘குமரகம்' எனும் தீவுக்கூட்டம் உலகில் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா ரசிகர்களை படிகம் போன்று ஜொலிக்கும் தன் இயற்கை வனப்பால் ஈர்த்து வருகிறது.

சிறப்பு:

உப்பங்கழிகள், வேம்பநாட் ஏரி, தனித்துவமான கலாச்சாரம், உணவு வகைகள், பத்திரமண்ணல், அருங்காட்சியகங்கள், பறவைகள் சரணாலயம்

எப்போது செல்லலாம்:

செப்டம்பர்-மார்ச்

rajaraman sundaram

பூவார் :

பூவார் :

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது.

பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்

சிறப்பு:

அழகிய உப்பங் கழிகள் எனப்படும் பேக் வாட்டர்ஸ்

ஆர்ப்பரிக்கும் அலைகள் வீசும் பூவார் பீச்

வளைந்து நெளிந்து ஓடும் நதிகள்

எப்போது செல்லலாம்:

செப்டம்பர்-மார்ச்

Vijay.dhankahr28

 சிந்துதுர்க் :

சிந்துதுர்க் :

சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை' என்ற பொருளைத்தரும் சிந்துதுர்க் என்ற பெயர் வந்த்து. மராட்டிய மாமன்னரான சத்ரபதி சிவாஜியால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.

சிறப்பு:

சிந்துதுர்க் கோட்டை, ஸ்நோர்கெல்லிங், ஸ்கூபா டைவிங், பாரம்பரியம்

எப்போது செல்லலாம்:

டிசம்பர்-ஜனவரி

Dinesh Valke

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X