Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: பெங்களூர் - அவினாசி- மூணார்

வானமே எல்லை: பெங்களூர் - அவினாசி- மூணார்

ஒருதடவ நீங்க மூணார் போனிங்கன்னா வாரணம் ஆயிரம் படத்துல அந்தகாலத்து சூர்யா சிம்ரன ப்ரபோஸ் பண்ணும் போது "இவ்வளவு அழகா எங்கயும் இவ்வளவு அழக பார்த்ததில்லை" சொல்றது மாதிரி நீங்களும் நிச்சயம் சொல்லுவீங்க. எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு புல் வெளிகள், உறையவைக்கும் விறுவிறுப்புடன் ஓடும் ஆறுகள், சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் மலைகளுக்கு பின்னால் சூரியன் நடத்தும் வர்ணஜாலங்கள், காதலர்களுக்கு ஏற்ற படகு சவாரி, ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு ஆனைமுடி மலை, குடும்பத்துடன் வருபவர்களுக்கு என யானை சவாரி என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற சுற்றுலாத்தலம் என்றால் அது மூணார் தான். வாருங்கள், அவினாசி, உடுமலைபேட்டை வழியாக பெங்களூரில் டு மூணாறுக்கு சாலைப்பயணம் ஒன்றை மேற்கொள்வோம். இந்த வார விடுமுறையை மூணாறில் அட்டகாசமாக கொண்டாடலாம்.

விமான பயணங்களில் 50% வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

பெங்களுரு - அவினாசி:

பெங்களுரு - அவினாசி:

பெங்களுருவில் இருந்து மூணாறு செல்ல சிறந்த சாலை வழி திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் உடுமலைபேட்டை வழியே. வெள்ளிக்கிழமை மாலை பெங்களுருவில் இருந்து கிளம்பினால் எலெக்ட்ரானிக் சிட்டி வழியாக தமிழக-கர்னாடக எல்லையான ஓசூரை அடைந்து அங்கிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக ஈரோட்டை கடந்து அவினாஷியை அடையுங்கள். முன்னுற்றி இருபது கி.மீ தூரமுள்ள இந்த பயணத்தை முடிக்க குறைந்தது ஐந்தரை மணிநேரம் ஆகும்.

Photo:j929

அவிநாசியப்பர் கோயில்:

அவிநாசியப்பர் கோயில்:

அவினாசியில் இரவு தங்கிவிட்டு காலை அவினாசியின் அடையாளமாக திகழும் அவிநாசியப்பர் கோயிலுக்கு சென்று வாருங்கள். கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு நாட்டின் முக்கியமான சிவன் கோயில்களுள் இதுவும் ஒன்று. சைவக்குரவர்களால் பாடப்பட்ட கொங்கு நாட்டு கோயில்களுள் இது முக்கியமானது. இந்த கோயிலில் சேரர் மற்றும் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளை நாம் பார்க்க முடியும். சுப முகுர்த்த நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இங்கே அதிகம் நடக்கின்றன. தொன்மையான இந்த கோயிலுக்கு அவசியம் சென்று வர மறந்துவிடாதீர்கள்.

Photo: Srinivasan R.

அவினாசி - உடுமலைபேட்டை- மூணார்:

அவினாசி - உடுமலைபேட்டை- மூணார்:

பயணத்தின் அடுத்தகட்டமாக அவினாசியில் இருந்து 72 கி.மீ தொலைவில் இருக்கும் உடுமலைப்பேட்டையை பல்லடம் வழியாக அடைந்து அங்கிருந்து மூணாறை நோக்கி பயணத்தை தொடருங்கள். உடுமலைபேட்டையில் இருந்து 86 கி.மீ தொலைவில் மூணார் அமைந்திருக்கிறது. இந்த தூரத்தில் 60 கி.மீ மேலாக மலைப்பாதையில் பயணிக்க வேண்டி இருக்கும். இங்கு கேரளா எல்லையை கடக்கும் போது காரில் சோதனை மேற்கொள்ளப்படும் என்பதால் மது உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதை தவிர்த்திடுங்கள்.

Photo: Rsrikanth05

மூணாறை நோக்கி:

மூணாறை நோக்கி:

கேரளா எல்லையை கடந்த பிறகு நாம் செல்லும் பாதையில் அற்புதமான காட்சிகளை நாம் கண்டு ரசிக்க முடியும். பச்சை பசேல் என தேயிலை தோட்டங்கள், அவற்றுக்கு நடுவே பாயும் சின்ன சின்ன அருவிகள், அற்புதமான காட்சிகளை வழங்கும் மலை முகடுகள், அசுத்தமான புகை காற்றையே சுவாசித்து பழகிய நமக்கு அங்கிருக்கும் தூய்மையான மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் காற்று என மூணாறை நோக்கிய பயணமே இனிமையான ஒரு அனுபவமாக அமையும்.

Photo:Bimal K C

காதலின் தேசம்! மூணார்:

காதலின் தேசம்! மூணார்:

மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் இந்தப்பெயர் வந்ததாம். சமீப காலங்களில் இந்தியாவின் முக்கிய தேனிலவு ஸ்தலமாகவும், குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ வார இறுதியை கொண்டாடவும் நல்லதொரு சுற்றுலாத்தலாமாக மூணார் புகழ் பெற்று வருகிறது. வாருங்கள் மூணாறில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன என்பதை தேர்ந்து கொள்வோம்.

Photo:Jishar ka

ஆனமுடி:

ஆனமுடி:

மலையேற்றம் செய்ய மூணாறை விட சிறந்த ஓரிடம் இருக்க முடியாது. இங்கு இரவிக்குலம் தேசிய பூங்காவில் இருக்கும் ஆன முடி தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமாகும். 2700 அடி உயரத்தில் இருக்கும் இந்த சிகரத்தில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று நண்பர்களுடன் சென்று குதுகளியுங்கள்.

Photo:Arunguy2002

லக்கம் அருவி

லக்கம் அருவி

மூணாரிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 38 கி.மீ தொலைவில் லக்கம் அருவி அமைந்திருக்கிறது.

Photo:Subramanian Kabilan

திரும்ப திரும்ப பேசுற நீ:

திரும்ப திரும்ப பேசுற நீ:

புகழ் பெற்ற இந்த வடிவேலு வசனம் உங்களுக்கு நியாபகம் வருகிறதா ? உங்களையும் அப்படி திரும்ப திரும்ப பேச வைக்கும் இடம் தான் இந்த எக்கோ பாய்ன்ட் எனப்படும் நாம் பேசுவதை எதிரொலிக்கும் இடம் மூணாறில் படகு சவாரி செய்யும் இடத்திற்கு அருகில் இருக்கிறது. நாம் சத்தமாக ஏதேனும் சொன்னால் அது மலைகளை தாண்டி பலமுறை எதிரொலிக்கிறது. இங்கு உங்கள் காதலன் பெயரையோ, காதலி பெயரையோ சொல்ல முற்பட்டு பின் 'சில்லுனு ஒரு காதல்' வடிவேலுவின் 'குருவம்மா' கதை ஆகிவிடப்போகிறது. பார்த்து பேசுங்கள்.

Photo:Ruben Joseph

டாப் ஸ்டேஷன்:

டாப் ஸ்டேஷன்:

டாப் ஸ்டேஷன் மூணாரிலிருந்து 41 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன் என்ற இடம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு இந்தியாவின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்கள் சில அமையப்பெற்றுள்ளன.

Photo:Bimal K C

ராஜமலா:

ராஜமலா:

மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது. தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இரவிக்குளம்-ராஜமலா வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அழிந்து வரும் இந்த வகை ஆடுகளை பார்ப்பதற்காகவே ராஜமலாவுக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் வேறு பல சுவாரசியமான அம்சங்களும் இப்பகுதியில் இருக்கவே செய்கின்றன. அதாவது நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம்.

Photo: Jiths

மூணாறை ரசிக்கலாம்:

மூணாறை ரசிக்கலாம்:

இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது. மேலும் தங்கி ஓய்வெடுத்து ரசிப்பதற்கேற்றவாறு இங்கு பல ரிசார்ட் விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

Photo: tornado_twister

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more