Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரின் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!!!

பெங்களூரின் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!!!

By

பெங்களூரிலிருந்து 61 கி.மீ தொலைவில், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தி ஹில்ஸ், பெங்களூர்வாசிகளின் விருப்பமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்க பிரபலமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் நந்தி ஹில்ஸ் பகுதிக்கு, வார விடுமுறை நாட்களில், அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெங்களூரிலிருந்து கிளம்பி எக்கச்சமான இளைஞர்கள் மோட்டார் பைக்குகளில் வந்து செல்கின்றனர்.

நந்தி ஹில்ஸை எப்படி அடைவது?

பெங்களூர் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

நந்தி ஹில்ஸின் சுற்றுலா அம்சங்கள்

நந்தி ஹில்ஸின் சுற்றுலா அம்சங்கள்

நந்தி ஹில்ஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக எண்ணற்ற சுவாரசியமான இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சோழர்களால் கட்டப்பட்ட யோக நந்தீஸ்வரர் ஆலயம், திப்புவின் வீழ்ச்சி, திப்புவின் அரண்மனை, நெல்லிக்காய் பசவண்ணா கோயில் ஆகியவை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

சுற்றுலாப் பகுதிகள்

படம் : Harsha K R

உச்சிக்கு செல்லும் படிகள்

உச்சிக்கு செல்லும் படிகள்

நந்தி ஹில்ஸின் உச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும் படிகள்.

படம் : Rambled musings

யோக நந்தீஸ்வரர் ஆலயம்

யோக நந்தீஸ்வரர் ஆலயம்

1000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் கட்டப்பட்ட யோக நந்தீஸ்வரர் ஆலயம்.

படம் : Sumeet Malhotra

பயணிகளின் கனவு!

பயணிகளின் கனவு!

ஒவ்வொரு பயண விரும்பிக்கும் இதைப்போன்ற ஒரு இடம் கனவாக இருக்கும்!

படம் : pulikken

நெல்லிக்காய் பசவண்ணா

நெல்லிக்காய் பசவண்ணா

நந்தி ஹில்ஸின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த நந்தியின் காரணமாகத்தான் நந்தி ஹில்ஸ் பகுதிக்கும், அது அமைந்துள்ள நந்தி கிராமத்துக்கும் அப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

படம் : Tinucherian

யோக நந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்

யோக நந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்

யோக நந்தீஸ்வரர் கோயிலில் அழகிய படிகளுடன் அமைந்துள்ள தெப்பக்குளம்.

படம் : Peter Rivera

நந்தி ஹில்ஸ் செல்லும் வழி

நந்தி ஹில்ஸ் செல்லும் வழி

நந்தி ஹில்ஸ் பகுதிக்கு மோட்டார் பைக் மற்றும் கார்களில் செல்லும் பயணிகள்.

படம் : Sean Ellis

சூர்யோதயம்

சூர்யோதயம்

நந்தி ஹில்ஸ் உச்சியிலிருந்து தெரியும் சூர்யோதயக் காட்சி.

படம் : Ashwin Kumar

கோயில் வளாகத்தில் கிரிக்கெட்

கோயில் வளாகத்தில் கிரிக்கெட்

யோக நந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடும் அர்ச்சகர்கள்.

படம் : Nagesh Kamath

திப்புவின் வீழ்ச்சி

திப்புவின் வீழ்ச்சி

நந்தி ஹில்ஸின் உச்சியில் உள்ள 600 மீட்டர் உயர செங்குத்தான பாறைதான் திப்புவின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குற்றவாளிகளை இந்தப் பாறையிலிருந்து கீழே தள்ளி விட்டு மரண தண்டனை கொடுக்கும் வழக்கம் திப்பு சுல்தான் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

படம் : Sean Ellis

நெல்லிக்காய் பசவண்ணா கோயில்

நெல்லிக்காய் பசவண்ணா கோயில்

நந்தி ஹில்ஸின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த நெல்லிக்காய் பசவண்ணா கோயில் 1300 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது.

படம் : Phil Whitehouse

சூரியக் கதிர்கள்!

சூரியக் கதிர்கள்!

மரங்களுக்கு நடுவே ஊடுருவிப் பாயும் சூரியக் கதிர்கள்!

படம் : Lijo Jose

நேரு நிலையம்

நேரு நிலையம்

ஜவஹர்லால் நேரு சிறிது காலம் இங்கு தங்கி இருந்ததால் நேரு நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

படம் : Vipul ji

சூரிய காந்தி தோட்டம்

சூரிய காந்தி தோட்டம்

நந்தி ஹில்ஸில் அமைந்துள்ள சூரிய காந்தி தோட்டம்.

படம் : Guiexpert

திப்பு சுல்தான் அரண்மனை

திப்பு சுல்தான் அரண்மனை

திப்பு சுல்தானின் கோடைகால வாசஸ்தலமாக இருந்த அரண்மனை.

படம் : Phil Whitehouse

திராட்சை தோட்டம்

திராட்சை தோட்டம்

நந்தி ஹில்ஸில் அமைந்துள்ள திராட்சை தோட்டம்.

படம் : Praveen

மலைச்சரிவு

மலைச்சரிவு

நந்தி ஹில்ஸின் செங்குத்தான மலைச்சரிவு.

படம் : Harsha K R

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

நந்தி கிராமத்திலிருந்து நந்தி ஹில்ஸ் பகுதிக்கு சைக்கிளில் செல்லும் முதியவர்.

படம் : Harsha K R

புகைப்படக்காரர்கள்

புகைப்படக்காரர்கள்

நந்தி ஹில்ஸ் பகுதிக்கு ஏராளமான புகைப்படக்காரர்கள் வருவதோடு, நந்தி ஹில்ஸ் வருபவர்களும் கேமரா இல்லாமல் வருவதில்லை.

படம் : Harsha K R

தேர்ச் சக்கரங்கள்

தேர்ச் சக்கரங்கள்

யோக நந்தீஸ்வரர் கோயில் சுற்றுப்புறத்தில் காணப்படும் தேர்ச் சக்கரங்கள்.

படம் : Lijo Jose

பைக் பயணிகள்

பைக் பயணிகள்

நந்தி ஹில்ஸின் உச்சியை அடைந்து, சூரிய உதயத்தை ரசித்து முடித்து, புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பைக் பயணிகள்.

படம் : Pratyush Tewari

உச்சியிலிருந்து...

உச்சியிலிருந்து...

நந்தி ஹில்ஸின் உச்சியிலிருந்து கிராமத்தின் தோற்றம்.

படம் : fakepunju

அதிகாலை பனிமூட்டம்

அதிகாலை பனிமூட்டம்

அதிகாலை பனிமூட்டத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்க நந்தி ஹில்ஸ் செல்லும் பயணிகள்.

படம் : Lijo Jose

விமானத்தின் பார்வை

விமானத்தின் பார்வை

விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட நந்தி ஹில்ஸின் புகைப்படம்.

படம் : Shyamal

கோயில் சிற்பங்கள்

கோயில் சிற்பங்கள்

யோக நந்தீஸ்வரர் கோயில் சுவற்றில் காணப்படும் சிற்பங்கள்.

படம் : Shyamal

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

சூரிய உதயத்துக்காக ஆர்வமாக காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Swaminathan8223

மேகக் கூட்டங்களுக்கு மத்தியில்

மேகக் கூட்டங்களுக்கு மத்தியில்

மேகக் கூட்டங்களுக்கு மத்தியிலும், பசுமையின் அரவணைப்பிலும் நந்தி ஹில்ஸ்!

படம் : kiran kumar

அந்தி நேரம்

அந்தி நேரம்

சூரியன் மறையும் பொழுதில் நந்தி ஹில்ஸிலிருந்து தெரியும் கிராமத்தின் தோற்றம்.

படம் : Soham Banerjee

திப்புவின் வீழ்ச்சியிலிருந்து...

திப்புவின் வீழ்ச்சியிலிருந்து...

திப்பு சுல்தான் காலத்தில் இங்கிருந்துதான் மரணதண்டனை கைதிகளை தள்ளிவிட்டு தண்டனையை நிறைவேற்றினார்களாம்!

படம் : Aviva West

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம்

நந்தி ஹில்ஸில் பலவிதமான பறவைகள் காணப்படுவதால் புகைப்படக்காரர்களையும், பறவைக் காதலர்களையும் இங்கு அதிகமாக பார்க்க முடியும்.

படம் : shrikant rao

நந்தி கிராமத்திலிருந்து....

நந்தி கிராமத்திலிருந்து....

நந்தி கிராமத்திலிருந்து நந்தி ஹில்ஸின் தோற்றம்.

படம் : Samuel Jacob

தாயும் சேயும்!

தாயும் சேயும்!

தாய் குரங்குடன் குட்டிக்குரங்கு.

படம் : Sachin

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

சூரிய உதயம் மட்டுமில்லை சூரிய அஸ்த்தமனம் கூட நந்தி ஹில்ஸில் பிரமாதமாக இருக்கும்.

படம் : Subharnab Majumdar

ஆமைப்பாறை

ஆமைப்பாறை

இந்தப் பாறையைப் பார்க்கும்போது ஆமை ஒன்று மலையேறுவது போலவே இருக்கிறதல்லவா?!

படம் : Eva

நந்தி ஹில்ஸை எப்படி அடைவது?

நந்தி ஹில்ஸை எப்படி அடைவது?

எப்படி அடைவது?

படம் : Jayaprakash Narayan MK

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X