Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர்ல இருந்து வேலூர் : ஒரே நாள் சுற்றுலா இது!

பெங்களூர்ல இருந்து வேலூர் : ஒரே நாள் சுற்றுலா இது!

பெங்களூருவிலிருந்து ஒரு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் சென்று அங்கு என்னவெல்லாம் காணலாம் என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம். வாருங்கள் நண்பர்களே. நான் வருண்.... உங்களோட வழிகாட்டி... பெங்களூரு அருகில

By Udhaya

பெங்களூருவிலிருந்து ஒரு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் சென்று அங்கு என்னவெல்லாம் காணலாம் என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம். வாருங்கள் நண்பர்களே. நான் வருண்.... உங்களோட வழிகாட்டி... பெங்களூரு அருகில் இருக்கும் நண்பர்கள் பலருக்கு வேலூரில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது சந்தேகமான ஒன்று. அவர்களுக்கு செல்ல பல இடங்கள் இருக்கிறது. இருந்தும் வேலூருக்கு பயணிக்க ஒரு தனிக் காரணமும் இருக்கிறது. அந்த காரணம் குறித்தும், வேலூரில் ஒரு நாளை எப்படி கழிப்பது என்பன குறித்தும் இந்த பகுதியில் காணவிருக்கிறோம். அதன்படியே காலை 9 மணிக்கு தொடங்கும் நமது பயணம் இரவு 9 மணிக்கு முடிவடையும். அதற்கான திட்டங்களும், பயண வழிகாட்டியும் இதோ....

பெங்களூரு | காலை 9 மணி | வேலூர் செல்கிறோம்

பெங்களூரு | காலை 9 மணி | வேலூர் செல்கிறோம்

பெங்களூரு பேருந்து நிலையத்திலிருந்து பயணித்தாலும் சரி, அல்லது ஓசூர் சாலையில் எங்கிருந்து பயணித்தாலும் சரி வேலூர் செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன.

பெங்களூரு மாநகரத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதி மக்கள் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்தும், தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மக்கள் ஓசூர் சாலை வழியாகவும் பயணித்தல் நேரத்தை மிச்சப்படுத்தும்.

இரு வழித்தடங்களும் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதிதான் என்றாலுமே, ஓசூர் வழி செல்வதே பலரது விருப்பமாகும். காலை 9 மணி என்பதால், ஓசூர் சாலையை தேர்ந்தெடுப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

பெங்களூரு - எலக்ட்ரானிக் சிட்டி - ஓசூர் - வாணியம்பாடி - ஆம்பூர் வழி வேலூரை அடைவது நம் நோக்கமாகும்.

வழியில் கிருஷ்ணகிரி கோட்டை மற்றும் ஆம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் சற்று நேரம் ஓய்வு எடுக்க திட்டம்.

வாங்க வேலூர் புறப்படலாம். இப்பதான் நினைவுக்கு வருது.. நம்ம பிரண்ட் சாராவையும் துணைக்கு கூப்பிட்டுட்டு போலாம்..

 சாராவுடன் சாலைப் பயணம்

சாராவுடன் சாலைப் பயணம்

சாரா ஒரு தூங்கு மூஞ்சி.. சாப்பாட்டு ராமி.. ஆனா கடவுள பாருங்க.. ஓர வஞ்சன... என்னதான் சாப்பிட்டாலும் அவளுக்கு ஒடம்பு போடவே போடாது. இப்பயும் அவ ஆம்பூர் பிரியாணி கேட்டானுதான் கூப்டவேண்டி கெடக்கு. சரி ஒரு கால் பண்ணி கூப்ட்ருவோம்.

வருண் - ஹலோ சாரா பேபி

சாரா - சொல்லுடா எரும

வருண் - எனக்கு தேவதான்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ..

சாரா - அதிகாலைல என்னடா பண்வாங்க.. தூங்கிட்டுதான் இருக்கேன்..

வருண் - அடிப் பாவி... மணி 9 ஆகப் போது.. இது அதிகாலையா.. இரு தண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்தறேன்..

சாரா - என்னதான்டா உன் பிரச்சன.. ஏன் இப்ப என்ன தூங்கவிடாம பண்ற...

வருண் - ஆம்பூர் போறேன் வரியா.. பிரியாணி சாப்பிட்டு வர்லாம்..

சாரா- அதான் நம்ம ஊர்லயே கிடைக்குதே.. இதுல ஆம்பூர் வேற போணுமா..

வருண் - நல்ல டிரிப்.. கிருஷ்ணகிரி கோட்டை, ஆம்பூர் பிரியாணி, வேலூர் அப்டியே ரிட்டன் நைட்டு 9 மணிக்கு. வரீயா இல்லியா..

சாரா - நீ வா கிளம்பி.. இங்க வர்றதுக்குள்ள ரெடியா இருப்பேன்.. ஆமா என்ன கலர் டிரெஸ் போட்டுக்க.. நீயே சொல்லு

வருண் - சர்த்தான்.. நா தனியாவே போய்க்குறேன்...

Ed Seymour

 ஓசூர் நோக்கி பயணம் | காலை 9 மணி | மடிவாலா

ஓசூர் நோக்கி பயணம் | காலை 9 மணி | மடிவாலா


ஹாய் டூட்ஸ்... பெங்களூர் மாநகரத்த கடந்து இப்ப வெளிய போய்ட்டுருக்கோம். இப்படி ஒரு பைக் டிரிப் நல்லா இருக்கு.. அதுலயும் மடிவாலா வரைக்கும் அவ்ளோவா டிராபிக் இல்ல.. சரி சாராவ கூட்டிட்டு கிளம்புவோம்.

40 நிமிசத்துல ஓசூர் போய்டலாம்.. எப்படி பாத்தாலும் 10 மணிக்கு நம்ம ஓசூர் ரீச் பண்ணிடுவோம்.

ஓசூர் - வேலூர் | பயண நேரம் | தூரம்

ஓசூரிலிருந்து வேலூர் 174 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இந்த பயணத்துக்கு ஆகும் நேரம் 2.30 மணி நேரம் ஆனால் இடையில் பத்து பத்து நிமிடங்கள் இடைவேளையாகவும், கிருஷ்ணகிரி கோட்டை பார்ப்பதற்கும் செலவாகும்.

Ashwin Kumar

 கிருஷ்ணகிரி கோட்டை நோக்கிய பயணம் | நேரம் காலை 10.30 மணி

கிருஷ்ணகிரி கோட்டை நோக்கிய பயணம் | நேரம் காலை 10.30 மணி

சாரா இங்க பாத்தியா மொரன பல்லி

அடேய் அது பல்லி இல்ல பள்ளி, மொரனபள்ளி. என்னதான் தமிழ் பையனா இருந்தாலும் தமிழ்ல சரியா பேசத் தெர்லயேடா..

சரி சரி... இப்ப நாம போர வழியில சூளகிரி, போலுபள்ளி தாண்டி, கிருஷ்ணகிரி கோட்டை வரும். அங்க கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணிட்டு கிளம்பலாம். சரியா..

கிருஷ்ணகிரி கோட்டையா? அங்க என்ன இருக்குடா?

இரு இரு.. உனக்கு புரியுற மாதிரி சொல்றேன்.. இது பத்தி விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னா

கிருஷ்ணகிரிக் கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும். இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வுப் பகுதியின் மேலாண்மையின் கீழ் உள்ளது.

அப்றம்... இது விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயாரல கட்டப்பட்ட கோட்டை. இதனாலதான் இந்த ஊருக்கே கிருஷ்ணகிரினு பேரு வந்துச்சி.. இத பத்தி நிறைய வரலாறுலாம் இருக்கு.. அத அப்றமா தெரிஞ்சிக்கலாம்.

இன்னும் தெரிந்துகொள்ள கிளிக்குங்கள் https://tamil.nativeplanet.com/krishnagiri/attractions

KARTY JazZ

 கோட்டையில் ஒரு செல்பி | நேரம் 11 மணி

கோட்டையில் ஒரு செல்பி | நேரம் 11 மணி

கிருஷ்ணகிரி சுங்கச் சாவடிய ஒட்டி ஒரு அணுகு சாலை வரும் அதான் சர்வீஸ் ரோடு. அதுல இடது பக்கமா திரும்பி திரும்ப ஒரு வலப்புறத் திருப்பமும், அடுத்த முதல்ல வர்ற இடது திருப்பத்துல திரும்பி கொஞ்ச நேரம் பயணிச்சா கோட்டையை அடையலாம்.

நாம இப்ப கோட்டைக்கு வந்துட்டோம். எப்டி சாரா.. இந்த இடம் உனக்கு புடிச்சிருக்கா... ?

சாரா - அடடே. நல்லாதான்டா இருக்கு. வாவ்.. உன் மொபைல் குடு... ஒரு செல்பி போட்டுவிடுவோம்..

வருண் - வேணாம்.. நா உன்ன எடுக்குறேன்.. அதோ அந்த கோபுரம் பக்கத்துல போயி நில்லு பாக்லாம்.

கல் மண்டபம் நல்லா இருக்கே.. இங்க பாருடா தாரத்துல மலையெல்லாம் தெரியுது..

சரி சரி.. வா சாரா கிளம்புவோம். நேரம் இல்ல.. .

பழைய பேட்டை சாலையில புகுந்து நேரா ஒரு ரெண்டு கிமீ பயணிச்சா நாம மெயின்ரோட்ட அடையலாம் வருண்.. கூகுள் மேப் அப்படித்தான் சொல்லுது.

Abhishek.Digha

 பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை | ஆம்பூர் நோக்கி பயணம் | நண்பகல் 12 மணி

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை | ஆம்பூர் நோக்கி பயணம் | நண்பகல் 12 மணி


சாரா - டேய் வருண் பசிக்குதுடா..

வருண் - இப்பதான ஸ்நாக்ஸ் எல்லாத்தையும் காலி பண்ண.. இப்ப என்ன வாங்குறது.. கொஞ்ச நேரம் அமைதியா வா..

சாரா - பக்கத்துல வாணியம்பாடி இருக்குடா.. வேகமா போயி எதுனா ஹோட்டல்ல சாப்பிடலாமா?

வருண் - அமைதியா வா சாரா.. பத்து பதினஞ்சி நிமிசத்துல ஆம்பூர் போயிடலாம். அங்க பிரியாணியே கிடைக்கும்..

சாரா - எல்லா பிரியாணியும் ஒரே மாதிரிதான் இருக்கு.. இதுல ஆம்பூர்ல மட்டும் என்ன ஸ்பெஷலாம்...

வருண் - ஆற்காடு நவாப் காலத்துல இருந்து தயாரிக்குற பிரியாணி இது.. ஹைதராபாதி பிரியாணிய சாப்பிட ஹைதராபாத் போனியே.. இங்க சாப்பிட்டா என்னவாம்...

சாரா - பசிக்குதே.. அதான்..

வருண் - ஒரு பத்து நிமிசம்தான் பொறுத்துக்கோப்பா... இங்க பாரு நாம வாணியம்பாடி போகத் தேவையே இல்ல.. இந்த ரோடு நேரா விண்ணமங்கலம் னு ஒரு இடத்துக்கு போகும். அத தாண்டி சாணான்குப்பம். அடுத்த ஆம்பூர்தான்.. போய் சேர கரக்ட்டா ஒரு மணி ஆகும்.


ஆம்பூர் பிரியாணி

ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணி ஆம்பூர் பிரியாணியாகும். அசைவ உணவான இந்தப் பிரியாணி உணவில் கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி அல்லது மாட்டுக் கறி என்று சேர்க்கப்படும் இறைச்சிக்கேற்ப பிரியாணியின் பெயரும் மாறுபடுகிறது. ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

வருண் - இதோ வந்துட்டோம்ல ஆம்பூருக்கு... இந்த கடையில போயி சாப்பிடலாம்.. அப்படியே கொஞ்ச நேரம் ரெஸ்ட்... 3 மணிக்கு டான்னு கிளம்பிடணும் சரியா..

சாரா - சரி சரி.. அப்போ நா நிறையவே சாப்பிடுவேனே..

வேலூர் கோட்டை | 4 மணி | வரலாறு அறிவோம்

வேலூர் கோட்டை | 4 மணி | வரலாறு அறிவோம்


வருண் - ஆம்பூர்ல இருந்து வேலூர் கோட்டை 53 கிமீ தூரம். எப்படியும் ஒரு மணி நேரம் ஆய்டும்.. வா கிளம்பலாம்...

சாரா - டேய் வருண்.. பசிக்குதுடா...

வருண் - சாப்பிட்டு ஒரு மணி நேரம்தான் ஆச்சி.. அதுக்குள்ளயா மா.. சரி இந்தா இந்தா சிப்ஸ் பாக்கெட்... சாப்பிடு..

சாரா - இஇஇஇ

ஹய்யா... கரக்ட்டா நாலு மணிக்கு வேலூர்க்கே வந்துட்டோம்ல வருண்..

ஆமா... சாரா.. வண்டி ஓட்டுனது நான்ல.. என் டைமிங் மிஸ்ஸே ஆகாது..

சரி சரி வருண்.. இந்த வேலூர் கோட்டை பத்தி நா கொஞ்சம் படிச்சிருக்கேன்.. நீயும் சொல்லேன் தெரிஞ்சிக்குறேன்...

வேலூர் கோட்டை

வேலூர் நகரத்தின் அடையாளமான வேலூர் கோட்டை வேலூர் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே இந்த வரலாற்றுச்சின்னம் பெருமையுடன் வீற்றிருக்கிறது. இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் கீழ் இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது.

ஹே வருண்... இந்த கோட்டைக்குள்ளயேதான் ஜலகண்டேஷ்வரர் கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், முத்து மண்டபம், புகழ் பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இருக்கு.. கரக்ட்டா..

ஆமா சாரா.. அப்றம் இந்த கோட்டையோட வெளிச்சுவரானது பிரம்மாண்ட கிரானைட் பாறை கட்டமைக்கப்பட்டிருப்பதோடு அதனை ஒட்டியே அகலமான அகழி ஒன்றும் காணப்படுகிறது. சூர்யகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்த அகழிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. திப்பு மஹால் எனும் பிரசித்தமான அரண்மனை இந்த கோட்டைக்குள் அமைந்துள்ளது.

உனக்கு ஒரு விசயம் தெரியுமா சாரா.. திப்பு சுல்தான் மன்னர் தனது குடும்பத்தாருடன் இந்த அரண்மனையில் வசிச்சதா சொல்லப்படுது. ஆங்கிலேயர் ஆட்சியில் பல ராஜவம்ச அரசியல் கைதிகளை இந்த அரண்மனையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். கண்டி மன்னர், விக்கிரம ராஜசிங்கர் மற்றும் திப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆகியோர் இங்கு அடைக்கப்பட்டிருந்துள்ளனர். சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே தேசிய வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சுற்றுலா அம்சமாக இந்த வேலூர் கோட்டை வீற்றிருக்கிறது.

ஹப்பா.. இவ்ளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்கியே வருண்.. இதெல்லாம் எங்க புடிக்குற...

சாரா.. மறந்துட்டியா.. இதோ இந்த நேட்டிவ் பிளானட் சைட்ல எல்லா இடத்தோட வரலாறு, எப்படி செல்றது, சுற்றுலா அம்சங்கள்னு எல்லாமே இருக்கு.. அப்றம் ரயில், விமானம் கூட புக் பண்ணிக்கலாம். இந்த பக்கத்துல மேல பெல் ஐகான் ஒன்னு இருக்கு.. அத கிளிக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கிட்டோம்னு வை.. எல்லா தகவலும் நம்ம ஸ்கிரீன தேடி வரும்.

வருண்.. அப்ப நானும் இத சப்ஸ்கிரைப் பண்ணிக்குறேன்.... என்ன பிரண்ட்ஸ் நீங்களும் பண்ணிக்குறீங்களா..?

Samuelrajkumar

 பயணம் முடிந்தது

பயணம் முடிந்தது


வருண்.. இங்க இருந்து சென்னை எப்படி போறதுடா.. சென்னைக்கு போகலாம்னு தோணிச்சி.. எப்டி நீயும் வரியா?

அட.. நா இருக்க பயமேன்.. வேலூர்ல இருந்து சென்னை 3 மணிநேரம்தான்.. டிராபிக்ல புகுந்து போய்டலாம்.. ஆமா.. சென்னையில என்ன வேலை.. ?

சாரா - ஹே.. நா என் கஸின் தன்யாவ பாக்க போறேன்.. அவ சென்னையில ரூம் எடுத்து தங்கியிருக்கா...

வருண் - தன்யாவா.. பாக்க எப்டி இருப்பா.. அவ போட்டோ காட்டு..

சாரா - ச்சி அலயாது.. தகரடப்பா.. வா நைட்டு நேர்லயே பாக்கலாம்..

Read more about: travel vellore bangalore chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X