Search
  • Follow NativePlanet
Share
» »ராமனுக்கு குழந்தை பிறந்த இடம் எது தெரியுமா?

ராமனுக்கு குழந்தை பிறந்த இடம் எது தெரியுமா?

ராமனுக்கு குழந்தை பிறந்த இடம் எது தெரியுமா?

By Udhay

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பரான் மாவட்டம் 1960ம் ஆண்டு ஏப்ரம் 10ம் தேதி கோட்டா மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தைச் சுற்றி சகவன், கேர், சலன் மற்றும் கர்க்சரி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன.காலிசிந்த் ஆறு இந்த மாவட்டத்தின் வழியே பாய்கிறது. 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் சோலங்கி ராஜபுத்திர வம்சத்தினரால் இப்பகுதி ஆளப்பட்டுள்ளது.

பிரசித்தமான சுற்றுலாத்தலங்கள்

பிரசித்தமான சுற்றுலாத்தலங்கள்

ராமாயணத்தில் பரான் நாடெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பல சுற்றுலா அம்சங்களை பரான் மாவட்டம் கொண்டுள்ளது. சீதாபரி, ககோனி, பிலாஸ்கர் மற்றும் ஷஹாபாத் கோட்டை போன்றவை இங்குள்ள சில பிரசித்தமான சுற்றுலாத்தலங்கள் ஆகும். இவற்றில் சீதாபாரி ஸ்தலமானது வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியவத்தை கொண்டுள்ளது.

சீதைக்கு குழந்தை பிறந்த இடம்

சீதைக்கு குழந்தை பிறந்த இடம்

இந்து புராண ஐதீகத்தின்படி ராமபிரானின் மனைவியான சீதாதேவி தன் மகன்களான லவா மற்றும் குசாவை இங்கு பெற்றெடுத்ததாக நம்பப்படுகிறது. அயோத்தியை விட்டு வெளியேறி இங்கு தன் மகன்களுடன் வசித்ததாகவும் சொல்லப்படுகிறது. சீதாதேவிக்கான கோயில் ஒன்று இங்கு உள்ளது. மேலும், பல தீர்த்த குண்டங்களையும் பயணிகள் இங்கு பார்க்கலாம். சீதாபரி மேளா எனும் பிரசித்தமான திருவிழா இங்கு வருடாவருடம் கொண்டாடப்படுகிறது.

ஆன்மீக தலங்கள்

ஆன்மீக தலங்கள்

சில முக்கியமான கோயில்கள் பரான் நகரில் உள்ள சில ஆன்மிக திருத்தலங்களாக பந்த் தேவ்ரா கோயில், பிராம்மணி மாதாஜி கோயில் மற்றும் மணிஹர மஹாதேவ் மந்திர் போன்ற கோயில்களைக் குறிப்பிடலாம். மேலும் பரான் மாவட்டத்தில் உள்ள அத்ரு தாலுக்காவில் கர்காச் கோயில்களின் சிதிலங்களை பார்க்கலாம். இவை 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.

ராஜஸ்தானின் கஜுராஹோ

ராஜஸ்தானின் கஜுராஹோ

பந்த் தேவ்ரா கோயில் பரான் பகுதியிலுள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இது ‘ராஜஸ்தானின் கஜுராஹோ' என்றே அழைக்கப்படுகிறது. பரானிலிருந்து 40 கி.மீ தூரத்தில் ராம்கர் மலையின் மீது இந்தக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக்கோயில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதே மலையில் கிஸ்னாய் மற்றும் அன்னபூர்ணா தேவி கோயில்களும் அமைந்துள்ளன.

பயண வசதிகள்

பயண வசதிகள்


பரான் சுற்றுலா ஸ்தலத்திற்கு நாட்டில் பல முக்கிய பகுதிகளிலிருந்து விமானம், ரயில் மற்றும் சாலை வசதிகள் உள்ளன. அருகிலுள்ள ஜெய்பூர் நகரத்தில் விமான நிலையமும், பரான் நகரத்தில் ரயில் நிலையமும் அமைந்துள்ளன.அருகிலுள்ள முக்கிய நகரங்களான அஜ்மீர், பிக்கானேர், ஜெய்பூர், டெல்லி, கோட்டா மற்றும் குவாலியரிலிருந்து பரான் வருவதற்கு பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

 சுற்றுலாவுக்கு உகந்த பருவம்

சுற்றுலாவுக்கு உகந்த பருவம்

பரான் மாவட்டத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் மாதத்துக்குட்பட்ட காலத்தில் இங்கு வருகை தரலாம். இக்காலத்தில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கேற்ற குளுமையான பருவநிலை நிலவுகிறது.

All photos taken from

PC: Wiki

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X