Search
  • Follow NativePlanet
Share
» »கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா?

கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா?

இமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்

By Udhaya

இமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கடற்கரை பிலிபிட்டின் முக்கியமான சுற்றுலா தளமாகும். சூரிய மறைவிற்கு பெயர்போன இவ்விடத்தின் வனப்பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருக்கிறது. வாருங்கள் இந்த இடத்துக்கு போகலாம். அதற்கு முன் செல்லும் வழியில் எண்ணற்ற இடங்களைப் பார்த்துவிட்டு வரலாம்

எங்குள்ளது

எங்குள்ளது

உத்தரகண்ட் மாநில எல்லையில் அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அருகில் காணவேண்டிய இடங்கள்

அருகில் காணவேண்டிய இடங்கள்


உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் வழியாக ஓடும் இந்தியாவின் புனிதமான நதிகளில் ஒன்றான கோம்தி நதி, பிலிபிட் வழியாக ஓடும் போது வஷிஷ்டரின் மகள் என அறியப்படுகிறது.

இந்துக்களுக்கு புனிதமாக கருதப்படும் கோமத் தால் வருடம் முழுதும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது நீரில் குளிக்க பக்தர்கள் வருகை தருகிறார்கள். குருஷேத்ர நதியில் குளிப்பதைப் போன்ற புண்ணியத்தை கோமத் தால் நதி கொடுப்பதாக நம்புகிறார்கள்.

Makks2010

சாத்தவி பத்ஷாஹி குருத்வாரா

சாத்தவி பத்ஷாஹி குருத்வாரா


ஆறாவது சீக்கிய குருவுக்கு இந்த குருத்வாரா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்குருத்வாராவிற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் மரியாதை செலுத்தவும், ஆசீர்வாதம் பெறவும் வருகிறார்கள். நானக்மடத்திற்கு செல்லும் வழியில் குரு கோவிந்த் சிங் இங்கு ஓய்வெடுத்ததாக நம்புகிறார்கள்.

ராஜா வேணு கா திலா

ராஜா வேணு கா திலா

பிலிபிட்டின் புரண்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராஜா வேணு கா திலாவின் மிச்சங்கள். மிச்சங்கள் தான் எனினும் ராஜா வேணுவின் ஆட்சியின் பெருமைகளை பறைசாற்றும் வண்ணம் உள்ளது.

கெளரி ஷங்கர் கோவில்

கெளரி ஷங்கர் கோவில்

காக்ரா நதியின் கரையில் உள்ள 450ஆண்டுகள் பழமையாக இந்த கோவில் சிவனுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புண்ணியஸ்தலமான இக்கோவிலுக்கு பண்டிட் கர் பிரசாத் உள்ளிட்ட பல இந்து சந்நியாசிகள் வருகை தந்திருக்கிறார்கள். இரண்டு மிகப்பெரிய வாயிற்கதவுகள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ளன.இவ்வாயில்கள் 18ஆம் நூற்றாண்டில் ஹஃபிஸ் ரஹ்மத் கான் என்பவரால் கட்டப்பட்டது.

 அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர்

சிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அனுமார், பைரவர் ஆகிய கடவுள் சிலைகளும் இங்கு உள்ளன. வாயில், மண்டபம், கருவறை என பல கட்டமைப்பு ஆச்சரியங்களும் இங்கு உள்ளன.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் பாதுகாக்கப்பட்ட தளமாக இக்கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X