Search
  • Follow NativePlanet
Share
» »நவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்?

நவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்?

நவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்?

By Bala Karthik

வருடத்தின் அழகிய மாதங்களுள் ஒன்றான நவம்பர் மாதம் - இனிமையான கால நிலையைக்கொண்டு, பயணத்துக்கு ஏற்ற மகிழ்வான மாதமாகவும் அமைகிறது. பருவமழையானது நம்முடைய பயணத் திட்டத்தை முழுவதுமாக மூழ்கடிக்கவில்லை என்றாலும், குளிர்க்காலமானது வியர்வை அற்று நம் மீது பார்வையையும் வீசுகிறது. வருடந்தோரும் இம்மாதத்தில் பல பகுதிகளும் வண்ணமயமாக கலாச்சார விழாக்கோலம் பூண்டுவதும் வழக்கமாகிறது.

ஓய்வுக்கான மாதமாக நவம்பர் மாதம் அமைகிறது. கால நிலை என வரும்போது பயணத்தின் மூலமாகவும் விடுமுறையில் உற்சாகம் பொங்க நம்மை அவை பெரிதும் ஈர்க்கிறது. நாட்டின் வடக்கு பகுதியானது மிகுந்த கோடைக்கால வெப்பத்திற்கு இடைவேளை தந்துவிட, கிழக்கு பகுதியானது பருவமழைக்காலத்திற்கு குட்பை சொல்கிறது. அதே போல் இணைக்கோடுகளாக தெற்கு மற்றும் மேற்கு புறமானது நாட்டிலிருக்க, அது நம்மை குளுகுளுவென வைத்துக்கொள்வதோடு, சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்க காத்திருக்கிறது.

இனிமையான காலநிலையால், உலகம் முழுவதுமுள்ள பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்களின் வருகையை இந்த நவம்பர் மாதம் தந்திட, நாடு முழுவதும் கூட்டம் வழிந்தோடுகிறது. அதனால், ஒரு சில சிறந்த இலக்குகளை நாம் பார்ப்பதோடு, இந்த அழகிய மாதத்திலும் வந்து மகிழலாமே.

போர்ட் பிளேர்:

போர்ட் பிளேர்:


அழகிய அந்தமான் மற்றும் நிகோபர் தீவின் தலைநகரம் தான் இந்த போர்ட் பிளேர். இந்த நகரமானது வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக; நவம்பர் மாதத்தில் நாம் காண வேண்டிய அழகிய இடங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. இதனை கடந்து பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளுமென ஸ்னோர்கெல்லிங்க், ஸ்கூபா டைவிங்க் என பலவுமென கடல் கப்பல் பயணமும் காணப்படுகிறது.

இந்த நகரமானது அழகிய பல தீவுக்கு வீடாக விளங்க, இவற்றை நம்மால் ஒரு நாளில் கண்டுவிடவும் முடியும் என்பதால்; இந்த தீவை நாம் ஆராய்வதோடு, இந்த மகிழ்ச்சி தரக்கூடிய தீவின் மூலம் பலவற்றையும் கற்றுக்கொள்ளவும் முடிகிறது.

Official site

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:


தென்னிந்தியாவின் அழகான யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரியாக, இங்கே காணப்படும் நேர்த்தியான கடற்கரையும், கடந்து வந்த காலத்தின் சிறப்பம்சத்தையும் கொண்டிருக்கிறது. நாட்டின் பிரெஞ்ச் காலனிகளுள் ஒன்றாக இது இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த பின்பு பிரெஞ்ச் இவ்விடத்தை விட்டு சென்றுவிட, அவர்களது ஆதிக்கமும் ஒளியும் இந்த கடற்கரை நகரத்தின் மூலை முடுக்குகளில் காணப்பட்டும் வருகிறது.

இதனை "பாண்டி" என அழைக்க, இவ்விடமானது தனித்தன்மைமிக்க கண்கவர் பாரம்பரியத்துடன் இணைந்த ஆன்மீகத்தையும் கொண்டிருக்கிறது. நீங்கள் ப்ரான்ஸை காண ஆசைக்கொண்டு போக முடியவில்லை என்றால், இந்த கடற்கரை நகரத்துக்கு செல்வதன் மூலம் உங்களுடைய விடுமுறையை சிறந்த முறையில் கழிப்பதோடு, உங்களுடைய பாக்கெட் கருகுவதையும் தவிர்த்து மலிவாக செலவு செய்திடலாம்.

Official site

சோன்பூர்:

சோன்பூர்:

தாலாட்டி தூங்க வைக்கும் மகிழ்வளிக்கும் நகரமான சோன்பூர், நவம்பர் மாதத்தில் நசுக்கப்பட்ட உங்கள் அன்றாட வாழ்வை சரி செய்ய உதவுகிறது. இம்மாதத்தில், இந்த நகரமானது சோன்பூர் கால்நடை விழாவை கொண்டிருக்க, அது கண்கொள்ளா காட்சியாகவும், அனுபவமாகவும் நம் வாழ்க்கைக்கு அமையக்கூடும்.

இவ்விழாவானது முழு நிலவு நாளில் காணப்பட, அதனை ஹரிஹர் க்ஷேத்ர மேளா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விழாவில், பண்ணை விலங்குகள், கால்நடைகள் வாங்க, விற்கப்படுகிறது. இந்த பண்ணை விலங்குகளை கடந்து, இங்கே நம்மால் யானை, குதிரை, ஒட்டகம், நாய், மட்டக்குதிரை என பல விலங்கினத்தையும் பார்க்கமுடிகிறது. நம்முடைய விடுமுறையானது வித்தியாசமான அனுபவத்தை தர, சோன்பூர் நமக்கு பெரிதும் உதவுகிறது.

PC: Official Site

பூஜ்:

பூஜ்:

ஓர் குறிப்பிட்ட அழகை கொண்டிருக்கும் பூஜ் என்னும் சிறிய நகரம், பெரும் அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்த்திடுகிறது. ரான் ஆஃ கட்சின் மிக அருகாமையில் காணப்படும் பூஜ், உயரிய நம்பிக்கையை தரும் ரான் உட்சவத்தை கொண்டு நம் கால்களுக்கு ஓய்வையும் தருகிறது.

இந்த ரான் உட்சவமானது நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட, குஜராத்தின் கலாச்சார பாகுபாட்டையும் இது பிரதிபலிக்கிறது. இந்த வருடம், இவ்விழாவானது நவம்பர் 1ஆம் தேதி ஏற்கனவே தொடங்கிட, 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி 20 தேதி வரை நடக்குமெனவும் தெரியவருகிறது.

PC: Rahul Zota

ஜெய்சால்மர்:

ஜெய்சால்மர்:

தங்க நகரம் என அழைக்கப்படும் ஜெய்சால்மர், நவம்பர் மாத விடுமுறையில் நாம் செல்ல வேண்டிய சிறந்த இடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்விடமானது அதீத வரலாற்றையும், அழகிய கலாச்சாரத்தையும், கட்டிப்போடும் கட்டிடக்கலையையும் கொண்டிருக்க, இந்த நகரத்தில் தார் பாலைவனமும் தன் பாதச்சுவடுகளை புகழ் சேர்க்க பதிக்கிறது.

இந்த நேரத்தில் இப்பாலைவனமானது முக்கியத்துவம் கொண்டு விளங்க, இந்த நகரத்தை காண சிறந்த நேரங்களுள் ஒன்றாக அமைவதோடு, இத்தெருவில் நாம் நடந்து செல்ல, எண்ணற்ற உள்ளூர் சந்தைகளையும், ராஜஸ்தானி உணவுகளின் சுவையூட்டும் ருசியிலும் நம் நாவானது நல்புறம் சுழற்றவும் செய்கிறது.

PC: Official Site

 கூர்க்:

கூர்க்:


காபி மற்றும் வாசனை தோட்டங்களுக்கு பெயர்பெற்ற இடமான கூர்க், நாட்டில் காணப்படும் சிறந்த தேனிலவு இலக்குகளுள் ஒன்றாகவும் குளிர்காலத்தில் காணப்படுகிறது. இவ்விடத்தை குடகு எனவும் அழைக்க, கர்நாடக மாநிலத்தின் மிக அழகான மலைப்பகுதிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. இதனை இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்க, கூர்க்கானது இயற்கை அழகையும், சுவையூட்டும் உணவையும், ஆலயத்தையும், பாரம்பரிய அமைப்பையும் என பலவற்றையும் கொண்டிருக்க; இவை அனைத்தும் அவ்விடத்தின் பால் காதலை வெளிப்படுத்தவும் நம் மனதை தூண்டுகிறது.

PC: Rajeev Rajagopalan

ஹம்பி:

ஹம்பி:


புகழ்மிக்க விஜயநகர அரசரின் அற்புதமான நினைவூட்டலாக ஹம்பி காணப்பட, வரலாற்று நினைவுகளை தாங்கிக்கொண்டு உன்னதமான சொர்க்கமாகவும் விளங்குகிறது. அற்புதமான கட்டிடக்கலை இடிபாடுகளில் காணப்பட, ராஜக்காலத்து கூடாரங்களும், கொல்லைப்புறங்களும், ராஜ நடைமேடைகளும், என பல அமைப்புகளும் காணப்பட, வளமான, புகழ்மிக்க விஜய நகர தலைநகரத்தையும் கொண்டிருக்கிறது. விலைமதிப்பில்லா கற்களும் காணப்பட, அவை சந்தைகளின் மளிகை பொருட்களாக விற்கவும்படுகிறது.

ஆலயங்களின் கோபுரமும், என பசுமை நிலத்தால் இந்த ஹம்பி சூழ்ந்து காணப்பட, பனை மரங்களும், என வாழைத்தோட்டங்களும் முடிவற்ற நிலையில் காணப்படுவதோடு மேலும் அழகை இவ்விடத்திற்கு சேர்க்கிறது.

PC: Ram Nagesh Thota

வாரனாசி:

வாரனாசி:

பழமையான நகரமாக கருதப்படும் வாரனாசி, நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலேயே தொன்மையான நகரமாகவும் விளங்குகிறது. இவ்விடமானது சுற்றுலா பயணிகளின் பெரும் திரளுடன் காணப்பட, இங்கே கங்கை நதியும், பழங்காலத்து ஆலயங்களும், ஆசிரமங்களும், தொடர்ச்சிகளும் என பலவும் காணப்படுகிறது.

இந்த நகரத்திற்கு பலரும் வர, மதசார்புடைய மதிப்பின் பால் அவை அமைகிறது. இவ்விடமானது புனித யாத்ரீக இலக்குகளுள் ஒன்றாக கருதப்பட, அதுவும் இந்து மத பின்பற்றலாகவும் அமைகிறது.

மிகவும் வண்ணமயமான, துடிப்பான நிகழ்வாக வாரனாசி அமைய, இதனை கங்கை மஹாஉட்சவம் அல்லது தேவ் தீபாவளி எனவும் நவம்பர் மாதத்தில் அழைக்கப்படுகிறது. இந்த விழாவின் ஒரு அங்கமாக, துடிப்பான கலாச்சார நிகழ்வுகளும் நடந்தேறிட, இந்த விழாவின் கடைசி நாளில் கங்கை நதி முழுவதும் விளக்குகளும் மிதந்த வண்ணம் ஒளியூட்டுகிறது. அந்த விளக்கானது நீரில் மிதக்க, அது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாகவும் அமைகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X