Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: பெங்களுரு - ஜோக் அருவி - கோகர்ணா

வானமே எல்லை: பெங்களுரு - ஜோக் அருவி - கோகர்ணா

வழக்கமாக புத்தாண்டை கொண்டாட கோவா கடற்கரைகள், கேரளா, முணார் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். உற்சாகம் பொங்கும் கொண்டாட்டங்கள், பீச் பார்டிகள், கேக் வெட்டி பட்டாசு வெடித்து என புத்தாண்டை நாம் கொண்டாடி வருகிறோம். இந்தவருடம் புதுமையாக எங்கேனும் 2015 புத்தாண்டை கொண்டாட விரும்புகிறீர்களா?. ஆம், என்றால் இன்னும் அதிகம் பிரபலமாகாத, அதேசமயம் அற்புதமான கடற்கரையையும், கொண்டாடுவதற்கு தகுந்த இடமாக இருக்கும் கோகர்ணா கடற்க்கரை தான் இந்த வருட புத்தாண்டிற்கு நீங்கள் செல்லவேண்டிய இடமாகும். வாருங்கள், பெங்களுருவில் இருந்து கிளம்பி ஷிமோகா வழியாக ஜோக் அருவியை அடைந்து அங்கிருந்து ஆன்மிகம் மற்றும் கொண்டாட்டங்களின் அதிசய கலவையாக இருக்கும் கோகர்ணாவிற்கு ஒரு கொண்டாட்டப்பயணம் போய் வரலாம்.

ஹோட்டல் புக்கிங்கில் 50% வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

பெங்களுரு - கோகர்ணா:

பெங்களுரு - கோகர்ணா:

பெங்களுருவில் இருந்து கோகர்ணா ஏறத்தாழ 500 கி.மீ தொலைவில் உள்ளது. அருமையான கடற்கரையும், அதி முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயிலும் உள்ள இந்த இடத்தை அடைய குறைந்தது 9-10 மணி நேரம் வரை ஆகும்.

நாம் பெங்களுருவில் இருந்து கிளம்பி சன்னராயபட்டனா, ஷிவமோகா, சாகர், ஜோக் அருவி, ஹன்நோவர் வழியாக கோகர்ணாவை அடையவிருக்கிறோம். கனவுகளை நோக்கிய பயணத்திற்கு வானமே எல்லை.

பெங்களுரு - சன்னராயபட்டனா :

பெங்களுரு - சன்னராயபட்டனா :

பயணத்தின் முதல் கட்டமாக பெங்களுருவில் இருந்து 146 கி.மீ தொலைவில் இருக்கும் சன்னராயபட்டனா என்ற நகரத்தை நோக்கி செல்லவிருக்கிறோம் . வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரத்தில் தான் உலகத்திலேயே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக உயரமான சிலையான பாஹுபலி சிலை அமைந்திருக்கிறது.

Photo:Motographer

பாஹுபலி சிலை:

பாஹுபலி சிலை:

இந்தியாவின் நவீன கால அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பாஹுபலி சிலையை கோகர்ணா செல்லும் வழியில் நிச்சயம் ஒருமுறை சென்று பாருங்கள். சன்னராயபட்டனாவில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள ஷ்ராவனபெலகோலா இந்த இடம் அமைந்திருக்கிறது.

Photo:Abhishek Jain

சன்னராயபட்டனா - ஷிவமோகா ( ஷிமோகா):

சன்னராயபட்டனா - ஷிவமோகா ( ஷிமோகா):

சன்னராயபட்டனாவில் இருந்து 160 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஷிவமோகா. ஷிமோகா என பரவலாக அறியப்படும் இந்த நகரம் துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சிவப்பா நாயக்கர் அரண்மனை, கஜனுர் அணை போன்றவை இங்கிருக்கும் முக்கிய சுற்றுலாதலங்கலாகும்.

துங்கா நதிPhoto: Ashwatham

சன்னராயபட்டனா - ஷிவமோகா ( ஷிமோகா):

சன்னராயபட்டனா - ஷிவமோகா ( ஷிமோகா):

ஷிமோகவை அடைவதற்கு 20 கி.மீ முன் அமைந்திருக்கிறது பாத்ராவதி நகரம். இங்கே 13ஆம் நூற்றாண்டில் ஹோசல்ய அரசர்களால் கட்டப்பட்ட புகழ் வாய்ந்த லக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்திருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் விதவிதமான பறவைகள் மற்றும் உயிரினங்கள் வாழும் பத்ரா வனவிலங்கு சரணாலயமும் இங்கே அமைந்திருக்கிறது. நேரமிருந்தால் இந்த இடங்களுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

லக்ஷ்மி நரசிம்மர் கோயில் Photo:PixelPyx

ஷிமோகா - ஜோக் அருவி:

ஷிமோகா - ஜோக் அருவி:

நாம் பயணிக்கவிருக்கும் அடுத்த இடம் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மிக அழகிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஜோக் அருவியை நோக்கித்தான்.

ஷிமோகாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியை ஒன்றரை மணிநேரத்தில் அடைந்து விடலாம்.

அழகிய ஜோக் அருவி Photo:Abhay kulkarni wiki

ஜோக் அருவி:

ஜோக் அருவி:

ஷ்ராவந்தி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அருவி 830அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய அருவியான இதில் நாம் குளித்து மகிழ முடியாது என்றாலும் பார்ப்பதற்கு இந்திய நயாகரா போன்று உள்ளது. இங்குதான் லக்ஷ்மி மேனன், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருகின்றன.

Photo:Jughead i

ஜோக் அருவி - கோகர்ணா :

ஜோக் அருவி - கோகர்ணா :

பயணத்தின் இறுதி கட்டமாக ஜோக் அருவியில் இருந்து கோகர்ணாவை நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஜோக் அருவியில் இருந்து கோகர்ணா 111கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இரண்டரை மணிநேரத்தில் நாம் ஜோக் அருவியில் இருந்து கோகர்ணாவை அடைந்துவிட முடியும். கோவா கடற்கரைகளுக்கு இணையாக தற்போது இந்த கோகர்ணா கடற்கரையும் புகழ் பெற்று வருகிறது. வாருங்கள் அப்படி கோகர்ணாவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Photo:Harsha K R

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த அழகிய கோகர்ணா. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கிருக்கும் மகாபலேஸ்வரா என்னும் சிவன் கோயிலுக்கே மிகவும் அறியப்பட்டு வந்தது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக விளங்கிய இந்த மகாபலேஸ்வரா கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் வருகை தருகின்றனர்.

மகாபலேஸ்வரர் கோயில் நுழைவு வாயில்

Photo:Nvvchar

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

வெகு சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்த சில வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கோகர்ணாவின் அழகிய கடற்கரைகளை கண்டு அதனை வெளி உலகத்திற்கு பிரபலப்படுத்தி இருக்கின்றனர். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது உள்நாட்டினரிடமும் பிரபலமடைந்து வருகிறது.

சூரியக்குளியல் போடும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி Photo:Axis of eran

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

இந்தியன் பீச், ஓம் பீச், மெயின் பீச், நிர்வாணா பீச்,குதலா கடற்கரை ஆகியவை இங்கிருக்கும் முக்கிய கடற்கரைகள் ஆகும். இவற்றில் சுற்றுலாப்பயனிகளிடையே மிகவும் பிரபலமானது ஓம் கடற்கரைதான். இந்தி எழுத்தான ॐ வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது.

குதலா கடற்கரை Photo: Sitabja Basu

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

இன்னும் முற்றிலும் வணிகமயமாக்களுக்கு உட்படாமல் அசுத்தமின்றி இருக்கிறது. இங்கு அதிக கூட்டமும் இருப்பதில்லை என்பதால் காதல் துணையுடன் தனிமையில் இருக்கவும், நண்பர்களுடன் கடற்கரையில் கைப்பந்து, கிரிக்கெட் போன்றவை விளையாடவும், மனைவி குழந்தைகளுடன் அன்பாக நேரத்தை செலவிடவும் அருமையான இடம்.

துள்ளி விளையாடும் நண்பர் கூட்டம் Photo:Abhijit Shylanath

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

இந்த கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்க வசதியான குடிசைகள் வாடகைக்கு கிடைகின்றன. பக்தியும் கொண்டாட்டமும் கலந்த இந்த கோகர்ணா பயணம் வித்தியாசமான அனுபவமாக உங்களுக்கு அமையும். இந்த புத்தாண்டை கொண்டாட அவசியம் கோகர்ணா சென்று வாருங்கள்.

ஓம் வடிவ கடற்கரை Photo:Axis of eran

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

கோகர்ணா - என்ன அழகு! எத்தனை அழகு!:

தங்கம் போல மின்னும் கோகர்ணா கடற்கரை.

Photo:Patrik M. Loeff

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X