Search
  • Follow NativePlanet
Share
» »ஹனிமூன் எங்க எப்படி இருக்கணும்! இந்தியப் பெண்கள் என்ன நினைக்குறாங்க தெரியுமா?

ஹனிமூன் எங்க எப்படி இருக்கணும்! இந்தியப் பெண்கள் என்ன நினைக்குறாங்க தெரியுமா?

ஹனிமூன் எங்க எப்படி இருக்கணும்! இந்தியப் பெண்கள் என்ன நினைக்குறாங்க தெரியுமா?

By Udhay

கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஹனிமூன் ஒரு அற்புதமான பாதையை ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் காதலை இனிக்க இனிக்க அனுபவிக்க இந்தியாவில் எத்தனை இடங்கள் இருக்கின்றன தெரியுமா? உலகுக்கே காதலை கற்றுத்தந்த காமசூத்ரா எழுதப்பட்ட இந்தியாவில் இல்லாத ஹனிமூன் ஸ்தலங்களா? இந்தியாவில் பனிபடர்ந்த மலைகளும் உண்டு, மரங்கள் அடர்ந்த மலைகளும் உண்டு. அதேபோல உங்கள் காதல் துணையோடு கைகோர்த்து நிற்க உங்கள் கால்களை முத்தமிட்டும் செல்லும் அலைகளை கொண்ட அழகிய கடற்கரைகளும் இங்கே உள்ளன. சரி சற்று வித்தியாசமாக பாலைவனத்தையே சோலைவனமாக அனுபவிக்கும் காதல் ஜோடிகளும், காடுகளின் ஏகாந்தத்தில் டூயட் பாட நினைக்கும் காதலர்களுக்கும் ஏற்ற பாலைவன ஹனிமூன் ஸ்தலங்களும் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன. அதிலும் இந்திய பெண்கள் ஹனிமூனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா?

 ஆக்ராவில் ஹனிமூன்

ஆக்ராவில் ஹனிமூன்


ஆக்ரா ஆயிரக்கணக்கான கட்டிடக் கலைஞர்கள் 21 வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பொக்கிஷம், உலகின் 7 அதிசயங்களில் ஒன்று என்று எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்காக உருகி உருகி கட்டிய காதல் கோட்டை என்றுதான் உலகம் இன்று தாஜ் மஹாலை காண்கிறது.


generalising

 அறைகளிலிருந்தே ரசிக்க

அறைகளிலிருந்தே ரசிக்க

தாஜ் மஹாலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் வெகு அருகிலேயே பல ஹோட்டல்கள் இருப்பதால் நீங்கள் உங்கள் அறையின் ஜன்னல் கதவுகள் வழியாக எப்போதும் தாஜ் மஹாலை பார்த்து ரசித்துகொண்டே இருக்கலாம். மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்பாக்களில் ஒன்றாக இங்குள்ள ஹோட்டலின் ஸ்பா கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தி ஓபராய் அமரவிலாஸ் ஹோட்டலிலிருந்து தாஜ் மஹால் ஒரு நாளில் எத்தனை வண்ணங்களில் காட்சியளிக்கிறது என்று கண்டு ரசிக்க முடியும்.

 ஜெய்சல்மேர் - இந்தியப் பெண்களுக்கு பிடித்த இடம்

ஜெய்சல்மேர் - இந்தியப் பெண்களுக்கு பிடித்த இடம்

எல்லையில்லாமல் பரந்து கிடக்கும் பாலைவன மணல்வெளியில் உங்கள் காதல் துணையோடு அசைந்து அசைந்து செல்லும் ஒட்டகத்தின் மீதமர்ந்து செல்வது அரேபிய காதல் இரவுகளை உங்களுக்கு நினைவுபடுத்தும். நாள்கணக்கில் சஃபாரி செல்வது, நட்சத்திரங்களின் அடியில் பாலைவனத்தில் இரவை உல்லாசமாக கழிப்பது எல்லாமே உங்கள் ஹனிமூனை மறக்க முடியாதவையாக ஆக்கும்.

 ஹனிமூனின் ஆசை

ஹனிமூனின் ஆசை

ஜெய்சல்மேர் நகருக்கு நீங்கள் ஹனிமூன் வந்தால் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவேநிறைய ஹோட்டல்கள் தங்குவதற்கான சரியான தேர்வாக இருக்கின்றன. அட்டகாசமாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டல்களில் உங்கள் ஹனிமூனை கொண்டாடுவது வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

 கூர்க்

கூர்க்

தென்னிந்திய மலை பிரதேசங்களில் எவரையும் தன்னழகில் சொக்கவைக்கும் மயக்கும் தோற்றம் கொண்டது கூர்க் நகரம். அதிலும் இதன் பரந்து விரிந்து கிடக்கும் காப்பித்தோட்டங்களின் நறுமணத்தோடு காலை நேரம் ஒன்றில் உங்கள் காதல் துணையோடு துயில் எழும் அந்த தருணம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது.

 எப்படியெல்லாம் கொண்டாடலாம்

எப்படியெல்லாம் கொண்டாடலாம்

எங்கும் சூழ்ந்திருக்கும் காப்பியின் நறுமணம், நீந்தித் திளைக்க அட்டகாசமான நீச்சல் குளம் என்று இந்த இடம் காதலர்களின் சொர்கமாகவே இருந்து வருகிறது. இளம் ஜோடிகளுக்கு தங்கள் காதலை கொஞ்சி மகிழ அழகான இடங்களும் நிறைய இருக்கின்றன.

 கேரளாவின் படகு இல்லங்கள்

கேரளாவின் படகு இல்லங்கள்

ஹனிமூன் கொண்டாடுவதற்கு வெகு பொருத்தமான இடம் கேரளாவின் படகு இல்லங்களே. ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து அமைதியான உப்பங்கழிகளின் நடுவே உங்கள் காதலரோடு நேரத்தை செலவு செய்து உங்களை காதலை கொண்டாடுவதற்கு ஈடு இணை ஏதுமில்லை. எல்லா படகு இல்லங்களும் பொதுவாக படுக்கை அறை, குளியலறை, சமையலாள் என்று சகல வசதிகளுடனேயே கிடைக்கிறது.

 உப்பங்கழிகள்

உப்பங்கழிகள்

நீங்கள் உப்பங்கழி பகுதியில் எங்கேனும் ரிசார்ட்டுகளில் தங்க விரும்பினால் குமரகத்தில் நிறைய அட்டகாசமான ரிசார்ட்கள் உள்ளன. இங்கெல்லாம் நீங்கள் உங்கள் ஹனிமூனை திகைக்க திகைக்க கொண்டாடலாம்.

சிம்லா

சிம்லா


இமயமலையின் அரவணைப்பில் குளுகுளுவென்று இருக்கும் சிம்லாவில் சமீப காலங்களில் ஹனிமூன் ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் ஒட்டுமொத்த சிம்லாவே ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்டா மாறிப்போயிடுச்சு. இங்கு நீங்கள் ஹனிமூன் கொண்டாட வருவதாக இருந்தால் இங்கு அருகிலேயே அமைந்துள்ள ஹோட்டல்களில் தங்குவது சரியான தேர்வாக இருக்கும்

 ஹனிமூன் ஜோடிகளுக்காகவே

ஹனிமூன் ஜோடிகளுக்காகவே

இங்குள்ள ஹோட்டல்கள் தேவதாரு மரங்கள் சூழ, பனிபடர்ந்த இமையமலையின் பின்னணியில் ஹனிமூன் ஜோடிகளுக்காகவே கட்டப்பட்டது போல் காட்சியளிக்கிறது. மேலும் சிம்லாவின் சுற்றுலாத்தலங்களுக்கு வெகு அருகில் இருப்பதோடு, இண்டநெட், வைஃபை என்று அனைத்து நவீன வசதிகளையும் இந்த ஹோட்டல்கள் கொண்டிருக்கின்றன.

Read more about: travel honeymoon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X