Search
  • Follow NativePlanet
Share
» »சாகச விரும்பிகளுக்கே உச்சகட்ட வியப்பளிக்கும் குட்டி கிராமம்!

சாகச விரும்பிகளுக்கே உச்சகட்ட வியப்பளிக்கும் குட்டி கிராமம்!

கூடுதலான திரில்லிங்கை எதிர்பார்த்து மலைப் பிரதேசத்திற்கு பயணிப்போர் உத்தரகண்டில் உள்ள இந்த மலைப் பகுதிக்கு போய் பாருங்க.

மலைப் பிரதேசத்தை அதிகமாக விரும்பும் சாகச விரும்பிகள் தங்களுக்கான பயணத் தலங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருப்பர். சற்று வித்தியாசமாகவோ, அல்லது கூடுதலான அம்சங்களை உடைய பகுதியாகவோ இருந்தால் சட்டென அங்கே பயணித்து தங்களது சாகச ஆசையை நிறைவேற்றி விடுவர். ஒருசிலர் இன்னும் கூடுதலான த்ரில்லிங்கை எதிர்பார்த்தே மலைப் பகுதிகளுக்கு பயணிப்பர். அப்படி, கூடுதலான, வியபூட்டும் சாகசத் தலங்களைத் தேடுவோர் ஒருமுறை இங்கு சென்று பாருங்கள்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

இயற்கை அம்சங்கள் நிறைந்த உத்தரகண்டின், டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்சி என்னும் குட்டி மலைப் பிரதேசம். இப்பகுதியில் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக திகழும் இது ஆதிவாசிகள் அதிகளவில் வசிக்கக் கூடிய பகுதியாகவும் திகழ்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியை நோக்கி படையெடுக்கக் காரணம் மலை முகடின் உச்சியில் இருந்து யமுனா நதியின் அசத்தலான அழகை கண்டு ரசிக்க முடியும் என்பதாலேயே.

Sumod K Mohan

பண்டைய நினைவுகள்

பண்டைய நினைவுகள்

கல்சி மலைப் பிரதேசத்தில் பண்டைய கால நினைவுச் சின்னங்கள் பல காணப்படுகின்றன. இதனால், இப்பகுதி வரலாற்று அய்வாலர்கள் மத்தியிலும் புகழ்பெற்றுள்ளது. இதனைத் தவிர்த்து, சாகச விளையாட்டுகளை விரும்புவோருக்காகவே கல்சி அதிகமாக அறியப்படுகிறது.

Sandeep Brar Jat

அசோகன் பாறை

அசோகன் பாறை

இப்பகுதியில் காணப்படும் அரசாணை தாங்கிய அசோகன் பாறை இந்திய கல்வெட்டு ஆய்வு வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னமாக திகழ்கிறது. இப்பாறையில் பொதிக்கப்பட்டுள்ள மவுரிய அரசின் 14-வது அரசாணை, கிமு 250 காலகட்டத்தில் பொதிக்கப்பட்டதாகும்.

CC-BY

ஆசன் பரேஜை

ஆசன் பரேஜை

வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அரிய வகை பறவைகளின் குடியிருப்பாக ஆசன் பரேஜை என்னும் பகுதி காணப்படுகிறது. குறிப்பாக, மல்லார்ட் வகை வாத்து, சிவப்பு முக வாத்து, உண்ணி இன கொக்கு, சேற்றுப் பூனைப் பருந்து உள்ளிட்டு கடற் பறவைகளும் இங்கே பயணம் இடம்பெயர்ந்து வருகின்றன.

cc-by-sa

சக்ரத்தாவில் சாகசம்

சக்ரத்தாவில் சாகசம்

கல்சியில் உள்ள மற்றுமொறு பிரபல சுற்றுலா அம்சங்களைக் கொண்ட பகுதிதான் சக்ரத்ரா. இங்கு படகுச் சவாரி, பாராசைலிங், மரப் பாலம் மற்றும் பாறை ஏறுதல் என பல்வேறு சாகச விளையாட்டுகள் உள்ளன. மேலும், தடைகளை தாண்டுதல், கூடைப் பந்து, கோல்ஃப் என விளையாட்டு அம்சங்களும் இங்கே உங்களுக்காக காத்திருக்கின்றன.

Sanjoyg

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X