Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் சாகச விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் இருக்கும் சாகச விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா ?

By Naveen

பாஸ்...வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குதுன்னு தோணுதா உங்களுக்கு?. காலைல எழுந்து வேலைக்கு போயிட்டு வந்து கொஞ்ச நேரம் டீ.வி பார்த்துட்டு சாப்பிட்டுட்டு தூங்கி மறுபடியும் காலைல வேலைக்கு போயி-னு ஒரே மாதிரி வாழ்ந்து என்னடா வாழ்கையை இது? தினமும் ஒரு தடவையாவது உங்களுக்கு தோணுதா?.

அப்போ இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். நம்ம குடும்பத்திற்காக கடுமையா உழைப்பது சரி தான் என்றாலும் குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிட்டு வாழ்வதும் முக்கியம். அப்படியென்றால் வார விடுமுறையின் போது ஷாப்பிங் மால் போவதோ, திரைப்படம் பார்க்க போவதோ அல்ல, ஒருவரோடு ஒருவர் பேசி மகிழ்ந்து, ஒன்றாக புதுபுது அனுபவங்களை, நினைவுகளை பெறுவது தான்.

அதற்கு வருடத்தில் இருமுறையேனும் சுற்றுலா செல்ல வேண்டும். சுற்றுலா சென்றால் வெறுமனே சுற்றிப்பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும். திரில்லான சாகச விளையாட்டுகளில் ஈடுபட நிறைய தில்லும் வேண்டும்.

வாருங்கள் இந்தியாவில் இருக்கும் சாகச விளையாட்டுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

காஷ்மீர்!!

காஷ்மீர்!!

1990களின் தொடக்கம் வரை இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்ந்த இடம் காஷ்மீர் ஆகும். கோடை காலத்தில் பசுமை பொங்கும் இடமாக இருக்கும் காஷ்மீர் குளிர் காலத்தின் போது மிகப்பெரிய விளையாட்டு மைதானமாக மாறிவிடுகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்றுவரை நடைபெற்று வரும் காஷ்மீரின் 'ஐகானிக்' அடையாளங்களில் ஒன்றான ஒரு சாகச விளையாட்டை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Utsav Verma

பனிச்சறுக்கு !!

பனிச்சறுக்கு !!

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பதை தாண்டி உலக மக்களுக்கு காஷ்மீர் பற்றி தெரிந்திருக்க ஒரே காரணம் தான் இருக்க முடியும். அது இங்கு நடக்கும் குளிர்கால விளையாட்டுகள் தான்.

நவம்பர் - பிப்ரவரி மாதங்களில் இங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இங்குள்ள மலைகள் எல்லாம் பனிப்படர்ந்த மிகப்பெரிய விளையாட்டு மைதானங்கள் போல காட்சியளிக்கின்றன. இந்த மலைகளில் ஸ்கீயிங் எனப்படும் பனிச்சறுக்கு, ஐஸ் ஸ்கேடிங் மற்றும் ஸ்னோ போர்டிங் போன்ற விளையாட்டுகளில் நாம் ஈடுபடலாம்.

batschmidt

பனிச்சறுக்கு !!

பனிச்சறுக்கு !!

காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் இருக்கும் குல்மார்க் என்ற இடம் தான் இந்தியாவின் குளிர்கால விளையாட்டுகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. குல்மார்கில் இருக்கும் அப்ஹர்வத் என்ற மலையில் தான் இந்த விளையாட்டுகள் நடக்கின்றன.

இந்த மலையின் உச்சியை 'குல்மார்க் கோண்டோலா' என்ற ரோப் கார் மூலம் அடைந்து அங்கிருந்து பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

Sailing Nomad

பனிச்சறுக்கு !!

பனிச்சறுக்கு !!

இந்த வருடம் முடிவதற்குள் எங்காவது சுற்றுலா போகவேண்டும் என்று திட்டம் வைத்திருந்தால், ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே செய்யக்கிடைக்கும் இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையும் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் காஷ்மீருக்கு வாருங்கள்.

batschmidt

சாகச படகு சவாரி!!

சாகச படகு சவாரி!!

சீறிப்பாயும் ஆற்றில் மிதவை படகில் துடுப்புப்போட்டபடி ஆபத்தான வளைவுகளையும், கூர்மையான பாறைகளையும் கடந்து செல்வது ஏதோ பரபரப்பான ஹாலிவுட் படம் பார்ப்பதற்கு இணையான திரில்லிங்கான அனுபவத்தை தரக்கூடிய விஷயமாகும்.

ராப்டிங் எனப்படும் இந்த சாகச படகு சவாரி இந்தியாவில் இப்போது பரவலாக நடத்தப்படுகிறது. குறிப்பாக கர்னாடக மாநிலம் கூர்க், மணாலி, குளு போன்ற இடங்களில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாகும்.

B Balaji

உத்தரகண்ட் - ட்ரெக்கிங் !!

உத்தரகண்ட் - ட்ரெக்கிங் !!

இந்தியாவில் வாரணாசிக்கு அடுத்தபடியாக கோயில்கள் அதிகம் நிறைந்த இடமென்றால் அது உத்தரகண்ட் மாநிலம் தான். இமய மலையில் அமைந்திருக்கும் இந்த மாநிலம் ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கும் சிறந்த இடங்களை கொண்டிருக்கிறது.

ரூப குண்டு ஏரி, மலர் பள்ளத்தாக்கு, பினிசார், டோடிதல், நந்தா தேவி விலங்குகள் சரணாலயம் போன்ற இடங்கள் இங்கே மலையேற்றத்தில் ஈடுபட சிறந்த இடங்கள் ஆகும்.

Christopher Porter

Read more about: adventure andaman kashmir kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X