Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் சிறந்த ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!

சென்னையின் சிறந்த ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றாலே பரபரப்பு, மக்கள் நெரிசல், போக்குவரத்து, வித விதமான உணவுகள், வண்ண மயமான ஆடைகள், கடற்கரைகள், ரிசார்ட்டுகள், கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என அனைத்தும் நம் நினைவுக்கு வருவது சாத்தியம் தான்.

ஆனாலும், சென்னைக்கு புதியதாக வருகை தருபவர்களுக்கும் அங்கேயே குடியிருப்பவர்களும் சென்னையின் பல்வேறு உணவு வகைகளை கண்டிப்பாக ஒரு கை பார்ப்பார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வகை வகையான, சுவையான உணவுகள் சென்னையில் கிடைக்கின்றன.

நேஷனல் ஜியோகிராஃபிக்கின் உலகெங்கிலும் உள்ள "சிறந்த 10 உணவு நகரங்கள்" பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. நீங்கள் ஒரு உணவுப் பிரியராக இருந்தால், நிச்சயம் சென்னையின் சுவையான உணவுகளை கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் போக வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

சௌகார்பெட்

சௌகார்பெட்

நீண்ட கால கதைகளால் நிரம்பி வழியும் பழங்கால கட்டிடங்கள் சௌகார்பெட் நகரத்தின் பழமையை பிரதிபலிக்கின்றன. இங்கு வசிக்கும் மிகுதியான வட இந்திய மக்கள் காரணமாக இது சென்னையின் மினி வட இந்தியா என்றும் அழைக்கபடுகிறது. அதற்கு ஏற்றார்போலவே சௌகார்பபெட்டில் இருக்கின்ற குறுகிய சந்துகள் பாக்கெட் ஃபிரண்ட்லியான பல சுவையான உணவுகளை வழங்குகிறது.ராஜ் கச்சோரி, சீஸ் பாவ் பாஜி, ரகதா பஜ்ஜி, சேவ் பூரி, சனா சாட், சுகா பேல்பூரி, சைனீஸ் பெல் மற்றும் தாஹி பெல், தஹி பப்டி, தஹி ஆலு சாட், சில்லி சீஸ் டோஸ்ட், புஜியா பஃப், சீஸ் முறுக்கு சாண்ட்விச், கார்ன் கிரில் சாண்ட்விச், ஆனியன் கச்சோரி, மிர்ச்சி வடை, மிருதுவான சமோசா சீஸ், வறுத்த இட்லி, தந்தூரி இட்லி ஆகியவற்றை நீங்கள் இங்கே சுவைத்து பார்க்கலாம்.

அண்ணா நகர்

அண்ணா நகர்

எலைட் ஏரியாவான அண்ணா நகர் சென்னையின் மையத்தில் அமைந்துள்ளது. பரப்பளவிலும் கூட்டத்திலும் பெரியதான அண்ணா நகரில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. போட்டி தேர்வர்களின் தலைநகரான அண்ணா நகரில் அவர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு சுவையான உணவுகள் ஏராளம்.கறி தோசை முதல் பிட்சா, பர்கர் வரை, ஜூஸ் முதல் ஐஸ் கிரீம், ஷேக்ஸ் வரை, பிரட், பன் முதல் பாஸ்தா, ரவியோலி வரை, சிக்கன் தந்தூரி முதல் சிஸ்லர் வரை, பணியாரம் முதல் பிரஞ்சு ஃபிரைஸ் வரை, சிக்கன் பிரைடு ரைஸ் முதல் தலப்பாக்கட்டி பிரியாணி வரை எல்லாமே அண்ணா நகரில் கிடைக்கின்றது.

மரினா பீச்

மரினா பீச்

உலகின் இரண்டாவது மிக நீளமான நகர்ப்புற கடற்கரையான மரினா பீச் சென்னையின் மிக முதன்மையான ஈர்ப்பாகும். இங்கே பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகம், அதே நேரத்தில் கடலலையை ரசித்துக் கொண்டு, உப்புக் காற்று வாடையில் பல விதமான உணவுகளையும் ருசித்து மகிழலாம்.கார்ன், மிளகாய் பஜ்ஜி, போண்டா, வடை, கட் ஃப்ரூட்ஸ், மாங்காய், நாவற்பழம், இலந்தைபழம், வறுத்த மீன், நண்டு, இறால், சிக்கன், மட்டன், பலவகையான சூப், பானி பூரி, மசாலா பூரி, சன்னா, ஜிகர்தண்டா, சான்ட்விச், பர்கர், ஃபிரைஸ், அத்தோ ஆகியவை இங்கே கிடைக்கும் சிக்நேச்சர் ஐயிடங்களாகும்.

ரிச்சி ஸ்ட்ரீட்

ரிச்சி ஸ்ட்ரீட்

மவுன்ட் ரோட்டில் அமைந்துள்ள ரிச்சி ஸ்ட்ரீட் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான ஒரு இடமாகும். இங்கே ஷாப்பிங்கிற்கு வருபவர்கள் அதனை முடித்துக்கொண்டு, இங்கே இருக்கின்ற தெரு ஓரக் கடைகளில் பலகாரம் சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள்.குலாப்ஜாமூன், ரசகுல்லா, லஸ்ஸி, பல்வேறு வகையான சாட், பால்கோவா, பக்கோடா, சமோசா, அத்தோ, சோலா பூரி, டீ, பில்டர் காபி, ஜிலேபி, இட்லி, தோசை, பர்கர், சான்ட்விச், பல்வேறு வகையான ஜூஸ் ஆகியவை இங்கே கிடைக்கும் பிரபலமான உணவு வகைகளாகும்.

பெசன்ட் நகர்

பெசன்ட் நகர்

பெசன்ட் நகர் புதிய உணவுகளை முயற்சிப்பதற்கு ஒரு சிறந்த இடமாகும், நீங்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை நீங்கள் இங்கே சுவைக்கலாம். எனவே, நீங்கள் பெசன்ட் நகரில் இருந்தால் அல்லது அடுத்த முறை செல்லும் போதோ மரவள்ளி கிழங்கு சிப்ஸ், மீன் பஜ்ஜி, இறால் பஜ்ஜி, மீன் குழம்புடன் கூடிய சாப்பாடு, சிக்கன், மட்டன், காடை, சவர்மா, ட்விஸ்டட் பொட்டடோ, சோடா வகைகள், சாட் வகைகள் ஆகியவற்றை சுவைத்து மகிழலாம்.

பர்மா பஜார்

பர்மா பஜார்

இது பாரிமுனைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அமைப்பு சாரா ஷாப்பிங் மையமாகும். இங்கே பர்மாவை பூர்வீகமாக கொண்டவர்களே அதிகம் என்பதால் இந்த இடத்திற்கு பர்மா பஜார் என்ற பெயர் வந்தது. இங்கு நீங்கள் பர்மா உணவுகளான அத்தோ, பேஜோ, மொய்யோ, வாழைத்தண்டு சூப் மற்றும் பலவகையான நூடுல்ஸ், பிரைடு ரைஸ்கள், இனிப்புகள் ஆகிவற்றை ருசிக்கலாம்.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

சென்னையின் சிட்டி சென்டர் ஆன நுங்கம்பாக்கத்தில் கிடைக்காத உணவு வகைகளே இல்லை என்று சொல்லலாம். அதிலும் பிரட் ஆம்லேட் தான் நுங்கம்பாக்கத்தின் சிக்நேச்சர் டிஷ் ஆகும். அது மட்டுமில்லாமல் பாவ் பாஜி, பானி பூரி, பலவகையான சாட், இட்லி, தோசை வகைகள், இத்தாலியன் பிரஞ்சு உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள் ஆகியவற்றை சுவைத்து மகிழலாம்.மேலும் தி.நகர், திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, எக்மோர் போன்ற இடங்களிலும் வகை வகையான உணவுகளை சுவைக்கலாம். அடுத்த முறை வெளியே செல்லும்போது, நிச்சயம் இந்த டிஷ்களை சுவைக்க மறக்காதீர்கள்.

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X