Search
  • Follow NativePlanet
Share
» »உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!

உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!

புகைப்படம் எடுத்தல் என்பது காலம், உணர்ச்சிகள், கலாச்சாரம், வரலாறு மற்றும் பலவற்றின் நம்பகத்தன்மையை அழகாகப் படம்பிடிக்கும் ஒரு காலமற்ற கதைசொல்லல் ஊடகமாகும். நம் மனது சொல்ல நினைப்பதைக் கூட மௌனத்திலே அழகாய் பிரதிபலிக்கும் மொழி தான் இந்த புகைப்படம். "ஒரு படம், ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் மதிப்புடையது" என்ற பிரபலமான கூற்றுப்படி, ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினமும் இந்த உணர்வைக் கொண்டாடுகிறது.

புகைப்படம் எடுப்பதில் பல வகைகள் உண்டு, ட்ரெடிஷனல், கேண்டிட், செல்ஃபி, ப்ரொஃபஷனல், மாடல், நேச்சுரல், வைல்ட் லைஃப், மானுமென்ட், டெம்பிள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான லென்சுகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

1826 இல் பிரெஞ்சு ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸால் தான் முதல் புகைப்படத்தை எடுத்தாராம்! ஆனால் இன்றோ பாருங்கள், நாம் ஒரு நாலாவது புகைப்படம் எடுக்காமல் இருந்து இருப்போமா! யோசித்தால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். எல்லாம் இருக்கட்டும்! இந்த உலக புகைப்பட தினம் மட்டுமில்லாமல் எல்லா நாட்களிலும் நாம் அழகான போட்டோக்களை எடுத்து மகிழக்கூடிய அளவிற்கு இந்தியாவில் பொக்கிஷமான இடங்கள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் சில சிறந்த யோசனைகள் இதோ உங்களுக்காக!

 வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்

வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்

நீங்கள் வரலாற்று கட்டிடக்கலையின் ரசிகராகவும், கடந்த காலத்தை ஆராய்வதில் விருப்பமுள்ளவராகவும் இருந்தால், இந்தியாவின் அற்புதமான கோட்டைகள் உங்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள வலிமைமிக்க கோட்டைகள் பல்வேறு வரலாற்று காலங்களின் பயணத்தின் மூலம் உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

உமைத் பவன், காங்க்ரா கோட்டை, ஆம்பர் கோட்டை, சித்தகோர் கோட்டை, மெஹ்ரங்கர் கோட்டை, ஜெய்சால்மர் கோட்டை, ஜான்சி கோட்டை, குவாலியர் கோட்டை, கோல்கொண்டா கோட்டை, பதேபூர் சிக்ரி, சிந்துகர் கோட்டை, ஆக்ரா கோட்டை, செங்கோட்டை, செஞ்சி கோட்டை, தஞ்சாவூர் கோட்டை, வேலூர் கோட்டை, வாரங்கல் கோட்டை
என எண்ணற்ற காலம் கடந்த கோட்டைகள் நம் நாட்டை அலங்கரிக்கின்றன. இந்த இடங்களுக்கு எல்லாம் சென்றால் நிச்சயம் நாம் நிறைய புகைப்படங்களை அள்ளிக்கொண்டு வரலாம்.

கலாச்சாரம் ததும்பிய கோவில்கள்

கலாச்சாரம் ததும்பிய கோவில்கள்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், பல நூறு ஆண்டுகளாக, பல வம்சங்களைச் சேர்ந்த இந்து ஆட்சியாளர்கள் நாட்டின் குடிமக்களின் வாழ்க்கையில் தங்கள் இருப்பை விட்டுச் செல்ல கோவில்களைக் கட்டியுள்ளனர். பழங்காலத்தில் கோவில்கள் மக்கள் கூடும் சமூக மையங்களாக இருந்தன. நடனம், இசை மற்றும் போர் ஆகிய கலைகள் மெருகூட்டப்பட்டு, தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட தளங்களாகவும் அவை இருந்தன. இன்று, இந்தக் கோயில்கள் நமது கடந்த காலத்தையும், அன்றைய கைவினைஞர்களின் கட்டிடக்கலைப் புத்திசாலித்தனத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

தஞ்சை பெரிய கோவில், எல்லோரா கைலாசநாதர் கோவில், குஜராத் சோம்நாத் ஆலயம், அமிர்தசரஸ் பொற்கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில், கர்நாடகாவின் சென்னகேஷவா கோவில், மகாபலிபுரம் கடற்கரை கோவில், கோனார்க் சூரியனார் கோவில்
என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவில் உள்ள அழகிய கோவில்களின் பட்டியலுக்கு முடிவே கிடையாது. இந்த கோயில்களின் அற்புதங்களை ஆராய்ந்த கையோடு சில பாரம்பரியமிக்க போட்டோக்களையும் நாம் எடுத்து செல்லலாம்.

அழகிய மலைப்பிரதேசங்கள்

அழகிய மலைப்பிரதேசங்கள்

கம்பீரமான மலைகள், பசுமையான காடுகள், வசீகரமான பள்ளத்தாக்குகள், தூய்மையான காற்று, ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவில் மலைவாசஸ்தலங்களை உருவாக்குகின்றன. எப்போதுமே இயற்கை அழகை ரசிப்பது ஒரு அலாதிதான், அதன் அழகில் நனைந்தபடியே நமக்கு பல அற்புதமான போட்டோக்களும் கிடைக்கும்.

ஸ்ரீநகர், பஹல்கம், குல்மார்க், மணாலி, சிம்லா, நைனிடால், தவாங், டார்ஜிலிங், கலிம்பாங், ஷில்லாங், சிரபுஞ்சி, மஹாபலேஷ்வர், குடகு, தேக்கடி, மூணார், அரக்கு, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, லோனாவாலா, லடாக், முசொரி என இந்த இடங்களில் நீங்கள் பல அழகிய போட்டோக்களை எடுத்து தள்ளலாம். இவற்றில் காஷ்மீர், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சல் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இமயமலை சாரல் மாநிலங்களில் நீங்கள் பனி சிகரங்களில் போட்டோ எடுக்கலாம்; லைக்ஸ்கள் குவியும்!

கண்கவர் கடற்கரைகளும் ஏரிகளும்

கண்கவர் கடற்கரைகளும் ஏரிகளும்

பிரகாசமான சூரியன், தென்றல் காற்று, தெளிவான வானம், மற்றும் அலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் பல அழகான கடற்கரைகளை உருவாக்குகின்றன. அதே போல பனிமூடிய சிகரங்களுக்கு நடுவிலேயும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கு இடையேயும், அழகான நிலபரப்புகளிலும் நாட்டில் பல அழகிய ஏரிகள் நிறைந்துள்ளன. இந்த இடங்களுக்கு சென்றால் உங்களுக்கு நிச்சயம் பல அழகிய போட்டோக்கள் கிடைக்கும்.

ராதாநகர் பீச், தர்கர்லி பீச், கோகர்ணா பீச், மரினா பீச், கோவாவின் பல கடற்கரைகள், கோவளம் பீச், பூரி பீச் என பல கடற்கரைகள் இந்தியாவில் உள்ளன. பாங்கோங் த்சோ, தார்சார் ஏரி, மனஸ்பால் ஏரி, டம்டமா ஏரி, சூரஜ் தால் ஏரி, பீம்டல் ஏரி, குருடோங்மர் ஏரி, லோக்டக் ஏரி, சிலிகா ஏரி, பிச்சோலா ஏரி, ஊட்டி ஏரி, வேம்பநாடு ஏரி
ஆகிய பல ஏரிகளும் இந்தியாவை அலங்கரிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

துடிப்பான நகரங்கள்

துடிப்பான நகரங்கள்

இந்தியாவின் பல அம்சங்கள் இன்றைய சமூகங்களில் வேரூன்றியிருக்கின்றன, குறிப்பாக இந்தியாவின் சில சிறந்த நகரங்கள் நாடு முழுவதும் இத்தகைய செல்வாக்கைக் கொண்டுள்ளன. பல இனக்குழுக்கள், கலாச்சாரங்கள், நினைவுச்சின்னங்கள், அரண்மனைகள், உப்பங்கழிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற கண்கவர் காட்சிகள் நம் இந்திய நகரங்களில் நிறைந்து இருக்கிறது. இந்த நகரங்களுக்கு எல்லாம் சுற்றி பார்ப்பதோடு பல போட்டோக்களையும் கிளிக் செய்யலாம்.

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், புனே, அகமதாபாத், சூரத், கோயம்பத்தூர், வதோதரா, ஹைதிராபாத், உதய்பூர், ஜெய்ப்பூர், கொச்சி, டேராடூன், திருவனந்தபுரம், லக்னோ, விசாகபட்டினம், பாண்டிச்சேரி
என இந்தியாவில் எண்ணற்ற அழகிய நகரங்கள் உள்ளன. நகர வாழ்க்கையில் ஈடுப்பட்டதோடு, பல வகை உணவுகளை சுவைத்து, ஷாப்பிங் செய்து, பல வண்ண போட்டோக்களை கிளிக் செய்யலாம்.

இவையனைத்தும் புகைப்பட தினம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உங்களுக்கு போட்டோ எடுக்க சிறந்த யோசனைகளாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே நீங்கள் எங்கு சென்றாலும் சிறந்த போட்டோக்களை எடுக்க மறக்காதீர்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X