Search
  • Follow NativePlanet
Share
» »இயற்கையின் பேரதிசியத்தைக் கொண்ட ராஜ்மச்சி!

இயற்கையின் பேரதிசியத்தைக் கொண்ட ராஜ்மச்சி!

உயர்ந்த சிகரங்களுக்கும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும் இடையே சாகசமான மலையேற்றத்தை யாருதான் விரும்ப மாட்டாடர்கள். கோடை காலத்திலும் கொட்டும் அருவி, பாறைகளில் மோதி சரியும் மேகக் கூட்டம், சிதரி விழும் மழைச் சாரல், அதில் கொஞ்சி விளையாடும் வன விலங்குகள் என அத்தனை அற்புதங்களைக் கொண்டுள்ள மலையின் இயற்கையில் நாமும் தானே மூழ்கி விடுவோம். அப்படிப்பட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ள ராஜ்மச்சி மலைத்தொடரில் மலையேற்றம் செல்வோம் வாங்க.

பொதுத் தகவல்

பொதுத் தகவல்

ராஜ்மச்சி மலைப் பிரதேசம் மகாராஸ்ர மாநிலத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

வானிலை = 24 டிகிரி செல்சியஸ்

எவ்வளவு நாள் சுற்றலாம் ? = ஒரு நாள் முழுவதும்

எப்போது பயணிக்கலாம் ? = ஜூன் முதல் செப்டம்பர்

அருகில் உள்ள விமான நிலையம் = புனே

Kandoi.sid

ராஜ்மச்சி

ராஜ்மச்சி

பசுமையான மலைகளின் நடுவே அமைந்துள்ள ராஜ்மச்சி மலைப் பிரதேசம் மலையேற்ற சாகச விரும்பிகளால் பெரிதும் கவரக்கூடியது. மலையின் உச்சியில் அமைந்துள்ள கோட்டையை இலக்காகக் கொண்டு மலை ஏறத்துடங்கினால் அடர் காட்டில் மேகக் கூட்டங்கள் காலடி உரச ஒருவித பசுமை வாசம் நம் மனதை கரைத்துவிடும். மேலும், ஆங்காங்கே பாறைகளின் நடுவே பாய்ந்தோடும் நீரோடை புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

Arjun Singh Kulkarni

ராஜ்மச்சி கோட்டை

ராஜ்மச்சி கோட்டை

ராஜ்மச்சி மலைப் பிரதேசத்தின் வரலாற்றுச் சின்னமாக வீற்றுள்ளது ராஜ்மச்சி கோட்டை. சிதிலமடைந்த தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் இயற்கையின் கட்டுப்பாட்டில் பசுமையாகக் காட்டியளிக்கும் இக்கோட்டையின் காட்சி முனையில் இருந்து சுற்றுவட்டார மலை முகடுகளை காண்பது அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும். இக்கோட்டை மலைகள் சார்ந்த சமவெளிப் பகுதியை உயரத்திலிருந்து கண்காணிக்கும் ஒரு காவல் கோட்டையாக விளங்கியிருக்கிறது.

Soumitra Inamdar

பிரம்மிப்பூட்டும் காட்சி முனை

பிரம்மிப்பூட்டும் காட்சி முனை

ராஜமச்சி நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோட்டை மராத்தா மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். கட்டிடக்கலை ஆர்வலர்கள் பார்த்த உடனேயே இது மராத்திய பாணி என்று கூறும் அளவுக்கு தோற்றத்தைக் கொண்டுள்ளது.

ராஜமச்சி சிகரங்களில் ஒன்றின் உச்சியில் இது அமைந்துள்ளதால் இந்த கோட்டை மீதிருந்து கீழே உள்ள இயற்கை அம்சங்களை நன்றாக பார்க்கலாம். பரந்த பசுமை பள்ளத்தாக்குகள், மடிந்து மடிந்து கிடக்கும் மலைகள் என்று பிரமிம்பூட்டும் காட்சிகள் நமக்கு இந்த கோட்டைமீதிருந்து காணக்கிடைக்கின்றன.

Ravinder Singh Gill

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

லோனாவலா

ராஜ்மச்சி மலைத் தொடருக்கு அருகில் உள்ள மிக பிரசித்தமான சுற்றுலாத் தவலம் லோனாவலா. பருவநிலை மற்றும் குளுமை இவற்றை தன்னுள் கொண்டுள்ள இந்த லோனாவலா ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுத் தலமாக புகழ் பெற்றுள்ளது. இந்த மலைப் பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை அதிக அளவில் ஆண்டுதோறும் கவர்ந்திழுக்கிறது. சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் இது மலையேற்றம், நடைப்பயணம் போன்றவற்றுக்கு உகந்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Aalokmjoshi

பிரபு மூக்கு சிகரம்

பிரபு மூக்கு சிகரம்

லோனாவலாவில் அமைந்துள்ள பிரபு மூக்கு சிகரத்தின் உச்சியை கடுமையான மலை ஏற்றத்திற்குப்பிறகே அடையமுடியும். இருப்பினும் உச்சியை அடைந்த பிறகு காணக்கிடைக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் இயல்பு கொண்டவை. சிகரத்திலிருந்து கீழே மலையைச் சுற்றிலும் உள்ள பசுமைச் சமவெளியை கண்குளிர பார்த்து ரசிக்க முடிகிறது.

Ramnath Srinivasan

தங்குமிடம்

தங்குமிடம்

ராஜ்மச்சியில் ஓரிரு நாட்கள் தங்கி சுற்றிப் பார்க்க திட்டமிட்டால் அற்புதமான பல விடுதிகள் அங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரையில் இந்த விடுதிகளில் தங்க முடியும். விலைக்கு தகுந்தவாறு மலைகளின் ரம்மியமான காட்சிகள், தங்கும் வசதிகள் உள்ளன. பயணத்திற்கு முந்தைய நாட்களிலேயே விடுதி அரையை முன்பதிவு செய்வது சிறந்தது. அல்லது, அங்கே உடனடியாகவும் பதிவு செய்து கொள்ள முடியும். இருப்பினும், சீசனுக்கு என சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடினால் விடுதிகளில் சிறமம் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Jyotirmoydeb

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X