Search
  • Follow NativePlanet
Share
» »கலாசார காவலர்களிடமிருந்து தப்பித்து காதலர் தினத்தை கொண்டாட இங்கே செல்லுங்கள்!!

கலாசார காவலர்களிடமிருந்து தப்பித்து காதலர் தினத்தை கொண்டாட இங்கே செல்லுங்கள்!!

காதலர் தினம் என்றுமே ஸ்பெஷல் தான். அதுவும் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை வேறு வருகிறது. வெறுமனே காபி ஷாப், ஷாப்பிங் மால், திரையரங்கம் என்றில்லாமல் வாழ்கையில் என்றைக்கும் மறக்கமுடியாதபடி இந்த காதலர் தினத்தை கொண்டாடிடுங்கள்.

குறிப்பாக திருமணமானவர்கள் தேனிலவுக்கு பிறகு பிக்னிக் மட்டுமே சென்றவர்கள் இந்த வார சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி கொஞ்சல் மொழி பேசிட நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள்.

காதலர் தினத்தை கொண்டாட சற்றே வித்தியாசமான இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

வழக்கமாக காதலர் தினத்தன்று இந்தியாவில் எல்லோரும் செல்லும், செல்ல விரும்பும் ஓரிடம் என்றால் அது தாஜ்மஹால் தான்.

ஆனால் இந்த காதலர் தினத்தன்று சற்றே வித்தியாசமாக இரவு நேரத்தில் தாஜ்மஹாலுக்கு சென்றிடுங்கள்.

Edmund Gall

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

இதமான குளிர் இருவர் கரங்களையும் இளஞ்சூட்டிற்காக ஒன்றாக்கும் இரவு வேளையில் தாஜ்மஹாலின் வெண்பளிங்கு கற்களின் மீது நிலவொளி பிரதிபலிக்கும் அற்புத காட்சியை கண்டு ரசித்திடுங்கள்.

RV1864

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

பிரகாசமான நிலவு வெளிச்சம் இருக்கும் முழு நிலவு நாட்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலை இரவு நேரத்தில் காண அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாதம் காதலர் தினத்தன்று இல்லையென்றாலும் அதற்கடுத்தவாரம் பௌர்ணமி வருகிறது.

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

நிலவொளியில் தாஜ்மஹாலில்:

இதற்கு முன் நீங்கள் தாஜ்மஹாலுக்கு சென்றிருந்தாலும் சரி, இனி தான் முதல்தடவையாக செல்லப்போகிறீர்கள் என்றாலும் சரி, முழு நிலவு நாளன்று செல்வது போல திட்டமிட்டு சென்றிடுங்கள்.

தாஜ்மஹாலின் உண்மையான பேரழகை கண்டு ரசித்திடுங்கள்.

Christopher Blizzard

லடாக்கில்...:

லடாக்கில்...:

எப்போதும் ரொமேன்டிக்கான இடங்களுக்கே சுற்றுலா சென்று போர் அடிக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால் கணவரையோ, மனைவியையோ கூட்டிக்கொண்டு லடாக்கிற்கு ஒரு சாகச பயணம் சென்று இந்த காதலர் தினத்தை இமய மலையின் இயற்கை பேரழகின் மத்தியில் கொண்டாடிடுங்கள்.

லடாக்கில்...:

லடாக்கில்...:

காஷ்மீர் மாநிலத்தில் திபெத்தை எல்லைக்கு அருகே இமயமலையின் மேல் அமைத்திருக்கும் லடாக் மாநிலத்தில் சுற்றிப்பார்க்க நுப்ரா பள்ளத்தாக்கு, பான்காங் சோ ஏரி, ச்பிதுக் புத்த மடாலயம், ரோஹ்டங் கணவாய், சாந்தி ச்தூபா போன்ற இடங்கள் இருக்கின்றன.

லடாக்கில்...:

லடாக்கில்...:

வழக்கமாக நம் வாழ்கையை சதா சர்வநேரமும் ஆக்கிரமித்திருக்கும் அனைத்திலும் இருந்து சில நாட்களுக்கு விடுதலை பெற்று லடாக்கை சுற்றிப்பார்க்கலாம்.

தம்பதியராக லடாகிற்கு வருபவர்கள் தேவையான மருந்துகள், கம்பளி ஆடைகள், போன் பேன்க் போன்றவற்றை கையேடு எடுத்துவருவது நல்லது.

லடாக்கில்...:

லடாக்கில்...:

லடாக் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான பயண தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

அந்தமான் தீவுக்கூட்டத்தில் ஒன்றான ஹேவ்லாக் தீவு தம்பதியராக செல்ல மிகச்சிறந்த இடம். ஒரு பக்கம் பசுமை நிறைந்த வானமும், மற்ற்றொரு பக்கம் வெண்மணல் நிரம்பிய கடற்கரையும், நீல நிறக்கடலும் பூலோக சொர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வைத் தரும்.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து 57கி.மீ வடகிழக்கே இந்த ஹேவ்லாக் தீவு இருக்கிறது.

ஐந்து கிராமங்களை கொண்ட இந்த சிறு தீவின் மொத்த மக்கள் தொகையே சில ஆயிரங்கள் தான். சுற்றுலா மட்டுமே ஒரே தொழிலாக இருக்கிறது.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

இந்த தீவில் இருக்கும் ராதா நகர் கடற்கரை ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையாக டைம்ஸ் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலிபென்ட் பீச், விஜய் நகர் பீச், காலாபாதர் பீச் போன்ற கடற்கரைகளும் இந்த தீவில் உண்டு.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

இந்த தீவில் இருக்கும் தனித்துவமான விஷயம் நாம் யானை மீது அமர்ந்து சவாரி செய்தபடியே ஹேவ்லாக் தீவின் கடற்கரைகளை சுற்றிப்பார்க்கலாம் என்பதே.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

இது தவிர ச்னார்கிளிங், ஸ்கூபா டைவிங் போன்ற கடல் சார் சாகச விளையாட்டுகளும் இத்தீவில் இருக்கின்றன.

கடற்கரை தவிர்த்து அடர்த்தியான ஹேவ்லாக் தீவின் காடுகளுக்குள் பாயும் ஆறுகளில் படகு பயணமும் செல்லலாம்.

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த காதலர் தினத்தை என்றென்றும் மறக்கமுடியாதபடி கொண்டாடி மகிழுங்கள் !!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X