Search
  • Follow NativePlanet
Share
» »புலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா? இத படிங்க

புலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா? இத படிங்க

புலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா? இத படிங்க

காடுகளில் திரிவதென்றால் மேல் நிலை உயிரினமான மனிதர்களுக்கு அலாதி பிரியம். யாருமில்லா காடுகளில் பசுமை போர்த்தி அலைந்து திரிய இந்தியாவெங்கும் எண்ணற்ற காடுகளும், மலைகளும் இருக்கின்றன. பெரும்பாலும் சாகச விரும்பிகளும், இயற்கை ஆர்வலர்களும் செல்லும் சுற்றுலா இப்போது சாதாரண பொதுமக்களையும் ஈர்த்து வருகிறது.

நமது தேசிய விலங்கான புலியை காண காடுகளுக்கே நேரடியாகச் செல்லும் நம் சாகச விளையாட்டுக்கு ஒரு அளவில்லாமல்தான் போய்விட்டது. இருந்தாலும் என்ன வடிவேலு சொல்வது போல போயித்தான் பாப்போமே.. இப்ப என்ன ஆய்டபோகுது..

காடுகளுக்கு அதுவும் புலிகள் வாழும் காடுகளுக்கு செல்ல முடிவெடுத்தப் பின் இந்தியாவை விட்டால் வேறு எந்த நாடு சிறந்ததாக இருக்க முடியும். 2226 புலிகளின் தாயகமான இந்திய காடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தியாவின் தேசிய விலங்கு எனும் பெருமையை விட்டுவிட்டு பாருங்கள். அதைக் காண யாருக்குதான் கண்கள் ஏங்காது.. உதடுகள் வழியாக புலியை நேரில் காணவேண்டும் என அசைவு செய்திருந்தாலும், மனதிலிருந்து அடியோரத்தில் அசைத்து வெளிப்படுத்தப்படும் இந்த சொற்றொடர் மிகவும் மகிழ்ச்சிகரமானது.. நான் புலியைப் பார்த்தேன்... நேருக்கு நேராக.. அது என்னைப் பார்த்து கண் அசைத்தது.

வேட்டையாலும், விபத்துகளாலும் பரிகொடுத்து பல புலிகளின் எண்ணங்களை கழித்துவிட்ட காண்கையில் இந்தியாவில் இத்தனை பெரிய காடுகளில் தற்போது இருக்கும் எண்ணிக்கை என்பது பெருங்கடலாம் தமிழில் இட்ட ஒற்றைக் கொடுஞ்சொல் போலத்தான் கேட்கிறது இயற்கை ஆர்வலரான நமது காதுகளுக்கு. நாம் நினைத்தால் எத்தனை புலிகளை வளர்த்து காடுகளை வளமாக்கியிருக்கலாம்... முன்னோர்கள் வேட்டையாடியதையும், நாம் கவனத்தில் கொள்ளாததையும் கொண்டு புலிகளின் சந்ததிகள் குறைய காரணமாகிவிட்டோம். ஆனாலும் நமக்கு ஒரு வாய்ப்பு. வெறுமனே புலிகளை காடுகளில் இருக்கவிடாமல், அதைப் பற்றி தெரிந்துகொள்வதின் மூலம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விழிப்புணர்வு எனும் மெழுகை ஏற்றி வெளிச்சம் பரவச் செய்யலாம். நம் அடுத்த சந்ததிகள் புலிகளை வெகு எளிதாக அனுகட்டும். வாருங்கள் இந்தியாவில் காணப்படும் அழகிய புலிகள் வாழும் காடுகளை வரிசையாக அடையாளம் காண்போம்.

ஜிம் கார்பெட் புலி பாதுகாப்பு காடுகள், உத்தரகண்ட்

ஜிம் கார்பெட் புலி பாதுகாப்பு காடுகள், உத்தரகண்ட்


ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1936

பெருமை - இந்தியாவின் முதல் தேசிய பூங்கா

பரப்பளவு - 500 ச.கிமீ

சுற்றுலா பிரதேசங்கள் - திக்காலா, பிஜ்ராணி, ஜிர்னா, தோமுன்டா, சோனாநதி

யானை சவாரி - திக்காலா, பிஜ்ராணி

பறவை இனங்கள் - 585

விலங்குகள் - வங்கப் புலிகள், முதலைகள், சிறுத்தைகள், யானைகள்

ஜிம் கார்பெட் பூங்கா மிக அழகிய இயற்கை வளங்களான செடி, கொடி, பூக்கள் தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளது.

அழகான காட்சியமைப்புகளும், இயற்கை சுவாரசியங்களும் அடங்கிய இந்த இடத்துக்கு சென்றுவாருங்கள்.

ரதணம்போர் புலிகள் பாதுகாப்பு காடுகள், ராஜஸ்தான்

ரதணம்போர் புலிகள் பாதுகாப்பு காடுகள், ராஜஸ்தான்

பரப்பளவு - 1134 சகிமீ

விலங்குகள் - புலிகள், சிறுத்தைகள், நரிகள், ஓநாய்கள், முதலைகள்

நீர்வாழ்விகள், இருவாழ்விகள் என நிறைய உயிரினங்கள் காணப்படுகின்றன.

சுற்றுலாத் தளங்கள் - காச்சிடா பள்ளத்தாக்கு,

அருகிலுள்ள நகரம் - சவாய் மதோபூர் (11 கிமீ தொலைவு)

பயண காலம் - பிப்ரவரி மற்றும் மார்ச்

அருகிலுள்ள விமான நிலையம் - 145கிமீ தொலைவிலுள்ள ஜெய்ப்பூர்

சுந்தர்பன் புலிகள் பாதுகாப்பு காடுகள், மேற்கு வங்கம்

சுந்தர்பன் புலிகள் பாதுகாப்பு காடுகள், மேற்கு வங்கம்

மொத்தப் பரப்பளவு - 2585சகிமீ

ஆறுகள் - கங்கா, பிரம்மபுத்ரா, மேக்னா

புலிகளின் எண்ணிக்கை - 400

அழகிய பசுமையான காடுகளில் இந்த புலிகளின் எண்ணிக்கை என்பது தற்போது எடுக்கப்பட்ட முடிவுகள், திட்டங்கள் வாயிலாக அதிகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதே ஆகும்.

அருகாமை விமான நிலையம் - கொல்கத்தா 112 கிமீ

அருகாமை ரயில் நிலையம் - கன்னிங் 48 கிமீ

பாந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

பாந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்


செல்லவேண்டிய காலம் பிப்ரவரி - ஜூன்

நேரம்

குளிர்காலம்

காலை 6 மணி முதல் மதியம் 11 மணி

மாலை 3 மணி முதல் 6 மணி

கோடைக் காலம்

காலை 5.30 மணி முதல் நண்பகல் 10.30 மணி

மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை

சவாரி கட்டணம் - 5500ரூ முதல் 6500ரூ வரை

சரிஸ்கா புலிகள் பாதுகாப்பு காடுகள், ராஜஸ்தான்

சரிஸ்கா புலிகள் பாதுகாப்பு காடுகள், ராஜஸ்தான்

செல்லச் சிறந்த காலம்

அக்டோபர் முதல் ஜனவரி வரை

செல்லும் நேரம்

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை

மற்ற நாட்களில் காலை 6.30 மணி முதல் 5 மணி வரை

சவாரி கட்டணம் - 500 ரூ முதல் 600 ரூ வரை

நுழைவுக் கட்டணம்- 20ரூ இந்தியர்களுக்கு

100 ரூ வெளிநாட்டவர்களுக்கு

புகைப்படக் கருவி கட்டணம் - 200 ரூ

பண்ணா தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

பண்ணா தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

காலம் - டிசம்பர் - மார்ச்

நேரம்

குளிர்காலம்

சூரிய உதயத்திலிருந்து நண்பகல் 11 மணி வரை

மாலை 3 மணியிலிருந்து இரவு சூரிய மறைவு வரை

கோடைக் காலம்

சூரிய உதயத்திலிருந்து நண்பகல் 11 மணி வரை

மாலை 4 மணியிலிருந்து இரவு சூரிய மறைவு வரை

நுழைவுக் கட்டணம்

இந்தியர்கள் 40 ரூ

வெளிநாட்டுவர் 500ரூ

ஜீப் வாடகை 1500 அரை நாள்

புகைப்படக் கருவிகள் 200ரூ

பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகள், கேரளம்

பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகள், கேரளம்

பரப்பளவு - 777 சகிமீ

விலங்கினங்கள் - சாம்பார் மான், காட்டுக் கரடி, லங்கூர் குரங்கு, யானைகள், 40 புலிகளும் காணப்படுகின்றன.

பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகம்

பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகம்

செல்லும் நேரம் - காலை 6.30மணி முதல் 8.30 மணி வரை

மாலை 3.30மணி முதல் 5.30 மணி வரை

நுழைவுக் கட்டணம்

இந்தியர்கள் 300ரூ

வெளிநாட்டவர்கள் 1500ரூ

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X