Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் ஜூலை மாதத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

இந்தியாவில் ஜூலை மாதத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

ஆறுகள், ஏரிகள், மலைகள், சமவெளிகள் மற்றும் வித்தியாசமான நிலப்பரப்புகள் என பல விசித்திரங்கள் நிறைந்த நாடு நம் இந்தியா. கோடை விடுமுறையை தவறவிட்டவர்களுக்கு ஜூலை மாதம் ஒரு அற்புதமான யோசனையை வழங்குகிறது. கோடை வெயில் முடிந்து பருவமழை தொடங்கும் இந்த ஜுலை மாதத்தில், குளிர் காற்றும் சாரலும் நிறைந்து நம்மை கவர்ந்திழுக்கும் இயற்கை காட்சிகளை விரிவுபடுத்துகிறது. ஜூலையில் பெய்யும் பருவமழை கோடைகாலத்தின் கடுமையான வெப்பத்தை தணித்து ஈரப்பதத்தோடு கூடிய ஒரு இனிமையான ஓய்வை கொடுக்கிறது. ஜூலை மாதத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்!

கேரளா

கேரளா

என்ன ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிப்பிடாமல் பொதுவாக ஒரு மாநிலத்தின் பெயரையே கூறுகிறோம் என்று யோசிக்கிறீர்களா? ஆம்! கேரளா சந்தேகத்திற்கு இடமின்றி தென்னிந்தியாவில் ஜூலை மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். நிரம்பி வழியும் ஆறுகள், பசுமையான தாவரங்கள், மலைகள், உப்பங்கழிகள் மற்றும் தென்னை மரங்கள் என கேரளா முழுவதும் ஜூலை மாதத்தில் பூத்து குலுங்குகிறது. ஜூலை மாதத்தில் கேரளாவின் சராசரி வெப்பநிலை 20 முதல் 24 வரை நிலவுகிறது.
ஹவுஸ்போட்டில் செல்வது, தேயிலை தோட்டங்களை சுற்றிப் பார்ப்பது, ஆயுர்வேத சிகிச்சையில் ஈடுபடுவது, வனவிலங்குகளை கண்டு மகிழ்வது முதல் உள்ளூர் உணவு வகைகள் வரை, உங்கள் பயண அனுபவத்தை செழுமையாக்கும் பல விஷயங்கள் கேரளாவில் உள்ளன. கொச்சி, குமரகம், ஆலப்புழா, மூணாறு, வார்க்காலா, தேக்கடி, வேம்பநாடு, பொன்முடி, கோவளம் ஆகியவை கேரளாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.
திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. கேரளா இந்தியாவின் பிற பகுதிகளுடன் சாலை, விமானம் மற்றும் ரயில் பாதைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

லடாக்

லடாக்

இந்தியாவின் தலைப்பாகையில் அமைந்துள்ள லடாக் நீங்கள் கட்டாயம் ஜூலை மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலாத் தலமாகும். மலைச் சிகரங்கள், பிரமிக்க வைக்கும் ஏரிகள், இனிமையான வானிலை, மாய பள்ளத்தாக்குகள் மற்றும் கண்களுக்கு இதமான இயற்கைக்காட்சிகள் லடாக்கை இந்தியாவில் ஜூலை மாதத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக ஆக்குகிறது. அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்ப்பது, திருவிழாக்கள், உணவு மற்றும் கலாச்சார ஆய்வு, நட்சத்திரங்களைப் பார்ப்பது, ரிவர் ராஃப்டிங், மலையேற்றம், மவுண்டன் பைக்கிங், ஜீப் சஃபாரி, மோட்டார் சைக்கிள் சாலைப் பயணம் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடலாம்.
ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, பாங்கோங் சோ ஏரி, ஸ்பிடுக் கோம்பா, திக்சே மடாலயம், கர்துங்-லா பாஸ், மார்கா பள்ளத்தாக்கு, நுப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ் தேசிய பூங்கா, ராயல் லே அரண்மனை, சாந்தி ஸ்தூபா, காந்த மலை, கார்கில் ஆகியவை லடாக்கில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
லடாக்கில் வானிலையானது 25 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. குஷோக் பகுலா ரிம்போச்சி மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையம் லடாக்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும்.

லோனாவாலா, மகாராஷ்டிரா

லோனாவாலா, மகாராஷ்டிரா

புனே மற்றும் மும்பைக்கு அருகில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள லோனாவாலா, மகாராஷ்டிராவில் மழைக்காலங்களில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலம் ஆகும். சுற்றிலும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் மற்றும் மலைகள் இருப்பதால், முகாம், மலையேற்றம் மற்றும் பிற சாகச விளையாட்டுகளுக்கு இது ஒரு பிரபலமான இடமாகும்.
பாஜா குகைகள், புஷி அணை, கார்லா குகைகள், ராஜ்மாச்சி கோட்டை, ரைவுட் ஏரி போன்றவை லோனாவாலாவில் உள்ள பிரபலமான சுற்றுலா அம்சங்களாகும். பைக்கில் உல்லாசப் பயணம், ட்ரெக்கிங், பொழுதுபோக்கு பூங்கா, மெழுகு அருங்காட்சியகம், சிக்கி ஷாப்பிங் மற்றும் பலவற்றில் நீங்கள் ஈடுபடலாம்.
லோனாவாலாவிற்கு அருகிலுள்ள உள்நாட்டு விமான நிலையம் புனேவில் உள்ள லோஹேகான் விமான நிலையம் ஆகும். பயணிகள் எந்த இந்திய நகரத்திலிருந்தும் புனே அல்லது மும்பைக்கு சென்று, பின்னர் உள்ளூர் வாகனத்தை வாடகைக்கு எடுத்து லோனாவாலாவை அடையலாம்.

 கொடைக்கானல், தமிழ்நாடு

கொடைக்கானல், தமிழ்நாடு

மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் கொடைக்கானல் ஒரு சிறந்த ஜூலை மாத சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக ஜூலை மாதத்தில், மழைக்காலம் அதன் அழகை பன்மடங்கு கூட்டுகிறது. அதன் புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், காடுகள் மற்றும் ஏரிகள் இந்தியாவில் ஜூலை மாதத்தில் எங்கு செல்லலாம் என்று யோசிக்கும்போது விடுமுறைக்கு சரியான அமைப்பை வழங்குகிறது.
கொடைக்கானல் ஏரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள், டால்பின் நோஸ் ராக்ஸ், செம்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி ஆகியவை கொடைக்கானலில் பார்க்கக்கூடிய சிறந்த இடங்களாகும்.
ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 12 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. மதுரை விமான நிலையம் மற்றும் கொடைக்கானல் ரோட் ஆகியவை கொடைக்கானலுக்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும்.

குடகு, கர்நாடகா

குடகு, கர்நாடகா

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றழைக்கப்படும் குடகு குளிர்ந்த காலநிலை, தேயிலை, மசாலா தோட்டங்கள் மற்றும் பசுமையான பரந்த நிலப்பரப்பிற்கு பிரபலமானது. யானை சவாரி, ரிவர் ராஃப்டிங், காபி மற்றும் மசாலா ஷாப்பிங், உணவு மற்றும் கலாச்சார ஆய்வு, ட்ரெக்கிங், கேம்ஃபின், படகு சவாரி, ஜீப் சஃபாரி, மற்ற பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பது என பொழுதை ஆனந்தமாக கழிக்கலாம்.
தடியாண்டமோல் சிகரம், ராஜாவின் இருக்கை, மடிகேரி கோட்டை, காவிரி நிசர்கதமா, ஓம்காரேஷ்வரா கோயில், நாகர்ஹோல் தேசிய பூங்கா மற்றும் நம்ட்ரோலிங் மடாலயம் ஆகியவை குடகில் பார்க்க வேண்டிய இடங்களாகும். பகலில் 20 டிகிரியாக இருக்கும் வெப்பநிலை இரவில் 13 டிகிரியாக குறைகிறது. மங்களூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் மைசூர் சந்திப்பு ஆகியவை குடகிற்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும்.

வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ், உத்தரகண்ட்

வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ், உத்தரகண்ட்

வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ் என்றழைக்கப்படும் பூக்களின் பள்ளத்தாக்கின் அழகை ஆராயக்கூடிய சரியான நேரம் ஜூலை மாதமாகும். அழகான மற்றும் கம்பீரமான ஜான்ஸ்கர் மலைத்தொடர்களின் பின்னணியில் இருக்கும் இந்த இடம் உலக பாரம்பரிய தளமத்தில் ஒன்றாகும். ஜூலை மாதத்தில், முழுப் பகுதியும் சாக்சிஃப்ரேஜ், காட்டு ரோஜாக்கள், ஜெரனியம், நீல கோரிடாலிஸ் போன்ற பரந்த அளவிலான பூக்களால் நிரம்பியிருக்கும். இது பார்ப்பதற்கே ஒரு கண்ணிற்கினிய சொர்க்கம் போன்று காட்சியளிக்கிறது.
வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ் தேசிய பூங்கா, ஹேம்குந்த் சாஹிப் மற்றும் புஸ்பாவதி நதி, நந்தா தேவி தேசிய பூங்கா ஆகியவற்றை நீங்கள் ஆராய்ந்து மகிழலாம். ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 15 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது.
ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஆகியவை ரிஷிகேஷ் ரயில் நிலையம் வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்க்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும்.

தவாங், அருணாச்சலப் பிரதேசம்

தவாங், அருணாச்சலப் பிரதேசம்

பல புத்த மடாலயங்களுக்குப் பெயர் பெற்ற இந்த மலைவாசஸ்தலம், நகர வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு அமைதியை தேடுபவர்களின் பெரும் எண்ணிக்கையைக் காண்கிறது. இந்த வினோதமான மலைவாசஸ்தலம், வசீகரிக்கும் அழகுடன் பார்வையாளர்களை மயக்குகிறது. செலா பாஸில் உள்ள பாரடைஸ் ஏரி, தவாங் மடாலயம், கோரிச்சென் சிகரம், தக்ட்சாங் கோம்பா, நுரானாங் நீர்வீழ்ச்சி மற்றும் பங்காங் டெங் சோ ஏரி ஆகியவை தவாங்கின் முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
தவாங்கின் வானிலை 5 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. சலோனிபாரி விமான நிலையம், குவஹாத்தி விமான நிலையம் ஆகியவை தவாங்கிற்கு அருகிலுள்ள விமான நிலையங்களாகும்.

கோவா

கோவா

சூரியன் முத்தமிடும் கடற்கரைகள், ரம்மியமான இரவு வாழ்க்கை, வண்ணமயமான சந்தைகள் மற்றும் காலனித்துவ கால தேவாலயங்கள் காரணமாக ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். பாகா, அஞ்சுனா, கேண்டலிம் போன்ற அரபிக்கடலை ஒட்டிய பல கடற்கரைகள், துத்சாகர் நீர்வீழ்ச்சி, மொல்லம் தேசிய பூங்கா, இரவு ஷாப்பிங், பலவகையான உணவு என கோவாவில் பொழுது போவதே தெரியாது என்பது தான் உண்மை.
கோவாவில் வானிலை 24 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. கோவாவில் உள்ள ஒரே விமான நிலையம் தபோலிம் விமான நிலையம் ஆகும். மேலும் கோவா ரயில் மற்றும் சாலை மூலம் நாட்டின் பல்வேறு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X