Search
  • Follow NativePlanet
Share
» »மேகமலையில் கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்டுகளின் லிஸ்ட் இதோ!

மேகமலையில் கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்டுகளின் லிஸ்ட் இதோ!

தேனி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகான மேகமலை பச்சா குமாச்சி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கு சென்றாலும் பசுமை, நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான வானிலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகு என மேகமலை நம்மை கட்டி போடுகிறது."ஹைவேவிஸ் மவுன்டெய்ன்ஸ்" என்றழைக்கப்படும் இந்த மேகமலை இயற்கையின் நடுவே சில அமைதியான நேரத்தை இளைப்பாறுவதற்கு ஏற்ற இடமாகும்.

மேகமலையின் சிகரங்கள் எப்போதும் மேகங்களால் மூடப்பட்டிருக்கும், அவை நம்மை உரசி செல்வதை நாமே உணரலாம், இதனாலேயே உள்ளூர்வாசிகள் இதை மேகமலை என்று அழைக்க ஆரம்பித்தனர். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு வார இறுதியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும். மேகமலையில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ!

மேகமலை வனவிலங்கு சரணாலயம்

மேகமலை வனவிலங்கு சரணாலயம்

பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில், மேகமலை வனவிலங்கு சரணாலயம் 63,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து பல வனவிலங்குகளுக்கு புகலிடமாக காட்சியளிக்கின்றது. யானைகள், புலி, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், கவுர், புள்ளிமான், சாம்பார் மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி-லாங்கூர் வால் மக்காக், காமன் லாங்கூர், பானெட் மக்காக், சோம்பல் கரடி, சாம்பல் நிற ஜங்கிள் ஃபௌல், வழுவழுப்பான பூசப்பட்ட நீர்நாய் மற்றும் பறக்கும் அணில் ஆகிய வனவிலங்குகளையும் விஸ்கர் புல்புல், காமன் ஐயோரா, வெள்ளை-புருவம் கொண்ட வாக்டெயில், கிரே வாக்டெயில், பைட் புஷ் அரட்டை, பிளைத்தின் ரீட் வார்ப்ளர், பார்ன் ஸ்வாலோ, ஸ்பாட் டவ், ஏசியன் பாரடைஸ் ஃப்ளைகேட்சர், லாங்-வால்ட் ஷரைக் போன்ற பறவை வகைகளையும், பல வித்தியாசமான தாவரங்களையும் கண்டு களிக்கலாம்.

சுருளி அருவி

சுருளி அருவி

சின்ன சுருளி அருவி மேகமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அடர்ந்த பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மேகமலை மலையில் உருவானதால் கிளவுட்லேண்ட் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சுமார் 190 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். பசுமையான மரங்களுக்கு இடையே ஓடும் நீரின் அழகைக் காண மக்கள் எப்போதுமே இங்கு வந்துக் கொண்டு இறக்கிறார்கள்.

மகாராஜா மெட்டு வியூ பாயின்ட்

மகாராஜா மெட்டு வியூ பாயின்ட்

இரவங்களார் அணையிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த வியூபாயின்ட் மேகமலையில் உள்ள பிரபலமான இடமாகும். மேகமலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் நின்றபடி ரசிப்பதற்கு நீங்கள் மகாராஜா மெட்டு வியூ பாயின்ட்டுக்கு நிச்சயம் வருகை தர வேண்டும். பாறைகள் நிறைந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் பசுமையானது நிச்சயம் கட்டாயம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேகமலையில் உள்ள அணைகள்

மேகமலையில் உள்ள அணைகள்

மேகமலையில் மொத்தமாக ஆறு அணைகள் உள்ளன. ஒவ்வொரு அணையும் அதன் சொந்த அழகுடனும் தனித்துவத்துடனும் காணப்படுகிறது, மேலும் நிச்சயம் நாம் பார்வையிடுவதற்கு தகுந்தது. ஹை வேவிஸ் அணை, இரவங்களார் அணை, தூவாணம் அணை, வன்னியர் அணை, மணலார் அணை மற்றும் தேக்கடி அணை ஆகியவை இதில் அடங்கும். நீர்தேக்கதிற்க்கு பயன்படுவது மட்டுமின்றி, பசுமையான காடுகளாலும் மலைகளாலும் சூழப்பட்ட இவை யாவும் பிக்னிக் ஸ்பாட்டுகளாகவும் மாறிவிட்டன.

காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள்

காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள்

பசுமையான தேயிலை செடிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கின்றன, மேலும் இயற்கையை சுற்றி நேரத்தை செலவழிப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கும் அமைதி வேறு எதிலுமே நமக்கு கிடைக்காது என்பதை நாம் அறிவோம். அழகிய காபி, ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஒன்றிற்குச் செல்லாமல் மேகமலையிலிருந்து வீடு திரும்பினால், உங்கள் பயணம் என்றென்றும் முழுமையடையாது.

கோயில்கள்

கோயில்கள்

அழகான மேகமலையில் சில ஆன்மீக ஸ்தலங்களும் உண்டு. மேகமலை மலைத்தொடரில் மலை உச்சியில் அமைந்துள்ள முருகன் கோயில், மக்கள் ஆசிர்வாதம் பெறுவது மட்டுமின்றி, மலை உச்சியில் அமர்ந்திருப்பதால், அந்த இடத்தின் அழகிய அழகைக் காணவும் பெருமளவு மக்கள் கூட்டம் இங்கு வருகை தருகிறது. பேருந்து நிலையத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்களா தேவி கோயில் மேகமலையில் உள்ள சக்தி வாய்ந்த கோயிலாகும். மலையின் உச்சியில் பாறைகளால் கட்டப்பட்ட இக்கோயிலை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

மேகமலையில் தங்குவதற்கு என பெரிய ஹோட்டல்கள் எதுவும் இல்லை, அதே போல மேகமலையின் சுற்றுலாத் தலங்களை ஒரே நாளில் பார்த்து விடலாம். ஆகையால் தேனியில் தங்குவேதே நல்லது. இரண்டு நாட்களில் வார இறுதி சுற்றுலா சென்று பணிக்கு திரும்ப விரும்புவோருக்கு மேகமலை ஒரு சரியான ஓய்வு கொடுக்கும் இடமாகும்.

மேகமலையை எப்படி அடைவது?

மேகமலையை எப்படி அடைவது?

118 கிமீ தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமும் ரயில் நிலையமும் மேகமலைக்கு அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும். இந்த விமான நிலையமும் ரயில் நிலையமும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்தும் ரயில் நிலையத்திலிருந்தும் வாடகை கார்கள் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் தமிழக அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பொது பேருந்துகள் வாயிலாகவும், தனியார் பேருந்து வாயிலாகவும் நீங்கள் மேகமலையை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X