Search
  • Follow NativePlanet
Share
» »ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கைபர், போலன் கணவாய்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கைபர், போலன் கணவாய்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கைபர், போலன் கணவாய்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க் பரிவார்கள் முதலானோர் மறுத்தே வந்திருக்கின்றனர்,. ஆனால் ஆதாரம் மூலம் அவர்கள் கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டது. அப்படி அவர்கள் வந்த கணவாய்கள் எங்கே இருக்கிறது அவர்கள் வந்த வழியில் என்னென்ன விசயங்களை நாம் காணவேண்டும் என்பன பற்றி இந்த பதிவு விளக்குகிறது.

 கைபர் போலன் கணவாய்கள் இந்தியாவில் உள்ளதா?

கைபர் போலன் கணவாய்கள் இந்தியாவில் உள்ளதா?

இல்லை... நிச்சயமாக இந்த கணவாய்கள் இந்தியாவில் இல்லை. தற்போதைய பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் இந்த கணவாய்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள இந்த இரு கணவாய்கள் வழியாகத்தான் ஆரியக் கூட்டம் இந்தியாவை அடைந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள இந்தியாவில், இந்த கணவாய்களிலிருந்து எப்படி வந்திருக்கமுடியும். இதற்கு சற்று வரலாற்று சான்றுகளைத் தேடவேண்டும். அத்துடன் சில வட இந்திய பகுதிகளையும் நாம் காண்போம்.

 இந்தியாவின் நுழைவு வாயில்

இந்தியாவின் நுழைவு வாயில்

கைபர் கணவாய் வழியாக வந்திருந்தால், அமிர்தசரஸ் வழியாகவும், போலன் கணவாய் வழியாக வந்திருந்தால்,குஜராத்தின் புஜ் வழியாகவும் தற்போதைய இந்தியாவை அடையலாம். எனவே, பாகிஸ்தானிலிருந்து இதுதான் இந்தியாவின் நுழைவு வாயில். அமிர்தசரஸ் பற்றி நாம் நிறைய பார்த்துவிட்டோம். அதைக் குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

KameshD

புஜ் - எங்கே எப்படி

புஜ் - எங்கே எப்படி

புஜ் குஜராத் மாநிலத்தின் அழகிய நகரம். செந்நாரைகளின் ஓய்விடம். ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயரை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் இது புஜங் என்ற மிகப் பெரிய சர்ப்பம் வாழும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த சர்ப்பத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு கோயில் மலையுச்சியில் காணப்படுகிறது.

Rahul Zota

 புஜ் நகரத்தின் புகைப்படங்கள்

புஜ் நகரத்தின் புகைப்படங்கள்

புஜ் நகரத்தின் புகைப்படங்களைப் பற்றி பார்க்கும்போது, காவ்தா எனும் கிராமத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அதுபோல, பிரக் மஹால், தமத்கா, கேரா, காலோ துங்கார், பாலைவன சரணாலயம், ஹமீர்ஸர் ஏரி, கட்ச் அருங்காட்சியகம், ராம்கந்த், ரஞ்சித் விலாஸ், சதார்திஸ், ஷரத் பௌக், அயினா மஹால், சுவாமி நாராயண் கோவில் உள்ளிட்ட பல இடங்களின் புகைப்படங்களை நாம் காணவேண்டும். இந்த கட்டுரையில் ஒவ்வொன்றாக விவரிக்கப்படும்.

KameshD

 புஜ் நகரத்தின் வரலாறு தெரியுமா?

புஜ் நகரத்தின் வரலாறு தெரியுமா?


வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி, இந்திய வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது புஜ் நகரம். இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகம் மற்றும் மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து, ஜடேஜா ரஜபுத், குஜராத் சுல்தனேட் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரை வரலாற்றின் அனைத்து காலகட்டங்களின் மௌன சாட்சியாக புஜ் நகரம் இருந்து வந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில், முகாலயப் பேரரசின் வீழ்ச்சியினால் உருவான அப்போதைய அரசியல் சூழலில் இருந்து கட்ச் பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ராவ் கோட்ஜி, புஜ் கோட்டையைக் கட்டியிருக்கிறார். இந்த கோட்டை, நகரைச் சுற்றிலும் சுமார் 11 அடி சுவர்களையும், 51 துப்பாக்கிகளையும் கொண்டுள்ளது.

KameshD

 புஜ் நகர வரைபடம்

புஜ் நகர வரைபடம்

புஜ் நகரம் எங்கே இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெளிவாக தெரிந்திருக்காது,. பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருக்கும் இந்த இடம்.

சரியாக பாகிஸ்தானிலிருந்து ஒரு மணி நேரத்திலும், குஜராத்தின் அஹமதாபாத்திலிருந்து 331 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த இடம்.

 அழகிய சுற்றுச்சூழலுடன் கூடிய சுவாமி நாராயண் கோயில்

அழகிய சுற்றுச்சூழலுடன் கூடிய சுவாமி நாராயண் கோயில்


புஜ் நகரின் ராம்கந்த் படிக்கிணற்றின் அருகில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயில் அழகிய சுற்றுச்சூழலுடன் காணப்படுகிறது. இந்த வழிபாட்டு ஸ்தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியோரின் வண்ணமயமான மர சிற்பங்கள், நாட்டின் இதர சுவாமி நாராயண் கோயில்களில் இருப்பதைப் போன்றே இங்கும் காணப்படுகின்றன.

gujarattourism

 பேரமைதியை புகுத்தும் ராம்கந்த் படிக்கிணறு

பேரமைதியை புகுத்தும் ராம்கந்த் படிக்கிணறு


நீங்கள் கட்ச் அருங்காட்சியகத்துக்கு அருகிலோ அல்லது புஜ் நகரின் ராம் தன் கோயிலுக்கு அருகிலோ இருந்தீர்களானால், இக்கிணற்றின் படிக்கட்டில் சில படிகள் இறங்கினால் பேரமைதியை உணர முடியும். ராம் தன் கோயிலுக்கு அருகில் உள்ள இக்கிணற்றின் அருகாமையில் சில நிமிடங்கள் கழிப்பது மனதுக்கு இதமளிக்கும் என்றால், அதன் ஒரு புறத்தில் தீட்டப்பட்டுள்ள இராமாயண கதாப்பாத்திரங்களின் அழகிய சித்திரங்களையும், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்ளையும் பார்த்து ரசிப்பது மேலும் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது.

gujarattourism

 கோடி கோடியாய் கொள்ளை போன பிரக் மஹால்

கோடி கோடியாய் கொள்ளை போன பிரக் மஹால்

19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும். ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே சுகே சனம், லகான் மற்றும் இவற்றிற்கு முன் வெளிவந்த சில குஜராத்தி திரைப்படங்கள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன. எனினும், 2001 இல் நிகழ்ந்த நிலநடுக்கங்களாலும், 2006 இல் நிகழ்ந்த கொள்ளையின் போது, கொள்ளையர்கள் பெருமதிப்புடைய ஏராளமான கலைப்பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாலும் இந்த மாளிகை மிகுந்த சிதைவுக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், இது பொதுமக்கள் வந்து பார்வையிடும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிரதான அரண்மனைக் கூடத்தை சென்று பார்க்கலாம்; மேலும், இந்த நகரின் கொள்ளை கொள்ளும் அழகை முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடியதான மணி கோபுரத்துக்கும் சென்று பார்க்கலாம். இரண்டாம் ராவ் பிரக்மால்ஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட பிரக் மஹால், 1865 ஆம் ஆண்டில், அப்போதே சுமார் 3.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.

gujarattourism

 புஜ் ஷாப்பிங்

புஜ் ஷாப்பிங்

புஜ் நகரம், கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகளுக்கு பிரபலமாக விளங்கும் சுவாரஸ்யமான நகரங்களின் உறைவிடமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. தமத்காவும் அந்நகரங்களுள் ஒன்றாகும். புஜ் நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமான இது, அற்புதமான அஜ்ரக் அச்சுரு தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக விளங்கும் கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்குகிறது.
gujarattourism

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X