Search
  • Follow NativePlanet
Share
» »ஊர் முழுக்க தேவாலயம், வெனிஷ் நகர தோற்றம் கொண்ட இந்தியத் தீவு!

ஊர் முழுக்க தேவாலயம், வெனிஷ் நகர தோற்றம் கொண்ட இந்தியத் தீவு!

தியூ, தமன் சுற்றுலா அம்சங்களில் பலவிதமான கலாச்சாரங்களின் கலவையை உணர முடிகிறது. அவற்றில் அயல் நாட்டைப் போலவே தோற்றமளிக்கும் தேவாலயங்கள் குறித்து அறிந்து கொள்வோம் வாங்க.

அமைதியான சூழல், சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளிட்டவற்றைக் கொண்டதுதான் தியூ என்னும் தீவு. குஜராத் மாநிலத்தின் அருகில் சௌராஷ்டிரா தீபகற்ப பகுதியின் தென்முனையில் அரபிக்கடலால் சூழப்பட்டு அமைந்துள்ள இப்பகுதி புராதன காலத்திலும் வரலாற்று காலத்திலும் இந்த பல மன்னர்கள் மற்றும் ராஜ வம்சங்களால் ஆட்சி செய்யப்பட்டு இன்றும் அந்த நினைவுகளை தன்னுள் கொண்டுள்ளது. ஒரு குறுகிய கால்வாய் ஒன்று தியூ தீவுப்பகுதிக்கும் கடற்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. தியூ, தமன் நகர சுற்றுலா அம்சங்களில் பலவிதமான கலாச்சாரங்களின் கலவையான பாதிப்புகளை உணர முடிகிறது. அவற்றுள் அயல் நாட்டைப் போலவே தோற்றமளிக்கும் தேவாலயங்கள் குறித்து அறிந்து கொள்வோம் வாங்க.

செயிண்ட் தாமஸ் தேவாலயம்

செயிண்ட் தாமஸ் தேவாலயம்


தியூ கோட்டை வளாகத்தின் சுவரை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற அமைப்பில் செயிண்ட் தாமஸ் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.
காதிக் பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இது வெண்ணிறம் பூசப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற அமைப்பில் காலத்தால் தேய்மானமடைந்து மங்கலாய் காட்சியளிக்கும் போர்த்துகீசிய சித்தரிப்புகள் மற்றும் ஓவியங்கள் அmக்காலத்தை நினைவுகூறுகின்றன.

Shakti

செயிண்ட் பால் தேவாலயம்

செயிண்ட் பால் தேவாலயம்


தியூவில் உள்ள செயிண்ட் பால் தேவாலயம் கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித பால் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது. போர்த்துக்கீசியர்களால் தியூ நகரத்தில் கட்டப்பட்ட மூன்று சர்ச்சுகளில் இது ஒன்று மட்டுமே இன்றும் kக்கள் பராமரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவை பரோக் பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதன் உட்பகுதியில் பல நுணுக்கமான மர அலங்கார வேலைப்பாடுகளை காண முடியும்.

SidRauniar

அங்கஸ்டியாஸ் தேவாலயம்

அங்கஸ்டியாஸ் தேவாலயம்


தமன் நகரத்தில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோட்டை போன்ற தோற்றம் கொண்டது இந்த அங்கஸ்டியாஸ் தேவாலயம். போர்த்துகீசிய தளபதியான அல்ஃபான்ஸோ டி அல்புகெர்க் என்பவர் பீஜாப்பூர் சுல்தானை வென்றிட்ட 1510ம் ஆண்டை நோக்கி இதன் வரலாற்று பின்னணி நீள்கிறது. இதே இடத்தில்தான் முதல் உலகப்போரில் மரித்த வீரர்களும் புதைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arabsalam

சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்

சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்


ரோமானிய மற்றும் போர்த்துகீசிய கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கும் இத்தேவாலயத்தில் தங்க நிற மரப்பீடம், கலையம்சம் நிரம்பிய வாசல் அமைப்புகள், நுணுக்கமான வடிவமைப்புகள் பார்வையாளர்கள் ஈர்க்கிறது. ரோமன் கத்தோலிக்க பாணியில் வடிக்கப்பட்டுள்ள ஆறு குருமார்களின் அழகிய சிலைகள் இங்கு பார்வையாளர்களை கவரும் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

Shruti Dada

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்


தமனில் உள்ள சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ் தேவாலயத்தின் சிறப்பம்சம் இதன் நுழைவாயில் தான். ஒரு அழகான சிலுவை மற்றும் மலர் அலங்கார அம்சங்களோடு போர்த்துக்கீசியத்தில் சில குறிப்புகளும் உள்ளன. இச்சுவரை ஒட்டியவாறே காணப்படும் ஒரு சிறிய குகை போன்ற உள்ளறை அமைப்பில் அன்னை மேரியின் உருவத்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

User:Ggia

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி


தமனில் உள்ள இத்தேவாலயம் வெளிப்புறத்தில் சாதாரண தோற்றத்துடன் காட்சியளித்தாலும் உட்பகுதியில் பல அலங்கார அம்சங்களைக் கொண்டுள்ளது. பெரும்பகுதி மரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் சித்திரப்பொறிப்புகள் மற்றும் ஓவியக்காட்சிகள் போன்றவை போர்த்துகீசிய பாணியில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Sémhur

சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி

சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி


தியூவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சுகளில் ஒன்றாக இந்த சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி புகழ் பெற்றிருக்கிறது. இந்த தேவாலயத்தின் கட்டுமானமும் வடிவமைப்பும் ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. படிக்கட்டுகளில் ஏறி சென்றடையும்படியாக இரண்டு நுழைவாயில் அமைப்புகளை கிழக்கு மற்றும் வடக்குப்பகுதியில் இந்த தேவாலயம் கொண்டுள்ளது.

Starlight

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X