Search
  • Follow NativePlanet
Share
» »இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..!

இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..!

தலை சுற்றவைக்கும் வகையில் ஐந்தாயிரம் அடிக்கும் மேலுயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத் தலத்துக்கு தில்லு இருக்குறவங்க மட்டும் போய் பாருங்க.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வழக்கமான தலங்களைத் தவிர்த்து கொஞ்சம் திகிலும், சாகசமும் நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமான மலைப் பிரதேசங்களையும், கடற்கரைகளையும் விட இதுபோன்ற சாகசம் நிறைந்த தலங்கள் காலம் கடந்தாலும் மறக்க முடியாத பல நினைவுகளைத் தரும். அந்த வகையில் தலை சுற்றவைக்கும் வகையில் ஐந்தாயிரம் அடிக்கும் மேலுயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத் தலத்துக்கு தில்லு இருக்குறவங்கெல்லாம் சென்று வரலாம் வாங்க.

பச்சை மலைச்சரிவுகள்

பச்சை மலைச்சரிவுகள்


மஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலைக்காட்சித் தலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்.

Shalini31786

மழைக்கால அருவிகள்

மழைக்கால அருவிகள்


மழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்றும், ஆரவாரித்துக் கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.

Karthik Easvur

நோய் நிவாரணி

நோய் நிவாரணி


மஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. அதோடு இங்குள்ள சுற்றுச்சூழல் மிகத் தூய்மையானதாகவும் இருப்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் மஹாபலேஷ்வர் வந்து ஓய்வெடுப்பது உடல் நலத்துக்கும், துரித முன்னேற்றத்துக்கும் மிக நல்லது என்று சொல்லப்படுகிறது.

Sagar chauhan bk

காட்சி முனைகள்

காட்சி முனைகள்


வில்சன் முனை அல்லது சன்ரைஸ் முனை எனும் மலைக்காட்சித் தலம் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். இவற்றையடுத்து ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் காட்சித் தலங்களும் அவசியம் பார்க்க வேண்டியவையாகும்.

Sankhyan kumar

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


மஹாபலேஷ்வர் வரும் பயணிகள் வியூ பாயிண்ட்ஸ் முழுக்க பார்த்து ரசித்த பிறகு சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் கோட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், மஹாபலேஷ்வர் கோவில் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்றுவரவேண்டும்.

Dinesh Valke

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. மஹாபலேஷ்வரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன.

Ajinkya2017

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X