Search
  • Follow NativePlanet
Share
» »இந்த டிசம்பரில் தென் இந்தியாவில் கட்டாயம் செல்ல வேண்டிய ஐந்து இடங்கள்

இந்த டிசம்பரில் தென் இந்தியாவில் கட்டாயம் செல்ல வேண்டிய ஐந்து இடங்கள்

இந்தியாவை சுற்றிபார்க்க சிறந்த காலகட்டம் என்றால் அது நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்திய குளிர் காலம் தான். இதமான சூழல் நிலவும் இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் வெய்யிலை பற்றிய பயமோ எப்போது மழை பெய்து பயணம் தடை படுமே என்று நாம் கவலைப்பட தேவையில்லை.

இந்தியாவில் அதும் குறிப்பாக தென் இந்தியாவில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பழங்கால கட்டிடக்கலை அற்புதங்கள் நிறையவே உள்ளன. அதே போல இயற்கையின் அழகில் நம்மை மெய் மறக்கச்செய்யும் இடங்களும் நிறையவே உண்டு. வாருங்கள், இந்தியாவின் தீபகற்பமாக அமைந்திருக்கும் தென் இந்தியாவில் உள்ள சில அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வருவோம்.

ஹம்பி, கர்நாடகா :

ஹம்பி, கர்நாடகா :

இந்திய வரலாற்றில் ஆகச்சிறந்த ஹிந்து பேரரசாக திகழ்ந்த விஜயநகர பேரரசின் கடைசி தலைநகராக திகழ்ந்த நகரம் தான் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பி நகரமாகும்.

துங்கபத்ரா நதிக்கரையின் மேல் அமைந்திருக்கும் இந்த நகரம் பெங்களுருவில் இருந்து 353 கி.மீ தொலைவில் உள்ளது. அதே போல ஹம்பியில் இருந்து 150 கி.மீ தொலைவில் இதே துங்கபத்ரா நதிர்க்கரையில் மற்றொரு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமான மத்ராலயமும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Venkataramesh Kommoju

ஹம்பி, கர்நாடகா :

ஹம்பி, கர்நாடகா :


பல அற்புதமான ஹிந்து கோயில்கள் இந்த நகரத்தில் அமைந்திருகின்றன. அவை பெரும்பாலானவை இன்று பூஜைகள் நடைபெறாமல், சிதலமடைந்து போய் காணப்படுகின்றன. சந்த்ரமௌலிஷ்வரர் ஆலயம், ஹஜார ராமர் கோயில், கிருஷ்ணர் கோயில் போன்றவை இங்கிருக்கும் முக்கிய கோயில்களாகும்.

Photo:Apadegal

விட்டலா கோயில்! கலைகளின் உச்சம்!:

விட்டலா கோயில்! கலைகளின் உச்சம்!:

ஹம்பி நகரின் வட கிழக்கே அநேகோண்டி என்னும் இடத்தில் அமைந்திருக்கும் விஷ்ணுவின் ரூபங்களின் ஒன்றான விட்டலாவின் கோயில் விஜயநகர பேரரசின் கட்டிடக்கலையின் உச்ச அடையாளமாக திகழ்கிறது.

கோனார்க் மற்றும் மகாபலிபுரத்தில் இருப்பது போன்ற கல்லில் செய்யப்பட்ட தேர் இங்கும் உள்ளது. அதே போல எப்படி செய்தார்கள் என்று அறிவியலாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத இசைத்தூண்கள் இந்த கோயில் மண்டபத்தில் உள்ளது.

அவற்றை தட்டினால் சப்தசுவர ஒலிகள் எழுகின்றன.

Photo:Jean-Pierre Dalbéra

ஹம்பி, கர்நாடகா :

ஹம்பி, கர்நாடகா :

மேலும் இங்கு தூண்களில் வடிக்கப்பட்டுள்ள யாளி சிற்பங்கள் உண்மையில் கல்லில் செய்தார்களா அல்லது களிமண்ணால் செய்யப்பட்டனவா என்று வியக்க வைக்கும் அளவுக்கு நுணுக்கமாக கட்டப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு சிதலமடைந்த இந்த நகரம் இன்றும் 14-15 ஆம் நூற்றாண்டிக்கு நம்மை அழைத்து செல்ல காத்துக்கொண்டிருக்கின்றன. வாய்ப்புக்கிடைத்தால் தவறாமல் இங்கே சென்று வாருங்கள்.

Photo:Dietmut Teijgeman-Hansen

கொச்சி, கேரளா:

கொச்சி, கேரளா:

பழமையும், பசுமையும் நிறைந்த கேரளாவின் நவீன முகத்தை காண விரும்புகிறவர்கள் செல்ல வேண்டிய இடம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொச்சி நகரத்திற்கு தான்.

Photo:Challiyil Eswaramangalath P


'அரேபியக் கடலின் அரசி' என்று அழைக்கப்படும் கொச்சி நகரமானது நீண்ட நெடுங்காலமாகவே கேரளாவின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது. கொச்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது இங்கு மீன் பிடிக்க பயன் படுத்தப்படும் சீன நாட்டு மீன் வலைகள் தான். 16ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசியர்கள் மூலம் இவைகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

கொச்சி, கேரளா:

கொச்சி, கேரளா:

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதக்களியை ரசிக்க கொச்சி நல்லதொரு இடம். இந்த நகரில் பிரிடிஷ்காரர்கள், போர்த்துகீசியர்கள், சீனர்கள் மற்றும் ஹிந்து, கிருத்துவ மற்றும் இஸ்லாம் போன்ற பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களின் கலாச்சார சங்கமமாக விளங்கும் கொச்சிக்கு நிச்சயம் ஒருமுறை சென்று வாருங்கள்.

Photo:Arian Zwegers

 கேரளாவின் அலைகள் எழா ஆறுகள்:

கேரளாவின் அலைகள் எழா ஆறுகள்:

இந்தியாவில் அதிக நீர்நிலைகளை கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் 'Backwaters' எனப்படும் அலைகளே எழாத அமைதியான நீரோடைகள் அதிகம் உள்ளன. இயற்கையாக அமையும் இது போன்ற அமைப்புகளில் படகு சவாரி செல்வது மிக எளிதானதும், ஆனந்தம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

Photo:Amit Rawat

 கேரளாவின் அலைகள் எழா ஆறுகள்:

கேரளாவின் அலைகள் எழா ஆறுகள்:

கேரளாவை சுற்றிபார்க்க சிறந்த வழிகளில் ஒன்றாக இவை பார்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிக்கு நிகரான வசதிகள் இந்த படகு வீடுகளில் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் நிலவும் அற்புதமான சூழ்நிலையில் படகு வீடுகளில் கேரளாவில் வலம்வருவதை விட வேறென்ன சிறந்த விஷயம் இருக்க முடியும்?.

Photo:Aditya Sen

வர்கலா பீச், திருவனந்தபுரம்:

வர்கலா பீச், திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள அழகான கடற்கரைகளில் ஒன்று இந்த வர்கலா கடற்கரை ஆகும். பாபநாசம் பீச் என்றும் அழைக்கப்படும் இந்த கடற்கரையின் சிறப்பு என்னவென்றால் இந்திய பெருங்கடல் மற்றும் அரேபியக்கடல் ஆகிய இரண்டின் கரைகளும் இந்த கடற்கரையில் உண்டு.

Photo:Aleksandr Zykov

வர்கலா பீச், திருவனந்தபுரம்:

வர்கலா பீச், திருவனந்தபுரம்:

மேலும் இந்த கடற்கரையை ஒட்டியே மலை முகடு ஒன்றும் உள்ளது. அதாவது ஒரு மலை அதனை ஒட்டியே அழகான கடற்கரை என அற்புதமான காட்சிகளை நமக்கு தரவல்லது இந்த அழகிய வர்கலா பீச். இந்த மலையின் மேல் நல்ல தாங்கும் விடுதிகள் நிறைய உண்டு. அவற்றில் ஓய்வெடுத்தபடி ஒய்யாரமாக கடற்கரையை ரசிப்பது விவரிக்க முடியாத பேரானந்தத்தை தரும்.

Photo:Prashanth dotcompals

மதுரை, தமிழ்நாடு:

மதுரை, தமிழ்நாடு:

தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளங்களை கொண்ட நகரங்களில் முக்கியமானது பாண்டியர் தலைநகரமாக விளங்கிய மதுரை ஆகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் தற்கால உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


நான்கு வாசல்களை கொண்டுள்ள இந்த கோயில் தான் உலகிலேயே மிகப்பெரிய கற்கூரையை உடைய கோயில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கலைநயம் மிக்க சிற்பங்களையும் தூண்களையும் கொண்டுள்ள இக்கோயிலுக்கு எத்தனை முறை போனாலும் ஒவ்வொரு முறையும் முதன் முறை செல்வது போன்ற உணர்வே ஏற்ப்படும்.

Photo:Natesh Ramasamy

 மதுரை, தமிழ்நாடு:

மதுரை, தமிழ்நாடு:

இது தவிர மதுரையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று அங்கு கிடைக்கும் சுவையான உணவுகள் தான். கைகளால் அரைக்கப்பட்ட மசாலாக்களில் சமைக்கப்படும் மதுரை உணவுகள் நம் நாவை அதன் சுவைக்கு அடிமைப்படுத்த கூடியவை.

ஆண்டாளுக்கு உகந்த மார்கழி மாதம் டிசம்பரில் வரும் போது இங்குள்ள கோயில்களில் அதிகாலை சுப்ரபாதம் ஒலிக்க மதுரையில் பக்தி மனம் கமழும் அழகை ரசிக்க நிச்சயம் சென்று வாருங்கள்.

Photo:Sistak

மதுரை, தமிழ்நாடு:

மதுரை, தமிழ்நாடு:

மீனாட்சி அம்மன் கோயில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கும் வெளிநாட்டுப்பெண்.

Photo:Vinoth Chandar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X