Search
  • Follow NativePlanet
Share
» »நெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்!

நெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்!

திருநெல்வேலியில் குற்றாலம், மணிமுத்தாறு அணை, பாபநாசம் தவிற இன்னும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நிறையவே உள்ளன. அவை எதுவெல்லாம் என உங்களுக்குத் தெரியுமா ?

நெல்லை என்றாலே முதலில் நினைவில் வருவதும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் அங்குள்ள குற்றாலம், அம்பாசமுத்திரம், மாவட்ட அறிவியல் மையம், குற்றாலநாதர் கோவில், மாஞ்சோலை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் தான். ஆனால், இவையெல்லாம் கடந்து இன்னும் ரசிக்கத் தகுந்த தலங்களும் நெல்லையில் உள்ளது. அவை எதுவெல்லாம் என உங்களுக்குத் தெரியுமா ?

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்


நெல்லையிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 40-க்கும் மேற்பட்ட இனப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. நீங்கள் பறவைகள் ரசிகர்களாக இருந்தால் இக்காலகட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு பயணம் செய்யலாம்.

K Hari Krishnan

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

களக்காடு வனவிலங்கு சரணாலயம்


நெல்லையில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது களக்காடு வனவிலங்கு சரணாலயம். அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் என்றாலும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு அதிகளவில் உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்தால் அடர் பசுமை மரக்காடுகளுக்கு நடுவே பயணிக்கலாம்.

Ajtjohnsingh

குறுக்குத்துறை முருகன் கோவில்

குறுக்குத்துறை முருகன் கோவில்


தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகப் பெருமான் கோவில் கொண்டிருக்கும் இடம் தான் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653-ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் பரவலாக கருத்து உள்ளது.

கழுகுமலை

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோவில்தான். சிவபெருமானுக்கு என்று கட்டப்பட்ட குடைவரைக் கோவிலான வெட்டுவான் கோவிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

Balajijagadesh

வளநாடு

வளநாடு

மான்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிதான் வளநாடு. நெல்லையிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

Ipsitap

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X