Search
  • Follow NativePlanet
Share
» » வாங்க....இந்த விடுமுறையைக் கொண்டாட கெத்தா ஒரு லாங்க் டிரைவ் போலாம்....

வாங்க....இந்த விடுமுறையைக் கொண்டாட கெத்தா ஒரு லாங்க் டிரைவ் போலாம்....

தமிழகத்தில் லாங் டிரைவ் போக மிகச் சிறப்பான இடங்களை நாம் இங்கு காண்போம்.. காரோ பைக்கோ டூர் போகணும்..அப்படிங்கிறீங்களா... அப்போ இதுதான் சரியான தருணம் கிளம்புங்க .....

By Udhaya

மனிதன் தோன்றிய நாளிலிருந்து, ஓரிடத்தில் நிலைத்து இருக்காமல், உணவுக்காக பல்வேறு இடங்களுக்குப் பயணித்திருந்தான். நாடோடியான அவன் நாகரிகமாக மாறிய பின்பு, வேலைக்காகவும், பணத்திற்காகவும் பயணிக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டான். வேலைக்காக ஓடி அலைந்து களைப்பாகி, புத்துணர்ச்சி பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட மனிதன் அறிந்த மிக இன்றியமையாதவைகளுள் ஒன்று சுற்றுலா.. சுற்றுலா என்பது இங்கு தேவைக்கு அதிகமானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நாம் அனைவரும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமானதுதான். நம் ஒருநாள் வாழ்வு கூட நண்பர்களின்றி நகராது என்ற அளவுக்கு நண்பர்கள் நம் வாழ்வின் மிகுந்த முக்கிய உறவாக இருக்கின்றனர். சுகம், துக்கம் என எந்த விசயமானாலும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவே முதலில் விரும்புகிறோம். சரி நம்ம பிரெண்ட்ஸ் கூட பொழுது போக்க சென்னை உட்பட தமிழகத்தின் எல்லா இடங்களிலும் நிறைய பகுதிகள் இருக்கு. ஒரு லாங் ரைடு போகனும்னா.. நீங்க எந்த இடங்கள தேர்வு செய்வீங்க...

செங்கல்பட்டு

செங்கல்பட்டு


சென்னையிலிருந்து வேடந்தாங்கல் ஏறக்குறைய 88 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னை மாநகரத்துக்குள் நெரிசல் அதிகமாக இருந்தாலும், புறநகரைத் தாண்டியதும், மின்னல் வேகத்தில் பறக்கலாம். அதுவும் இந்த சாலையில் பைக்கில் செல்லும்போது கிடைக்கும் அனுபவமே தனி. காதலர்கள் பெரும்பாலும் லாங் டிரைவ் போக ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரியான சாலை இது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிழக்கு கடற்கரைச் சாலையிலே நல்ல அனுபவம் பெற்றிருப்பார்கள். ஒரு மாறுதலுக்கு நண்பர்களுடன் இந்த சாலையில் பயணித்துப் பாருங்களேன்.

PC: Rsrikanth05

 வால்பாறை

வால்பாறை

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்கள் அதிகமாக ஊட்டி, குன்னூர் சாலைகளில் பைக் ரைடிங் செல்ல விருப்பப்படுவர். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த சாலைகளில் பயணிப்பர். தற்போது இதே அளவு அனுபவத்தை தரும் வால்பாறை சாலையையும் இவர்கள் கவனிக்கத்தவறவில்லை.

வால்பாறை சுற்றுலா செல்பவர்கள் இந்த சாலைகளில் பைக் ரைடிங் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கிட்டத்தட்ட 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த பாதை சற்று ஆபத்தானதும் கூட. எனினும் அனுபவசாலிகள் இந்த சாலையில் பயணிப்பதை த்ரில் அனுபவமாக எண்ணுகின்றனர். நீங்களும் இந்த த்ரில் சாலையில் போய்தான் பாருங்களேன்..

மாவட்டம் கோயம்பத்தூர்

தூரம் 108 கிமீ


PC: Dilli2040

சென்னை - பெங்களூரு சாலை

சென்னை - பெங்களூரு சாலை

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது அலாதியான அனுபவம். இரு மாநிலங்களின் தலைநகர்களுக்கிடையே அமைந்துள்ள இந்த சாலையில் பயணிப்பதன் மூலம் சராசரியாக 5 மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது பெங்களூருவிலிருந்து சென்னையை அடையலாம்.

பெங்களூருவில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் சாலை வழியாக பைக்கிலேயே சென்னை வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சாலை நல்ல அனுபவத்தை தந்துள்ளது. காரில் நெடுந்தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் சென்னை - பெங்களூரு சாலையைத் தேர்ந்தெடுக்கலாம். நண்பர்களுடன் பயணம் செய்ய ஏற்ற மற்றுமொரு சிறந்த சாலை இதுவாகும்.

மாவட்டம் சென்னை திருவள்ளூர்

தூரம் 360 கிமீ

PC: Balaji Photography

பேச்சிப்பாறை - குலசேகரம் சாலை

பேச்சிப்பாறை - குலசேகரம் சாலை

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையிலிருந்து குலசேகரம் செல்லும் சாலை இது. கன்னியாகுமரி என்றாலே சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த சோலை வழியாக பயணம் என்பதுதான் பலருக்கு நினைவு வரும். அந்த அளவுக்கு குமரி மாவட்டத்தில் இயற்கை வளம் பேணி காக்கப்படுகிறது. பசுமையான சாலைகள் வழியே பயணிக்க யாருக்குதான் ஆவல் இருக்காது. இந்த சாலையில் பைக்கில் பயணிப்பதைத் தவிர வேறு எதில் பயணித்தாலும் அந்த அளவுக்கு சுகம் கிடைக்காது. குமரி மாவட்டத்துக்கு செல்பவர்கள் இந்த சாலையில் பயணித்தால் நிச்சயமாக அந்த அனுபவத்தை பெறுவீர்கள்.

மாவட்டம் கன்னியாகுமரி

தூரம் 12 கிமீ

PC: Anulal

சென்னை - ஏலகிரி சாலை

சென்னை - ஏலகிரி சாலை

ஏலகிரி செல்லும் சாலை பைக் ரைடர்களுக்கு நல்ல திரில் அனுபவத்தைத் தரும். சற்று ரிஸ்க் என்றாலும் இளைஞர்கள் இந்த சாலையில் வேகமாக செல்வதையே விரும்புகிறார்கள். அப்படி ஒரு திரில் நிறைந்த பைக் டூருக்கு உங்கள் நண்பர்களுடன் சென்று ஏலகிரியில் மகிழ்ந்து வாருங்கள் இந்த விடுமுறை நாள்களில்....

மாவட்டம் வேலூர்

தூரம் 230 கிமீ


PC: Ankit Mathur

சென்னை - பாண்டிச்சேரி சாலை இரவில்

சென்னை - பாண்டிச்சேரி சாலை இரவில்

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் பயணித்திருப்பார்கள். பைக் வைத்துள்ள இளைஞர்கள் முக்கியமாக தனது காதலியுடன் இங்கு செல்ல விருப்பப்படுவார்கள். கிட்டத்தட்ட இதற்கு காதல் சாலை என்றே பெயர்வைத்துவிடலாம் எனுமளவிற்கு இந்த சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்கள் காதலர்களுக்காகவே அமைக்கப்பட்டது போல உள்ளது.

காரில் செல்வது இந்த சாலையில் மிகவும் பிடித்தமான விசயம் என்று பலர் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பைக்கோ காரோ பயணிப்பதுதானே முக்கியம். இந்த சாலையில் பயணித்து இளமைப் பொழுதை அனுபவியுங்க.....

மாவட்டம் சென்னை காஞ்சிபுரம்.....

தூரம் 155 கிமீ

PC: pradeep lawrance

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலை

குறுகிய சாலைக்குள் வளைந்து நெளிந்து வேகமாக செல்லும் வித்தியாசமான அனுபவம் வேண்டுமா அப்போ நீங்க இந்த சாலையில் கண்டிப்பாக பயணிக்கணும். உங்ககிட்ட காரோ, பைக்கோ இருந்தா போதும். உங்க நண்பர்கள துணைக்கு அழைத்துக்கொள்ளுங்க... அப்படியே குமரியிலிருந்து திருவனந்தபுரம் ஜாலியா ஒரு ரைடு போகலாம்...

வழியில் செடி, கொடி, மரம் எல்லாம் நம்மை வரவேற்கும். நல்ல பாம்பும் சாரை பாம்பும் பிணைத்து இருப்பதைப் போல ரயில் பாதையும், சாலை மார்க்கமும் இணைந்து பிணைந்திருக்கும்.

மாவட்டம் கன்னியாகுமரி திருவனந்தபுரம்

தூரம் 91 கிமீ

PC: Unnicycles for MSF

கொடைக்கானல் சாலை

கொடைக்கானல் சாலை

கொடைக்கானல் திண்டுக்கல் சாலை கிட்டத்தட்ட 97 கிமீ நீளமுடையது. பசுமையான மரங்கள் இருபுறமும் வரவேற்க கொஞ்சம் சமவெளிப் பகுதியும், மீதி மலைப்பகுதியிலும் பயணிக்க ஆர்வமுடையவர்கள் இந்த சாலையைத் தேர்ந்தெடுக்கலாம். மலைவாசல்தளங்களுக்கு செல்ல கசக்குமா என்ன அதுவும் பைக் கையில் இருக்கும்போது

மாவட்டம் திண்டுக்கல்

தூரம் 97 கிமீ

PC:pmick_accet

கொல்லிமலை சாலை

கொல்லிமலை சாலை

அடர்ந்த காட்டுக்குள் கொஞ்ச தூரம். பசுமையான பகுதிகள் முழுக்க பைக்கில் பயணம் செய்ய வேண்டுமா அப்போ கொல்லி மலைக்கு போகலாம் வாங்க.. தமிழர்களின் பண்பாட்டோடு மிகவும் ஒன்றியுள்ளது கொல்லிமலை. பழங்கால இலக்கியங்களில் கூட கொல்லிமலை கூறப்பட்டுள்ளது. குறவஞ்சி இலக்கியத்திலும் இந்த கொல்லிமலை இடம்பெற்றுள்ளது. நிறைய மருத்துவகுணமிக்க செடி கொடிகள் இங்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. அப்படி பட்ட மகத்துவம் வாய்ந்த மலைக்கு பயணிப்பது இனிமையோ இல்லையோ.... பைக் அல்லது காரில் நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு பயணிப்பது அலாதியான சுகம்.. இளம் காதலர்கள் இங்கு பைக் ரைடிங் பண்ண மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

மாவட்டம் நாமக்கல்

தூரம் 53 கிமீ

PC: Chidambaram Annamalai

ஆரல்வாய்மொழி சாலை

ஆரல்வாய்மொழி சாலை

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி 83 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சராசரியாக இரண்டரை மணி நேரத்தில் அடையும் இந்த பயணம். ரயில் மற்றும் பேருந்துகளில் திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு இனிமையான ஒரு பயணம். பல இடங்களில் சாலைகள் மோசமானதாகவும் உடைந்தும் காணப்படுகிறது என்றாலும், இந்த படத்திலிருக்கும் இடம் ஆரல்வாய்மொழி. கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய தங்க நாற்கர சாலையிலிருந்து பிரிந்து ஆரல்வாய்மொழியை அடையும்போது வீசும் ஒரு காற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையிடையே அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இயற்கை வளமிக்கதாகும். இங்கு சாலைவழிப் பயணம் செல்வது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

மாவட்டம் திருநெல்வேலி , நாகர்கோவில்

தூரம் 83 கிமீ


PC: James Vasanth

மேட்டுப்பாளையம் சாலை

மேட்டுப்பாளையம் சாலை

கண்ணுக்கு குளிர்ச்சியாக, மப்பும் மந்தாரமான வானத்தைப் பார்த்துக்கொண்டே பைக்கில் செல்வது காதலர்களுக்கு ரொம்ப பிடிக்குமாம். நண்பர்கள் ஜாலியாக பேசிக்கொண்டே பைக்கில் செல்வதைப் பார்த்திருக்கிறோம். இது போன்ற ரிஸ்க்கான சாலைகளில் அதிவேகமாக செல்லுதல், கவனக்குறைவோடு பேசிக்கொண்டே செல்வது எல்லாம் தவிர்த்துபார்க்கும் போது இந்த பயணம் உங்களுக்கு சொர்க்கத்தைக் கண்முன் காட்டும்.

மேட்டுப்பாளையம் பகுதியைச் சுற்றி நிறைய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பெரும்பாலானோர் இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர். இது மலைகள் அடங்கிய சாலை என்பதால் மிகுந்த கவனத்துடன் செல்வது சாலச் சிறந்தது. கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள இளைஞர்கள் பலர் வாரம் ஒருமுறையாவது ஊட்டிக்கு பைக் ரைடு விசிட் அடிப்பது அதிகரித்து வருகிறது.

மாவட்டம் நீலகிரி, கோயம்புத்தூர்

தூரம் 52 கிமீ

PC: Swaminathan M

ராமநாதபுரம் - தனுஷ்கோடி சாலை

ராமநாதபுரம் - தனுஷ்கோடி சாலை

சாலையில் இருபுறமும் தண்ணீர். நடுவில் ஒரு காட்டாற்று வெள்ளம் போல சீறும் பைக்கில் நீங்கள். கற்பனை செய்து பாருங்களேன். சும்மா அதிருதுலனு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போடலாம், இந்த சாலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள இந்த சாலை பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும்

மாவட்டம் ராமநாதபுரம்

தூரம் 78 கிமீ


PC: puneet verma

தேனி - கம்பம் சாலை

தேனி - கம்பம் சாலை

சுற்றிலும் தென்னை மரங்கள், தொலை தூரத்தில் தெரியும் மலை, மலையிலிருந்து வீசும் காற்று. அப்படி ஒரு சுகம். உங்கள் காதலன் காதலியுடன் காரில் செல்லும்போது உங்க மனசுக்குள்ள ஒரு பாட்டு கேக்கும்.....

ஏஆர் ரஹ்மான்.... இல்லனா இளையராஜா பாட்டுதானே ........

மாவட்டம் தேனி

தூரம் 38 கிமீ

PC:itinerantobserver

தென்காசி - குற்றாலம் சாலை

தென்காசி - குற்றாலம் சாலை

பட்டபகலில் கூட ஒளியை உமிழ வேண்டிய கட்டாயத்துக்கு வாகனங்களை தள்ளும் நிலைமை கொண்டது குற்றாலம் சாலை. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பைக்கில் பயணம் என்பது பலருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கார் அல்லது பேருந்தில் சென்றிருப்பீர்கள் இந்த சாலையில். இந்த முறை ஒரு மாறுதலுக்கேனும் பைக்கில் சென்று பாருங்களேன்.

மூலிகைகளை உள்ளடக்கிய குற்றால மலைச் சாரல் உங்கள் மேல் விழுந்து உங்களைப் புத்துணர்ச்சியடையச் செய்யும். உங்களுக்கு திருநெல்வேலி பகுதியில் நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். உடனடியாக அந்த பகுதிக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள்ளேயும் வந்துவிடும்...

PC: Chenthil Mohan

மூணாறு சாலை

மூணாறு சாலை

நம்ம லிஸ்ட்ல கடைசியா பாக்க இருக்குறது மூணாறு சாலை. இது கேரளா - தமிழ்நாடு எல்லைப் பயணமாக இருக்கும். மூணாறு பத்தி நிறைய கேள்வி பட்டிருப்பீங்க... காரில் செல்லும் அனுபவம் இருக்கா... முடிஞ்சா அடுத்த முறை போய்ட்டு வாங்களேன் கார் ல....

PC: Souvik Bhattacharya

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X