Search
  • Follow NativePlanet
Share
» »மும்பையில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்

மும்பையில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்

மும்பையில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்

இந்தியாவில் மிகவும் நெரிசல் மிகுந்த, எப்போதுமே பிசியாக இருக்கும் நகரம் என்றால் அது மும்பை தான். இந்தியாவின் நவீன கால அடையாளங்களில் ஒன்றான இந்நகரத்தில் ஆயிரம் பேர் நெருக்கி அடித்து வாழும் குடிசை பகுதியையும், ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியின் மாளிகையும் அடுத்தடுத்து பார்க்க முடியும். அப்படிப்பட்ட வேறுபாடுகள் நிறைந்த இந்நகரில் பல்வேறு இன, மத, கலாச்சாரங்களை சார்ந்த மனிதர்களின் சங்கமமாக உள்ளது. அப்படிப்பட்ட இந்த மும்பை மாநகரில் நாம் ஷாப்பிங் செய்திட ஏராளமான இடங்கள் உள்ளன. வாருங்கள் அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

லிங்கிங் ரோடு மார்கெட்:

Photo: RubyGoes

நீங்கள் என்ன விலையில் பொருட்களை வாங்க விரும்பினாலும் அது இங்கே கிடைக்கும். உயர்தர ஆடைகள் முதல் உள்ளூரில் தயாரான செருப்புகள் வரை வகை வகையான பொருட்களை நாம் இங்கே வாங்கலாம். சாலைகளின் இரண்டு புறமும் நிறைந்து இருக்கும் கடைகளை பார்த்த உடனேயே உங்களுக்கு இங்கே ஷாப்பிங் செய்ய தோன்றும் என்பது உண்மை.

கொலாபா சந்தை:

Photo: Karan Patil

மும்பைக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளிடையே மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் இந்த கொலாபா சந்தை. இதன் தனித்துவமே இங்கு கிடைக்கும் பொருட்களின் தரம் தான். விலை மலிவாகவும் அதே சமயம் தரத்திற்கான உறுதியுடனும் இங்கே பொருட்களை வாங்க முடியும். வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார ஆபரணங்கள், எலக்ட்ரானிக் பொருட்களை இங்கே நாம் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் இங்கே வர வேண்டும்.

பேஷன் ஸ்ட்ரீட்:

Photo: Marco Zanferrari

இந்த வீதியில் முடிவே இல்லையோ என்று நினைக்கும் அளவிற்கு கடைகள் வரிசையாக அமைந்திருகின்றன. உங்கள் காதலிக்கு அவர்கள் விரும்பும் பொருள் ஏதேனும் ஒன்றை வாங்கி தந்து அசத்த வேண்டும் என நீங்கள் நினைத்தீர்களானால் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வர வேண்டிய இடம் இந்த பேஷன் ஸ்ட்ரீட் தான். வளையல்கள், மேக் அப் சாதனங்கள், விதவிதமான செருப்புகள் என இங்கு பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளன.

லோகன்ட்வாலா மார்கெட்:

Photo: Abe Bingham

சுவையான மும்பை வீதி உணவுகளை ருசித்தபடி ஷாப்பிங் செய்ய ஆசையா அப்படி என்றால் நீங்கள் செல்ல வேண்டியது லோகன்ட்வாலா மார்க்கெட்டுக்கு தான். துணிவகைகள் மற்றும் செருப்புகள் இங்கே அதிகம் கிடைகின்றன. உங்களுக்கு பேரம் பேச தெரிந்திருந்தால் சகாய விலையில் இங்கு நிறைய பொருட்களை வாங்க முடியும்.

ஹில் ரோடு, பந்த்ரா:

Photo: Satish Krishnamurthy

மும்பையில் இருக்கும் பழமையான ஷாப்பிங் இடங்களுள் முக்கியமானது இந்த ஹில் ரோடு ஆகும். பான்சி ரக ஆடைகள், பெல்ட், ஷூ போன்ற தோல் பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். இங்கே இருக்கும் 'ல ஜுடி' போன்ற பழமையான கடைகளில் 30 வருடங்களுக்கு மேலாக தவறாமல் வாடிக்கையாளர்கள் இருகின்றார்களாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X