India
Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தைகளுடன் செல்ல வேண்டிய அருமையான குளுமையான கோடை கால சுற்றுலாத்தலங்கள்

குழந்தைகளுடன் செல்ல வேண்டிய அருமையான குளுமையான கோடை கால சுற்றுலாத்தலங்கள்

By Naveen

பரீட்சைகள் எல்லாம் முடிந்து வீட்டு வாண்டுகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சென்ற ஆண்டுகளை விடவும் இந்த வருடம் வெப்பம் வாட்டிவதைக்கிறது. இரவு நேரத்தில் கூட அனல் காற்று வீசுகிறது. பெரியவர்களே சிரமப்படும் போது சுட்டிகளின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. வெளியிலும் விளையாட முடியாமல், வீட்டிலும் முடங்கியிருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

என்ன செய்வது?. எதைப்பற்றியும் யோசிக்காமல் அலுவலகத்திற்கு ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு குழந்தைகளை இதுவரை அவர்கள் பார்த்திராத இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். தென்னிந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த பத்து இடங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஏற்காடு:

ஏற்காடு:

கோடை விடுமுறையின் போது ஊட்டி, கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் தமிழகத்தில் அதற்கடுத்தபடியாக இருக்கும் சிறந்த மலைவாசச்த்தலமான ஏற்காட்டுக்கு செல்லலாம்.

சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 4970 அடி உயரத்தில் இருக்கும் இங்கே ஆரஞ்சு, பலா, வாழை போன்ற பழ வகைகள் மிக அதிகமாக விளைகின்றன.

Thangaraj Kumaravel

ஏற்காடு:

ஏற்காடு:

ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் கிளியூர் அருவி ஏற்காட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலமாகும். இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர்வரத்து இருக்கிறது.

Saivin Muthu

ஏற்காடு:

ஏற்காடு:

ஏற்காடு தமிழ்நாடு மற்றும் பிற சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து வழக்கமான மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் அதே போல் தனியார் பேருந்து சேவைகளும் உள்ளன.

கோயம்புத்தூர் (190 கி.மீ.), சென்னை (356 கி.மீ.) மற்றும் பெங்களூரு (230 கி.மீ.) நகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Thangaraj Kumaravel

மூணார்:

மூணார்:

மூணார், கேரளத்தின் காதல் தேசம்.600.மீ உயரத்தில் இருப்பதால்காணுமிடமெல்லாம் பசுமையும், எப்போதும் சில்லென குளுமையான சீதோஷணமும் நிலவுகிறது.

மூணாரில் இருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் மாட்டுபெட்டி அணை ஆகும். மூணார் நகரில் இருந்து 12கி.மீ தொலைவில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் மனிதனால் மாசுபடாத இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது

மூணார்:

மூணார்:

மலைகளை முத்தமிடும் வெண் மேகங்கள், உடலை வருடிச்செல்லும் குளிர்ந்த தென்றல் காற்று என இயற்கையின் அழகை ரசிக்க இந்த அணை அற்புதமான இடமாகும். ரொமேன்டிகான இந்த அணையில் படகு பயணமும் செல்லலாம். அதற்கு கட்டணமாக ₹600 வசூலிக்கப்படுகிறது.

மூணார்:

மூணார்:

மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை மொத்தமாக ரசிக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக வரவேண்டிய இடம் டாப் ஸ்டேஷன் ஆகும். மாலை நேரத்தில் மேகத்தை துளைத்துக்கொண்டு வரும் சூரிய கதிர்கள் மலைகளின் மேல் வர்ணக்கோலம் போடும் அற்புதமான இயற்கை காட்சிகளை இங்கே காணலாம்.

மூணார்:

மூணார்:

எகோ பாயின்ட், கொலுக்குமலை, ரோஸ் கார்டன், ஆனைமுடி தேசிய பூங்கா, ஆட்டுகல் அருவி, லக்கம் அருவி, குந்தால ஏரி என மூணாரில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

மூணார் சுற்றுலா செல்லும் முன்பாகவே அங்கே தங்குவதற்கான ஹோட்டல்களை முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. சில சமயங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்தால் அறைகள் கிடைக்காமல் கூட போகலாம்.

குல்மார்க்:

குல்மார்க்:

மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை வனப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் குல்மார்க், உலகெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகளை தன்வசம் சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது.

Muzaffar Bukhari

குல்மார்க்:

குல்மார்க்:

காஷ்மீர் மாநில அரசாங்கத்தால், பொமகல்ஸ்கை என்னும் பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் கோண்டோலா லிஃப்ட் எனும் கேபிள் கார் குல்மார்க்கின் முதன்மையான சுற்றுலா அம்சமாகும்.13500 அடி உயரத்தில் 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Photo: Basharat Alam Shah

குல்மார்க்:

குல்மார்க்:

காஷ்மீர் பகுதிகளிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு குல்மார்க்கில்தான் மிகவும் பிரபலம். இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்டை அடைய 400 மீட்டர் உயரத்தில் கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப் பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு கொண்டு சேர்த்துவிடும்.

தேக்கடி:

தேக்கடி:

தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் மிக அற்புதமான பசுமை சூழ் இடம் தான் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தேக்கடி ஆகும். இயற்கை அழகையும், கேரள பாரம்பரியத்தையும் ஒருங்கே கண்டுகளித்திட தேக்கடிக்கு வரலாம்.

தேக்கடி:

தேக்கடி:

தேக்கடியில் தான் பெரியார் தேசிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் முல்லைப்பெரியார் அணை ஆகியவை அமைந்திருக்கிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தினுள் யானைகள், சாம்பார் மான்கள், புலிகள், சிங்கவால் குரங்குகள் போன்ற விலங்கினங்களும், ஏராளமான பறவைகளும் இந்த சரணாலயத்தினுள் வசிக்கின்றன.

தேக்கடி:

தேக்கடி:

தேக்கடியில் இருக்கும் தனிச்சிறப்புகளில் ஒன்று இங்குள்ள பெரியார் ஏரியில் ஆதி காலத்தில் நீரில் மனிதர்கள் பயணித்ததை போலவே மூங்கில் தோணியில் அமர்ந்து பயணிக்கலாம்.

கூர்க்:

கூர்க்:

கர்னாடக மாநிலத்தில் இருக்கும் கூர்க் தமிழ்நாட்டில் இருக்கும் ஊட்டியை போன்ற ஒரு மலை வாசஸ்தலமாகும். அருவிகள், ட்ரெக்கிங் செய்வதற்கான இடங்கள், கோயில்கள் மற்றும் புத்த மடாலயங்கள் என பல்வேறு மனதைக்கவரும் சுற்றுலா அம்சங்கள் கூர்கில் உண்டு.

கூர்க்:

கூர்க்:

கூர்கில் இருக்கும் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலம் தலைக்காவேரி ஆகும். கூர்கின் தலைநகரான மடிகேரியில் இருந்து 48கி.மீ தொலைவில் உள்ள பிரம்மகிரி மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. அதனை குறிக்கும் விதமாக இங்கே ஒரு சிறிய குளமும் அதனருகே சிறு கோயிலொன்றும் உள்ளது.

கூர்க்:

கூர்க்:

கூர்கில் இருக்கும் பேரழகுடைய அருவி தான் அப்பே அருவியாகும். மடிகேரியில் இருந்து 8கி.மீ தொலைவில் ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தினுள் இந்த அருவி அமைந்திருக்கிறது.

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

இன்னும் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் அற்புதமான இயற்கை காட்சிகளை கொண்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு ஆகும்.

Raj

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

மிகவும் சுத்தமான அதேசமயம் வர்த்தகத்தனம் இல்லாத அழகிய இடமான இங்கு தான் இந்தியாவில் முதல் முறையாக பழங்குடிகளால் விளைவிக்கப்பட்ட பூச்சிகொல்லிகளும், உரங்களும் சேர்க்காத கரிம(Organic) காப்பி கொட்டை கிடைக்கிறது. சுவையான இந்த காபியை ருசித்தபடி பசுமையான இவ்விடத்தை சுற்றிப்பாருங்கள்.

Kara Newhouse

Read more about: alleppy munnar wayanad kollam yercaud
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X