Search
  • Follow NativePlanet
Share
» »பருவமழையின் போது சொர்க்கம் போல் காட்சியளிக்கும் இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

பருவமழையின் போது சொர்க்கம் போல் காட்சியளிக்கும் இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

இது ஜூலை மாதம் - பருவமழை தீவிரமடைந்துவிட்டது! வட இந்தியா முழுவதும் அதனைச் சுற்றியள்ள பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் பசுமையாக மாறி, சமவெளிகள் செழித்து, ஆறுகள், நதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஊற்றெடுத்து அனைத்து இடங்களும் கண்ணிற்கினிய சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.
அதிலும் மகராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாரலில் அமைந்து இருக்கும் தம்ஹினி காட் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது!

தம்ஹினி காட் எங்கே உள்ளது மற்றும் எப்படி அடைவது?

தம்ஹினி காட் எங்கே உள்ளது மற்றும் எப்படி அடைவது?

புனேவில் இருந்து 40 கி.மீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த தம்ஹினி காட் முல்ஷி மற்றும் தம்ஹினி கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள தம்ஹினி காட் ஒரு கம்பீரமான மலைப்பாதையாகும். வளைந்த சாலைகள் அடர்ந்த காடுகள், பசுமையான மலைகள் மற்றும் வினோதமான நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தம்ஹினி காட்டின காட்டிற்கு மெருகேற்றுகின்றன. மழைக்காலங்களில் காற்று வீசும் திசையில் ஏராளமான அருவிகளும் மற்றும் நீரோடைகளும் உருவாகி இந்த இடத்தை ஒரு நேச்சர் ஹாட்ஸ்பாட்டாக மாற்றுகிறது.மும்பையில் இருந்து தம்ஹினி காட்டிற்கு ரசாயனி - இமேஜிகா தீம் பார்க் வழியாக செல்லலாம். மேலும், மும்பை கோவா வழியாகவும் தம்ஹினி காட்டை அடையலாம்.
புனேவிலிருந்து தம்ஹினி காட் செல்லும் பாதை மிகவும் பசுமையாக இருக்கும், போகும் வழியில் முல்ஷி ஏரியைக் கண்டு களித்தவாறே செல்லலாம்.

தம்ஹினி காட்டில் பார்க்க வேண்டிய விஷயங்கள்

தம்ஹினி காட்டில் பார்க்க வேண்டிய விஷயங்கள்

தம்ஹினி காட்டின் பயணம் தொடங்கிய முதலே நீங்கள் ரசிக்கும்படியான பல சூழல்களை காண்பீர்கள். அவற்றில் முதன்மையானது தம்ஹினி நீர்வீழ்ச்சியாகும், வால்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி கணிசமான உயரத்தில் இருந்து விழுந்து அடிவாரத்தில் ஒரு குளத்தை உருவாக்குகின்றது. ட்ரெக்கிங் செய்து சுற்றிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் இறங்கி நீந்தவும் செய்யலாம்.
பீமா நீர்மின் நிலையத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முல்ஷி அணை தம்ஹினி காட் அருகே உள்ள மிக அழகிய இடமாக மட்டுமல்லாமல், ரிவர் ராஃப்டிங் சாகசங்களுக்கும் பெயர் பெற்றது. இந்த இடம் பிரபலமான அவுட்டிங் மற்றும் பிக்னிக் ஸ்பாட்டாகவும் உள்ளது.
பசுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு மத்தியில் பல ஈர்க்கக்கூடிய நீரோடைகள் மற்றும் மிதக்கும் அருவிகள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும் பாதை தான் இந்த அந்தர்பன் டிரெயில் பாயிண்ட். இங்கிருந்து பலர் ட்ரெக்கிங் செய்து தம்ஹினி காட்டை அடைகின்றனர். உங்களுக்கு ட்ரெக்கிங் செய்ய விருப்பமிருந்தால் நீங்களும் இங்கு சென்று ட்ரெக்கிங்கில் ஈடுபடலாம்.
முல்ஷி ஏரி என்பது முல்ஷி அணையின் அடியில் உருவாகும் ஒரு அழகிய குளம் ஆகும். இந்த அமைதியான இடத்தின் அருகே அமர்ந்து நீங்களும் அதன் அமைதியில் மூழ்கலாம். மேலும் இங்கு படகு சவாரி செய்யவும் அனுமதி உண்டு.
மேலும் தம்ஹினி காட்டிற்கு அருகில் அமைந்துள்ள சுதாகட் கோட்டை, சரஸ்காட் கோட்டை, கங்காட் கோட்டை, தைல்பைலா மற்றும் கைலாஸ்காட் கோட்டை, சிங்ககர் கோட்டை, லவாசா சர்வதேச மாநாட்டு மையம், ராஜ்கர் கோட்டை ஆகியவற்றை பார்க்க மறக்காதீர்கள்!

தம்ஹினி காட்டிற்கு எப்போது செல்ல வேண்டும்?

தம்ஹினி காட்டிற்கு எப்போது செல்ல வேண்டும்?

இந்த மலைத்தொடர் ஆண்டு முழுவதும் பசுமையாகவும் அழகாகவும் இருக்கிறது, அதனால் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம். இருப்பினும், மழைக்காலத்தில் இந்த காட் பார்க்க மிகவும் சிறப்பானதாக மாறுகிறது.
குறிப்பாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், இப்பகுதி பச்சை நிறத்தில் மின்னுகிறது. ஏரிகளும் நீர்வீழ்ச்சிகளும் பால் போன்ற நீரால் அலங்கரிக்கப்படுகின்றன.
அதிலும் இங்கு ரோட் ட்ரிப் செய்வதே மிகவும் விசேஷம், உங்களது காரோ அல்லது இரு சக்கர வாகனமோ உங்களுக்கு பிடித்தவருடன் இங்கு ரோட் ட்ரிப் செய்து வந்து பாருங்கள்! பிறகு அடுத்த பருவமழையின் போதும் நீங்கள் மறக்காமல் இங்கு செல்லுவீர்கள்!

Read more about: tamhini ghat maharashtra india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X