Search
  • Follow NativePlanet
Share
» »கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை

கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்

By Udhaya

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற ஒரு இடம் கோவா. கோவா நகரம் போர்த்துகீசியர்களின் ஆட்சிக்கு கீழே இருந்தது. இதனால் அங்கிங்கு சில இடங்களில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை காணமுடியும். இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள். மேலும், பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள். சரி விருப்பம் இருக்கட்டும், நீங்க கோவா போக திட்டமிட்டுட்டீங்களா? மழைக்காலத்துல போறீங்களா இல்ல அடுத்த கோடைக்கு போறீங்களா? குழம்ப வேண்டாம்.. மழைக்காலம் Vs கோடைக்காலம் கோவாவுல எப்படி இருக்கும்னு இந்த பதிவுல பாக்கலாம் வாங்க!

உங்கள் விருப்பம்

உங்கள் விருப்பம்

கோவாவுக்கு செல்ல திட்டமிடுவது உங்கள் விருப்பம், எப்போது செல்லவேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்யவேண்டும். ஒரு வேளை கோடைக்காலத்தில் சென்றால் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் கோவா இப்படித்தான் இருக்கும்...

கோடைக்காலத்தில் கோவா

கோடைக்காலத்தில் கோவா

இரவுப் பறவையா நீங்கள்.. கொண்டாட்டத்தில் குதூகலிப்பவரா. இரவு விருந்து கொண்டாட்டம் கும்மாளம் வண்ண உடைகள், மின்னும் விளக்குகள் பார்ட்டி, கொண்டாட்டம் கொண்டாட்டம் பார்ட்டினு கூத்தடிக்க விரும்புகிறீர்கள் என்றால் கோடைக் காலத்தில் தான் நீங்கள் கோவாவுக்கு போகவேண்டும்.

மழைக்காலத்தில் கோவா

மழைக்காலத்தில் கோவா

குளு குளு அனுபவத்தையும், அமைதியான தனிமையான சூழ்நிலையையும் அனுபவிக்க வேண்டுமா. கடற்கரையை ரசித்து, கூட்டத்தில் அலை மோதாமல் தனிமையில் இனிமையை அனுபவிக்க கோவாவின் மழைக்காலம் சிறந்ததாக இருக்கும். நீங்கள் கண்ணுக்கினிய அழகிய காட்சிகளையும் காண முடியும். நீர் சொட்டிய மலர் மொட்டுகள், மழையும் செடி கொடிகளும் இணைந்து நடத்தும் இசைக் கச்சேரி, அதற்கு நடமாடும் மயில்கள் என சிறப்பாக அமையும் கோவா சுற்றுலா.

உண்மையான கோவாவை அறிந்து கொள்ள

உண்மையான கோவாவை அறிந்து கொள்ள

உண்மையில் கோவா எப்படிப்பட்டது. அதன் கலைகள் பண்பாடு என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள அதிக அளவில் பயணிகள் இல்லாத நேரத்தில் செல்வதே சிறந்தது. ஏனென்றால், சீசன் நேரங்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வருவார்கள். இதனால் பல இடங்களில் கூட்டம் அலைமோதும். மேற்கத்திய கலாச்சாரத்துக்கு முழுக்க முழுக்க கோவா தயாராகிவிடும். அதனாலேயே கோவாவின் உண்மை முகத்தை காண சீசன் இல்லாத போது போய் வாருங்கள்.

குறைந்த விலை சுற்றுலா

குறைந்த விலை சுற்றுலா

உங்கள் சுற்றுலா மலிவானதாக அமைய விரும்புகிறீர்களா. அப்போது ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் கோவாவுக்கு செல்லுங்கள். ஏனெனில் மற்ற சீசன் நாட்களை ஒப்பிடும்போது ஜூலை - ஆகஸ்ட் மாதங்கலில் விலை குறைவாக இருக்கும். விடுதிகளின் தங்கும் கட்டணமும் குறைவாக இருக்கும்.

ஒரு நாளை கோவாவில் கழிப்பது எப்படி

ஒரு நாளை கோவாவில் கழிப்பது எப்படி

கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும். அதுவும் கோவாவை போன்ற நாட்டின் ஒரு சில இடங்களில் தான் நீங்கள் பீருடன் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள முடியும்.

மோட்டார் சைக்கிள் ரெய்டு

மோட்டார் சைக்கிள் ரெய்டு

மேலும், கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே நீங்கள் காலைச் சிற்றுண்டிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவோரக் கடைகளில் மலிவு விலைகளில் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம். இங்கு டீ-ஷர்ட்டிலிருந்து, சன் கிளாஸ்கள் வரை எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கேண்டலிம் மற்றும் அஞ்சுனா கடற்கரைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே காணக்கூடிய செகண்ட் ஹெண்ட் மார்க்கெட் மிகவும் பிரபலம்.

மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் மூன்று கடற்கரைகள்

மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் மூன்று கடற்கரைகள்

கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைகளில் தரகர்கள் மற்றும் முகவர்களை தொடர்பு கொண்டு ஜெட்ஸ்கை, பனானா ரைட் என்று நீங்கள் உங்களுக்கு விருப்பமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.

உணவு

உணவு

ஏதேனும் ஒரு கடற்கரை குடில்களில் பீரை அருந்திக் கொண்டே கோவான் கடற்கரை உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இதில் பிரிட்டோஸ் என்ற குடில் பாகா கடற்கரையில் உள்ள குடில்களில் மிகவும் புகழ்பெற்றது. இந்த மூன்று கடற்கரைகளிலிருந்தும் முற்றிலும் வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும். இங்கு நீங்கள் உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.

பொழுது போக்கு

பொழுது போக்கு

அதுமட்டுமில்லாமல் அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம். மேலும், மற்ற கோவா கடற்கரைகளை போலவே, அஞ்சுனா பீச்சிலும் ஏராளமான குடில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக கர்லிஸ் உணவகங்களில் ஹக்கா விரும்பிகளின் கூட்டம் அலை மோதும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X