Search
  • Follow NativePlanet
Share
» »பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?

பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?

பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?

பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது காத்கோடாம்', குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது இன்றும் பயன்படுகிறது. இப்பாதை பீம்தால், பண்டய காலத்தில், புகழ்பெற்ற பட்டு பாதையின் ஒர் அங்கமாக இருந்தது என்பதை நிருபிக்கின்றது. தற்போது பீம்தால், நைனிடால் மாவட்டத்தின் ஒரு மினி தலைமையகமாக செயல்படுகிறது. சரி வாங்க... இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாம்.

பீம்தால் எப்படி செல்வது

பீம்தால் எப்படி செல்வது

பீம்தால் அருகில் இருக்கும் விமான நிலையம் பான்ட் நகர் ஆகும். இது 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து சாலை வழிகள் எளிமையாக இருக்கின்றன.

காத்கோடம் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள ரயில் நிலையம் பீம்தாலுக்கு வர எளிமையானதாக அமைகிறது.

உத்தரகண்ட்டின் பல நகரங்களிலிருந்தும், டெல்லியிலிருந்தும் பல பேருந்துகள் பீம்தாலுக்கு வந்து செல்கின்றன.

பீம்தால் வரலாறு

பீம்தால் நகரம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள பீமேஸ்வரர் ஆலயம், பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது கட்டப்பட்டது, என்று நம்பப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீம்தால் ஏரியின் இறுதியில் அமைந்துள்ள விக்டோரியா அணையை, பார்வையிடலாம்.

Krishan09

பறவைகளின் வாழிடம்

பறவைகளின் வாழிடம்

அணையின் இயற்கைக்காட்சியானது, நம்மை மெய்மறக்கச்செய்யும் அளவிற்கு உள்ளது. சுற்றுலா பயணிகள், பீம்தால் ஏரியின் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ள அக்வேரியத்தை பார்க்க முடியும். இந்த ஏரி, இமயத்தை தாண்டி இடம் பெயரும் பல பறவைகளை தன்னுள் ஈர்கிறது. இந்த ஏரியில் மிகச் சிறந்த படகுச்சவாரி வசதிகள் உள்ளன.

SHUVADIP

கார்கோடகன்

கார்கோடகன்

பீம்தாலில், நாகங்களின் அரசன் கார்கோடகனுக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த கார்கோடகன் புராண காலத்தில் பரிஷித் மகாராஜாவின் உயிரை பறித்ததாக நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், பீம்தாலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான `சத்டாலை', பார்வையிடலாம். இது ஒன்றோடொன்று இணைந்த அழகான ஏழு ஏரிகளின் தொகுப்பாகும்.

சத்டால் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கையான இருப்பிடமாக திகழ்கிறது. இங்கு 500 உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இடம் பெயரும் பறவைகள், 11000 பூச்சிகள், மற்றும் பட்டாம்பூச்சியின் 525 இனங்கள் உள்ளன.

மீன் கொத்தி பறவை(kingfisher), காட்டு பட்சி குக்குருவன் (brown-headed barbet), நீல விசில் பூங்குருவி ( blue whistling-thrush), மற்றும் வால் காக்கை(Indian tree pies) போன்ற பறவைகள் இங்கே காணப்படுகின்றன.

Sujayadhar

பயண வழிகாட்டி

பயண வழிகாட்டி

பீம்தாலுக்கு அருகில், ` காத்கோடம்' ரயில் நிலையம் உள்ளது. இது, பீம்தாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலை மூலம் பீம்தாலை அடைவது மிகவும் சுலபம். நைனிடால், டேராடூன், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளிலிருந்து பீம்தாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா பயணிகள், முசோரி, ருத்ரபிராயக், கவ்சனி, ரானிஹெட், மற்றும் உத்தரகாசிலிருந்தும் பீம்தாலுக்கு பேருந்துதில் செல்ல முடியும். தில்லிருந்து ஏராளமான ஆடம்பர சுற்றுலா பேருந்துகள் பீம்தாலுக்கு இயக்கப்படுகின்றன. இப்பகுதியில், ஆண்டு முழுவதும் துணை வெப்பமண்டல பருவநிலை நிலவுகிறது.

Sujayadhar

பருவ நிலைகள்

பருவ நிலைகள்

பீம்தால் பருவங்கள் கோடைகாலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில், பீம்தாலின் வெப்பநிலை 10 ° C முதல் 27° C வரை மாறுபடுகிறது. மழை காலத்தில், பீம்தால் கடும் மழைப்பொழிவை அனுபவிக்கிறது. உறைபனி குளிர்காலம், நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. இக்காலங்களில் வெப்பநிலை -3 ° C வரை சென்று விடுகிறது. எனவே, பீம்தாலுக்கு சுற்றுலா செல்வதற்கு கோடைகாலமே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

Animesh Gupta

Read more about: uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X