Search
  • Follow NativePlanet
Share
» »புஜ் - கடக ரேகை பாயும் வரலாற்று நகரம்!!!

புஜ் - கடக ரேகை பாயும் வரலாற்று நகரம்!!!

By

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம் காலம் தொட்டு மாவீரர் அலெக்ஸாண்டர், ஆங்கிலேயர் ஆட்சி வரை இந்திய சரித்திரத்தின் பல்வேறு பக்கங்களில் புஜ் நகரை காண முடியும்.

புஜ் நகரில் பார்க்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏராளமானவை உள்ளன. அதேபோல இயற்கை வனப்புள்ள இடங்கள், சமயம் சார்ந்த இடங்கள் என பல்வேறு வகையான புதிய சுற்றுலா அனுபவங்களை புஜ் நகரம் பயணிகளுக்கு அளித்துக்கொண்டிருக்கிறது.

புஜ் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

அயினா மஹால், காலோ துங்கார், ஹமீர்ஸர் ஏரி, பிரக் மஹால், ராம்குந்த் படிக்கிணறு, சுவாமிநாராயண் கோயில் ஆகியவை புஜ்ஜில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்.

புஜ்ஜின் சுற்றுலாத் தலங்கள்

படம் : anurag agnihotri

கடக ரேகை

கடக ரேகை

டிராபிக் ஆஃப் கேன்சர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கடக ரேகை, புஜ் மற்றும் மெஹ்சானா நகரங்களை கடந்து செல்லும் இடம்.

படம் : anurag agnihotri

ராம்குந்த் படிக்கிணறு

ராம்குந்த் படிக்கிணறு

கட்ச் அருங்காட்சியகத்துக்கு அருகில் ராம்குந்த் படிக்கிணறு அமைந்துள்ளது. இந்தப் படிக்கிணற்றில் இராமாயண கதாப்பாத்திரங்களும், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களும் மிக அழகாக ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

ராண் ஆப் கட்ச்

ராண் ஆப் கட்ச்

மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் உவர்ப்பு பாலைவனமாகவும் திகழும் ராண் ஆப் கட்ச், தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.

படம் : anurag agnihotri

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

16,000 சதுர கிலோமீட்டர் அளவில் உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனப்பகுதியாக அறியப்படும் ராண் ஆப் கட்ச், சூரிய அஸ்த்தமனத்தின் போது எவரையும் தன்னழகில் கலங்கடித்துவிடும். இதுதவிர நிலா வெளிச்சத்தில் ராண் ஆப் கட்ச் பகுதியில் ஒட்டகச் சவாரி செய்யும் அனுபவம் வானத்தில் மிதப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்!

சுவாமிநாராயண் கோயில்

சுவாமிநாராயண் கோயில்

ராம்குந்த் படிக்கிணற்றுக்கு அருகில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோயில்.

படம் : Bhargavinf

சேஷநாராயணன்

சேஷநாராயணன்

சுவாமிநாராயண் கோயிலில் உள்ள சேஷநாராயணன் சிற்பம்.

படம் : Bhargavinf

நடனம்

நடனம்

சுவாமிநாராயண் கோயிலில் காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடும் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை.

படம் : Bhargavinf

சிவபெருமான்

சிவபெருமான்

சுவாமிநாராயண் கோயிலில் உள்ள சிவன் சிலை.

படம் : Bhargavinf

சூர்ய நாராயணன்

சூர்ய நாராயணன்

சுவாமிநாராயண் கோயிலில் உள்ள சூர்ய நாராயணன் சிற்பம்.

படம் : Bhargavinf

பிரக் மஹால்

பிரக் மஹால்

இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில் ஹம் தில் தே சுக்கே சனம், லகான் போன்ற எண்ணற்ற ஹிந்தி திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

படம் : Nizil Shah

காலோ துங்கார்

காலோ துங்கார்

கருமலைகள் என்று பொருள்படும் காலோ துங்கார் என்ற மலை புஜ்ஜிலிருந்து 89 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் 'ராண் ஆப் கட்ச்'-இன் அழகை ஒரு பறவையின் பார்வையின் கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். இங்கு அமைந்திருக்கும் 400 வருடப் பழமை வாய்ந்த தத்தாத்ரேயா கோயிலை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.

படம்

தத்தாத்ரேயர் விக்ரகம்

தத்தாத்ரேயர் விக்ரகம்

தத்தாத்ரேயா கோயிலில் உள்ள தத்தாத்ரேயர் விக்ரகம்.

ஹமீர்ஸர் ஏரி

ஹமீர்ஸர் ஏரி

புஜ் நகரின் பெரும்பாலான முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை தன் கிழக்குப்புறத்தே கொண்டுள்ள, இந்த 450 வருடப் பழமை வாய்ந்த ஏரியின் கரையோரத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிய அனுபவமாகும்.

தமத்கா

தமத்கா

புஜ் நகரின் கிழக்குப் பகுதியில் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தமத்கா, அற்புதமான அஜ்ரக் அச்சுரு தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக விளங்கும் கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்குகிறது.

அயினா மஹால்

அயினா மஹால்

புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கும் அயினா மஹாலில் பலவகையான கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

படம் : calliopejen

பாரம்பரிய காலனி

பாரம்பரிய காலனி

கட்ச் மற்றும் புஜ் பகுதி மக்கள் தங்கள் திருமணத்தின் போது அணியும் பாரம்பரிய காலனி.

படம் : Meena Kadri

கட்ச் கார்னிவல்

கட்ச் கார்னிவல்

கட்ச் கார்னிவலின் போது வண்ணமயமாக காட்சியளிக்கும் புஜ் நகரம்.

படம் : Kaushik Patel

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

புஜ் ஹோட்டல் டீல்கள்

படம் : Travelling Slacker

புஜ் நகரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

புஜ் நகரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Travelling Slacker

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X