Search
  • Follow NativePlanet
Share
» »பெருநகரங்களின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள்!

பெருநகரங்களின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள்!

By

உலகம் முழுவதும் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் அமைந்துள்ளன. இவை நாம் விரும்பும், நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வந்து தருகின்றன.

இந்த ஷாப்பிங் மால்கள் தற்போது இந்தியாவின் எல்லா பெரிய நகரங்களிலும் முளைக்க தொடங்கியுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் ஷாப்பிங் மால்கள் இல்லாத நகரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் இந்தியப் பெருநகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்களில் எவை எவை அளவில் பெரியவை என்று பார்ப்போம்.

செலெக்ட் சிட்டிவாக் மால், டெல்லி

செலெக்ட் சிட்டிவாக் மால், டெல்லி

டெல்லியின் சாகேத் பகுதியில் அமைந்துள்ள செலெக்ட் சிட்டிவாக் மால்தான் இந்தியாவிலேயே அழகான ஷாப்பிங் மாலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 1,300,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷாப்பிங் மால் டெல்லியின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக திகழ்ந்து வருகிறது.

படம் : KuwarOnline

சவுத் சிட்டி மால், கொல்கத்தா

சவுத் சிட்டி மால், கொல்கத்தா

கொல்கத்தாவின் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் அமைந்துள்ள சவுத் சிட்டி மால் கிழக்கிந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஷாப்பிங் மால் 3,60,000 சதுர அடி பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Kolkatan

இன்ஆர்பிட் மால், ஹைதராபாத்

இன்ஆர்பிட் மால், ஹைதராபாத்

மாதாபூர் பகுதியில் அமைந்துள்ள இன்ஆர்பிட் மால் 14,70,000 சதுர அடி பரப்பளவில் ஹைதராபாத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக திகழ்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு பெருநகரங்களில் உள்ள இன்ஆர்பிட் மால், ஹைதராபாத்தில் 2009-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

படம் : KuwarOnline

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, மும்பை

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, மும்பை

மும்பையின் துணை நகரமாக அறியப்படும் குர்லா நகரில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிதான் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக கருதப்படுகிறது. இது 4,050,000 சதுர அடியில் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங்க மால்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

மந்திரி ஸ்கொயர் மால், பெங்களூர்

மந்திரி ஸ்கொயர் மால், பெங்களூர்

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் M.N காம்ப்ளக்ஸுக்கு அருகில் புகழ் பெற்ற சம்பிகே ரோடில் மந்திரி ஸ்கொயர் மால் அமைந்துள்ளது. இந்த ஷாப்பிங் மால் 15 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கிறது. இதனுள் 250 உள்நாட்டு மற்று வெளிநாட்டு பிராண்டுகளின் கடைகள், 39 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டுள்ள ஃபுட் கோர்ட் உட்பட 4 பிரத்யேக ரெஸ்டாரண்டுகள், 6 திரைகளுடன் ஐனாக்ஸ் திரையரங்கம், 2000 கார்கள் நிறுத்தும் வசதிகொண்ட கார் பார்க்கிங் ஆகியவை அமையப்பெற்றிருக்கின்றன.

படம் : Prateek Karandikar

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னை

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னை

24,00,000 சதுர அடி பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஷாப்பிங் மால் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி அருகே அமைந்திருக்கிறது. இங்கு 30 அறைகளை கொண்ட போட்டிக் ஹோட்டல் ஒன்றும், ஒரு ஏம்பி தியேட்டரும், 300 விற்பனைகூடங்களும் அமைந்திருக்கின்றன.

படம் : Naikshweta747

லூலூ கொச்சின் மால், கொச்சி

லூலூ கொச்சின் மால், கொச்சி

கேரள மாநிலம் கொச்சி நகரில் லூலூ கொச்சின் மால் அமைந்துள்ளது. இது 3,900,000 சதுர அடியில் கேரளாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாகவும், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த மால் வளாகத்திலேயே JW மாரியாட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் அமைந்துள்ளது.

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, புனே

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, புனே

புனே நகரில் அமைந்திருக்கும் ஷாப்பிங் மால்களிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கருதப்படுகிறது. இது 3,400,000 சதுர அடியில் பரந்து விரிந்து காணப்படுவதுடன் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

Read more about: ஷாப்பிங்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X