Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகத்தின் அசர வைக்கும் பறவைகள் சரணாலயங்கள் - எங்கே, எப்போது, எப்படி செல்லலாம்?

கர்நாடகத்தின் அசர வைக்கும் பறவைகள் சரணாலயங்கள் - எங்கே, எப்போது, எப்படி செல்லலாம்?

பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு காடுகள், யானை கூட்டங்கள் அதிகமாக உள்ள கபினி மற்றும் நாகர்ஹோல் காடுகள், தண்டேலி,பிலிகிரி ரங்கா குன்று மற்றும் பத்ரா வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகள் அதிக எண்ணிக்கையில் ச

By Udhaya

கர்நாடகாவை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு, எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் விருந்தளிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் காவேரி மீன்பிடி முகாம், பீமேஸ்வரி, கலிபோரே, தொட்டம்கலி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடிக்கும் அனுபவமே மிகவும் அலாதியானது. அதேபோல் மலை ஏறும் ஆர்வமுள்ளவர்களை அதிக அளவில் ஈர்க்கும் இடங்களாக சவன்துர்கா, சிவகிரி, ராமநகரம், அந்தர்கங்கே போன்ற இடங்கள் விளங்கி வருகின்றன. அதோடு ஹொன்னேமரடும், சிவகங்கேவும், சிவனசமுத்திரமும் , சங்கமமும் பரிசல் பயணத்துக்கும், படகு சவாரிக்கும் பிரபலமானவை.கர்நாடகாவில் உள்ள பசுமையான காடுகளுக்காகவும், அதில் வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகளை காணும் ஆர்வத்தோடும் நிறைய சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் கர்நாடகாவுக்கு வருகின்றனர். அதிலும் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு காடுகள், யானை கூட்டங்கள் அதிகமாக உள்ள கபினி மற்றும் நாகர்ஹோல் காடுகள், தண்டேலி,பிலிகிரி ரங்கா குன்று மற்றும் பத்ரா வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட கர்நாடகத்தில் இருக்கும் அசர வைக்கும் பறவைகள் சரணாலயங்களுக்கு எப்படி செல்வது எப்போது செல்வது என்பன குறித்து இந்த பதிவில் காண்போம்.

 மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

ஷிமோகா மாவட்டத்திற்கு வரும் இயற்கை ரசிகர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயம் ஆகும். துங்கா ஆற்றில் அமைந்துள்ள ஒரு தீவுப்படுகையான இது பலவகையான பறவைகளின் இருப்பிடமாக காட்சியளிக்கிறது. இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் சக்ரேபைலே யானைப்பயிற்சி முகாம் மற்றும் கஜனூர் அணை ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்யலாம். 1.14 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயம் ஒரு அழகான பிக்னிக் ஸ்தலமாகவும் கூடாரத்தங்கலுக்கு ஏற்ற இயற்கைத்தலமாகவும் காட்சியளிக்கிறது. இந்த சரணாலயத்தில் ஒரு காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து தொலைநோக்கிகள் மூலம் பலவகையான பறவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இயற்கை மர்றும் பறவைகளை பார்த்து ரசிப்பதற்காக வனத்துறையினர் படகுச்சவாரி வசதிகளையும் இங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Shashidhara halady

எப்போது எப்படி?

எப்போது எப்படி?

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலம் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற பருவம் ஆகும். மன்டகட்டே சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள சிறுநகரங்களிலிருந்து மன்டகட்டே சரணாலயத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளன. மேலும் மாலூர் ரயில் நிலையமும் அருகில் உள்ளது. மங்களூர் விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். ஷிமோகா அல்லது தீர்த்தஹள்ளி நகரங்களிலிருந்து வாடகை வாகனங்கள் மூலமாகவும் இந்த சரணாலயத்தை அடையலாம்.

ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம்

ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம்

ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரஙகணாத்திட்டு பறவைகள் சரணாலயம் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது. 1940 ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதிக்கு ஜுன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது உகந்தது.இந்த சரணாலயத்தில் பல பிரசித்தமான புலம் பெயர் பறவைகளான கூழைக்கடா (பெரிய வகைக்கொக்கு) செங்கால் நாரை போன்றவை வாழ்கின்றன. இவை தவிர அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கொக்கு, நீர்க்காகம், கௌதாரி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. படகுச்சவாரி செல்வதன் மூலம் கொக்கு, கரண்டி வாயன், நாரை போன்றவற்றை பார்க்கலாம்.பயணிகள்

Gayatri Krishnamoorthy

எப்போது எப்படி?

எப்போது எப்படி?

இந்தச் சரணாலயத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்க்கலாம். இந்தியப் பயணிகளிடம் 50 ரூபாயும் வெளி நாட்டுப் பயணிகளிடம் 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் படகுச்சவாரி செல்வதற்கும் அதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மகடி பறவைகள் சரணாலயம்

மகடி பறவைகள் சரணாலயம்


மகடி பறவைகள் சரணாலயத்தில் பயணிகள் பலவகையான அழகிய பறவைகளை பார்க்க முடியும். நீர் வாழ் உயிரினங்களுக்கு பதிலாக தாவர வகைகளை மட்டுமே உண்ணும் பட்டைத்தலை வாத்து என்னும் புலம் பெயர் பறவையை இங்கு பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக பல மத்திய ஆசிய புலம் பெயர் பறவைகளையும் மற்றும் 134 வகை பறவைகளையும் இங்கு பார்க்க முடிகிறது. செந்நாரை, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன் (ஒருவகை கொக்கு), சீப்பு மூக்கு வாத்து மற்றும் ஃபிளமிங்கோ நாரை போன்ற பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன. வெள்ளை நீர்க்கோழி, கருப்பு நாரை, மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, நீர் வாத்து மற்றும் கரண்டி வாயன் போன்ற அற்புதமான பறவைகளை இந்த சரணாலயத்தில் பார்க்கலாம். தற்சமயம்.இந்த சரணாலயம் கர்நாடக மீன் வளர்ப்புத்துறை மற்றும் மகடி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

Samadkottur

 எப்போது எப்படி

எப்போது எப்படி


கடக்'கிலிருந்து 26 கி.மீ தூரத்தில் மகடி குளம் அல்லது மகடி கேரே (ஏரி) என்று அறியப்படும் ஏரியில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்துக்கு பயணிகள் விஜயம் செய்யலாம். 134 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி 900 ஹெக்டேர் நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. இந்த ஏரியை ஒட்டி காவேரியின் துணை ஆறு ஒன்று ஓடுகிறது.

 குடவி பறவைகள் சரணாலயம்

குடவி பறவைகள் சரணாலயம்

அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த குடவி பறவைகள் சரணாலயம் பலவகை பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அர்வலர்களுக்கு இது ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இங்கு ஜுன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை பலவிதமான புகலிடப்பறவைகளை பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு இந்த சரணாலயத்தின் முக்கிய அம்சமாகும்.

0.73 ச.கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயத்தில் சாம்பல் கொக்கு, காட்டுக்கோழி, சிறு காக்கை, பரையா பருந்து மற்றும் வெள்ளை இபிஸ் கொக்கு ஆகியவை வசிக்கின்றன. கர்நாடகாவில் உள்ள ஐந்து முக்கியமான பறவைகள் சரணாலயங்களில் இந்த குடவி பறவைகள் சரணாலயமும் ஒன்றாகும்.

Atulbhats

எப்படி எப்போது

எப்படி எப்போது

குடவி பறவைகள் சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 15 கி.மீ தூரத்திலும், சாகர் நகரத்திலிருந்து 41 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள எல்லா சிறு நகரங்களிலிருந்தும் இந்த சரணாலயத்துக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. சிர்சி எனும் இடத்திலிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்திலேயே இந்த குடவிக்கு வந்து சேரலாம்.

 முட்டினகரே பறவைகள் சரணாலயம்

முட்டினகரே பறவைகள் சரணாலயம்

முட்டினகரே பறவைகள் சரணாலயம் சோண்டா பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது முட்டினகரே ஏரியில் அமைந்துள்ளது. பல அரிய பறவை இனங்கள் இங்கு ஜுன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை இனவிருத்தி காலத்தில் அதிகம் தென்படுகின்றன.


J.M.Garg

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X