Search
  • Follow NativePlanet
Share
» »இழந்ததை மீட்டுத் தரும் இலந்தையடி நாதர்!

இழந்ததை மீட்டுத் தரும் இலந்தையடி நாதர்!

இந்து மதக் கடவுள்களில் முக்கிய கடவுளான சிவன் முமூர்த்திகளுள் ஒருவர். இவ்வுளகை படைத்தது முதல் ஒவ்வொரு உயிரினங்களின் செயல்களையும் தீர்மானிப்பது சிவபெருமானே என நம்பப்படுகிறது. புராணங்களின்படி சிவபெருமானே சக்தி வாய்ந்த மூத்தக் கடவுளாக கருதப்படுகிறார். அழிக்கும் கடவுளான இவரே யாருக்கு எது என தீர்மாணமும் செய்வதாக நம்பப்படுகிறது. இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும், வேண்டியதை அருளும் என அனைவராலும் போற்றப்படுகிறது. இவற்றுள் இழந்ததை மீட்டுத் தரும் இலந்தையடி நாதர் திருத்தலம் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா ?

இலந்தை நாதர்

இலந்தை நாதர்

பிரம்மஹத்தி தோஷம் கொண்ட பிரம்மனின் பேரர் உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் சிவபெருமானை வேண்டியபடியே பயணத்திக்கொண்டிருந்த உரோமசமுனிவர் இலந்தை மரங்கள் அதிகமாக இருந்த வனப்பகுதியில் ஓய்வில் ஈடுபட்டிருந்த போது ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றிய சிவபெருமான் முனிவரின் வழிபாட்டை ஏற்று தோஷம் நீக்கினார்.

pandiaeee

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த ஆர்வார்குறிச்சி சாலையில் உள்ளது அருள்மிகு பிரம்மதேச கைலாசநாதர் திருக்கோவில். திருக்குற்றாலத் தல புராணத்தின் படி, நவ கயிலாயத் தலங்களில் பிரம்மதேசம் முதல் தலம் என்று போற்றப்படுகிறது. கல்வி கேள்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் வழிபடும் தலம் இது.

Kamal9888

மூலவர்

மூலவர்

பிரம்ம தேசத்தில் ஸ்ரீபிரஹந்நாயகி ஆம்மையாருடுன் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகைலாசநாதர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை உடைய இக்கோவிலில் ஏழு நிலைகளுடன் திகழும் கம்பீரமான வானுயர்ந்த ராஜகோபுரம் காண்போரின் மனதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் கலைநயமிக்கது.

Balajijagadesh

ராஜராஜ சோழன் கோவில்

ராஜராஜ சோழன் கோவில்

இக்கோவிலின் கூடுதல் சிறப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இத்லத்தின் உள்ள பல கல்வெட்டுக்களில் நாம் காண முடியும். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பிந்நாட்களில் பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜயநகர அரசர்களால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Ajith U

சுயம்பு மூர்த்தி

சுயம்பு மூர்த்தி

சிவசைல மலையில் வாழ்ந்துவந்த அத்ரி முனிவரிடம் தான் பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் சிவசைலம் ஆகிய திருத்தலங்களில் சுயம்புவாக அருள்பாலிப்பதாக சிவபெருமான் கூறினார் என பிரமாண்டப் புராணத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன்படியே, இக்கைலாசநாதர் கோவிலிலும் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.

சூரியன் தலம்

சூரியன் தலம்

பிரம்மதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஸ்ரீ கைலாச நாதரை வலம் வருவதால் காசிக்குச் சென்று சிவதரிசனம் செய்த புண்ணியத்தை இத்தலத்திலேயே பெறலாம். தென்மாவட்ட நவகிரக தலங்களில் சூரியனுக்குரிய தலமாகவும், பஞ்ச பீட தலங்களில் கூர்ம பீடமாகவும் இது உள்ளது. பிரம்மதேசத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ கைலாச நாதரை உத்தராயணம், தக்ஷிணாயனம் ஆகிய இரண்டு காலங்களிலும் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை படரவிட்டு தரிசிப்பதை காண முடியும்.

சிலையில் விசித்திரம்

சிலையில் விசித்திரம்

சிவபெருமான் சிலை பிட்சாடனர் சபை மண்டபத்தில் சிவபெருமான் கங்காளநாதராக சகல தேவதைகளுடன் அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமும், 250-க்கும் மேற்பட்ட கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலையானது பாதத்தின் பிடியைத் தவிர வேறெந்தப் பிடிமானமும் இன்றி நிற்கிறது. அக்காலத்திலேயே புவி ஈர்ப்பு விசையைக் கணித்து சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானம் வியப்பளிக்கிறது.

Gopinatha Rao

கலைநயத்தில் தொழில்நுட்பம்

கலைநயத்தில் தொழில்நுட்பம்

இத்திருத்தலத்தில் உள்ள பீடம் முதல் நந்திகேஸ்வரரின் வால் வரை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். நந்தியில் உள்ள மணிகள், பட்டைகள், ஆபரணங்கள் என அனைத்தும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, யாளி வாயில் இருந்து வெளியே வராத கல் உருண்டை, இருபது யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் என இக்கோவில் முழுவதும் நலைநயங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

Dineshkannambadi

தோஷ நிவர்த்தி தலம்

தோஷ நிவர்த்தி தலம்

இலந்தையடி நாதர் கைலாசநாதர் கோவிலில் வீற்றுள்ள ஆதிமூல லிங்கம் இலந்தை மரத்தடியில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீபதரிவனேஸ்வரர் சுயம்புலிங்கமாகும். பிரம்மாவின் பேரனான ரோம மஹரிஷியால் பூஜிக்கப்பட்ட இந்த இலந்தையடி நாதரையும் இலந்தை மரத்தையும் பிரதட்சணம் செய்வதால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது தொன்நம்பிக்கை.

Divya suresh

இழந்ததை மீட்கும் இலந்தை நாதர்

இழந்ததை மீட்கும் இலந்தை நாதர்

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் மிக முக்கியமான ஏதோ ஒன்றை இழந்திருப்போம். செல்வம், சொத்து, புகழ், பணி என அந்த இழப்பானது பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எதேர்ச்சியாக தவறவிட்ட இதுபோன்றவற்றி மீட்டெடுப்பதில் ஏற்படும் சிறமங்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானதாக அமையாது. இதுபோன்ற இழப்பை நிங்கள் சந்தித்துள்ளீர்கள் என்றால் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் அருள்மிகு இலந்தை கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வர இழந்தவை யாவும் மீண்டு வரும் என்பது தல நம்பிக்கை.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி என தமிழ்நாட்டடில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடனும் திருநெல்வேலி மாவட்டம் ரயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் பிற பகுதிகளில் இருந்தும், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட nவற்று மாநிலங்களில் இருந்தும் திருநெல்வேலி வந்தடைய பேருந்து வசதிகள் உள்ளன. திருநெல்வேலி நகரில் இருந்து பாபநாசம், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, மன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மூலம் இத்தலத்தை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X