Search
  • Follow NativePlanet
Share
» »பாகா கடற்கரையில் ஒரு அல்டிமேட் கஃபே

பாகா கடற்கரையில் ஒரு அல்டிமேட் கஃபே

பாகா கடற்கரையில் ஒரு அல்டிமேட் கஃபே

By Udhay

டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை பார்க்க முடியும். அதற்கு இந்த இரவு விடுதி புகழ்பெற்ற டிட்டோஸ் கஃபே நிர்வாகத்தால் நடத்தப்படுவதே காரணம். சரி வாருங்கள் கஃபே பற்றி தெரிந்துகொள்வோம்

 அதிரவைக்கும் இசை

அதிரவைக்கும் இசை

கேப் டவுன் கஃபேவின் உயரமான மேற்கூரையும், மிகப்பெரிய எல்.சி.டி திரைகளும், அதிரவைக்கும் இசையும், அற்புதமான கோவான் உணவும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும், இது மற்ற விடுதிகளை போல் அல்லாமல் உங்கள் செலவுக்கு ஏற்ற இரவு விடுதியாக இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதுமட்டுமில்லாமல் இங்கு கர்வ்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் போட்டிக் பயணிகளை வெகுவாக கவரும் அமசங்களில் ஒன்று. கேப் டவுன் கஃபேவுக்கு வெளிப்புறம் உள்ள உணவகத்தில் மரத்தினால் ஆன மேசைகளில் நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்தினரிடமோ கூட்டமாக அமர்ந்து குதூகலமாக பேசிக்கொண்டே உணவருந்தலாம்.

 மலிவு விலை பீர்

மலிவு விலை பீர்

குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியின் தந்தூரி வெளிநாட்டு பயணிகளிடையே மிகப்பிரபலம். இது தவிர டிட்டோஸ் சாலையில் நீங்கள் எங்கு தேடினாலும் இந்த விடுதியில் கிடைப்பது போல் 70 ரூபாயில் வேறெங்கும் பீர் வாங்க முடியாது. கேப் டவுன் கஃபேவுக்குள் நுழைவதற்கு பெரும்பாலும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருந்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் வார இறுதி நாட்களில் வரிகள் விதிக்கப்படுவது உண்டு. கேப் டவுன் கஃபேவுக்கு வருவதற்கு முன் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

 நடந்து செல்வது சிறந்தது

நடந்து செல்வது சிறந்தது

இந்த விடுதிக்கு வரும் பெரும்பான்மையானவர்கள் இரவு வேகுநேரமானாலும் மேசைகளை காலி செய்வதில்லை. எனவே நீங்கள் விரும்பினால் கொஞ்சம் செலவு செய்து வி.ஐ.பி இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர உங்களுக்கு கார் பார்கிங் செய்து தர இங்கு வேலட் சேவை ஏதுமில்லை. மேலும் ஒரு சில நாட்களில் நிறைய வாகனங்களை டிட்டோஸ் சாலையில் பார்க்கிங் செய்ய போக்குவரத்து காவலர்கள் அனுமதிப்பதில்லை. எனவே சற்று தள்ளி வேறு எங்காவது வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துதான் கேப் டவுனுக்கு வர வேண்டும்.

காமாக்கி

காமாக்கி


காமாக்கி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் பரபரப்பு அல்லது ஆரவாரம் என்று பொருள். அதன் பெயருக்கு தகுந்தார் போலவே காமாக்கி விடுதி டிட்டோஸ் சாலையில் அமைந்திருக்கக்கூடிய இரவு விடுதிகளில் பரபரப்பு மிகுந்ததாக அறியப்படுகிறது. இந்த உல்லாச விடுதி டிட்டோஸ் சாலையில் உள்ள மற்ற விடுதிகளை போல் அல்லாமல் சிறியதாக இருந்தாலும் இங்கு வரும் பயணிகள் கூட்டம் கஃபே டிட்டோஸ், மாம்போஸ் போன்ற புகழ்பெற்ற விடுதிகளுக்கு சவால் அளிக்கும் விதமாக உள்ளது.

விளையாட்டுகளை ரசிக்கலாம்

விளையாட்டுகளை ரசிக்கலாம்

டிட்டோஸ் சாலையில் உள்ள மற்ற விடுதிகளோடு ஒப்பிடுகையில் காமாக்கி விடுதியில் இருக்கும் இரண்டு வெவ்வேறு பகுதிகளும் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். இங்குள்ள உள்முற்றத்தில் காணப்படும் இரு மிகப்பெரிய எல்.சி.டி திரைகளில் நீங்கள் கிரிக்கெட், கால்பந்து, ஃபார்முலா ஒன் போன்ற விளையாட்டுகளை பார்த்து ரசிக்கலாம். அதோடு இதன் மற்றொரு பகுதியில் பார் டேபிள்களும், நடன மேடையும் இருக்கின்றன. இங்கு டி.ஜேக்களால் ஒலிபரப்பப்படும் டெக்னோ மற்றும் ஹிப் ஹாப் இசைத்தட்டுகள் ஆடத் தெரியாதவரையும் ஆடவைத்து விடும். காமாக்கியில் தயாரிக்கப்படும் கிரேக்க உணவு வகைகளும், மற்ற கோவா கடல் உணவுகளும் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

 சுலபமாக அடைந்து விட முடியும்

சுலபமாக அடைந்து விட முடியும்

ஒருவேளை உங்களுக்கு அந்த உணவு வகைகள் பிடிக்கவில்லை என்றால் காமாக்கியில் மது அருந்திய பின்பு அருகிலுள்ள டோமினோ'ஸ் பீசாவுக்கு சென்று இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். காமாக்கி இரவு விடுதி மாலை 6 மணியிலிருந்து, காலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும். அதோடு இந்த விடுதி டிட்டோஸ் சாலையில் அமைந்திருப்பதால் கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் சுலபமாக காமாக்கியை அடைந்து விட முடியும். மேலும் காமாக்கி விடுதிக்கு வாடகை கார் அல்லது உங்களின் சொந்த வாகனம் என்று எதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் டிட்டோஸ் சாலை அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும் பகுதி என்பதால் அதற்கு தகுந்தார் போல நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X