Search
  • Follow NativePlanet
Share
» »அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?

அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?

அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?

கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து அந்த கடற்கரைகளுக்கும் எளிதில் பயணம் செய்யமுடியும்.

Cover PC: Gayatri Priyadarshin

நடப்பதற்கு கடினமான தரைகள்

கேண்டலிம் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய அளவில் மக்கள் நடந்து செல்ல வர விருப்பப்படமாட்டார்கள். ஆனாலும் இது ஒரு வகையில் நல்லதாகத்தான் அமைகிறது. தனிமையை விரும்பும் மக்கள், தங்கள் அன்பானவர்களுடன் கொஞ்சி மகிழவும், பொழுதை கழிக்கவும் கேண்டலிம் கடற்கரையை பெரிதும் நாடுகின்றனர்.

உணவும் ஓய்வும்

சுற்றுலாவின் போது களைப்பு வந்தால் ஓய்வெடுக்கவும், பசிக்கு ருசிக்க உணவும் மிகவும் அவசியம். இங்குள்ள சில உணவகங்கள் நல்ல சுவையான உணவுப் பொருள்களை பரிமாறுகின்றன. ஓய்வெடுக்கவும் சிறந்த குடில்களுடன் கூடியுள்ளன அவை. இருந்தாலும் அவைகளும் கூட கடற்கரையிலிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் தான் காண முடியும்.

அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?

Serg Serg

தரை தட்டி நின்ற கப்பல்

கேண்டலிம் பீச்சில் 12 வருடங்களாக தரைதட்டி நிற்கும் ரிவர் பிரின்சஸ் என்ற கப்பல் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். என்னதான் இந்தக் கடற்கரை நடப்பதற்கு ஏதுவாக இல்லாமலும், குடில்களற்று காணப்பட்டாலும், ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் மணற்குன்றுகள், கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தனித்துவமான அழகு படைத்தவை.

எப்படி அடைவது

கேண்டலிம் பீச் பார்டேஸ் பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில்தான் அமைந்திருக்கிறது. அதேபோல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனாஜியிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக கேண்டலிம் பீச்சை அடைந்து விடலாம்.

Read more about: goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X