Search
  • Follow NativePlanet
Share
» »இது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்

இது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்

இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும் பச

By Udhaya

இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் வற்றாத ஏரிகள் என்று இயற்கையின் எல்லா பரிமாணங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடர்களுக்கிடையே நர்மதா மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகளும் ஒன்றுகொன்று இணையாக இம்மாநிலத்தில் பாய்கின்றன. பல்வகையான தாவரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பிய இயற்கை வளத்தை பெற்றிருப்பது இம்மாநிலத்தின் தனித்தன்மையாகும். இம்மாநிலத்தில் அமைந்துள்ள குகைகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பாக்ஹ் குகை

பாக்ஹ் குகை

தர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாக்ஹ் குகையை மத்தியப் பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த குகையில் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் அஜந்தா குகையை நினைவு படுத்தும் வகையில் இருக்கும். இந்த குகைகள் 9 நினைவுச் சின்னங்களின் குவியலாகும். இந்த குகை பாறைகள் குடைந்து உருவாக்கப்பட்டவை. சுவர் ஓவியங்களுக்கு புகழ் பெற்ற இந்த குகை, இந்தியாவின் பாறை வெட்டும் கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Nikhil2789

பாறையை குடைந்து

பாறையை குடைந்து

அஜந்தா குகைகளை போல ஒரு நதிக்கரையில் இருந்த பாறையை குடைந்து உருவாக்கப்பட்டவை தான் இந்த குகை. இந்த குகையில் குப்தா காலத்து பாகினி மற்றும் புத்த மத வாழ்க்கை முறையின் அகத் தூண்டுதல் நன்றாக தெரியும். இந்த குகை பார்ப்பதற்கு புத்த விஹாரம் அல்லது மடத்தை போல் இருக்கும். உள்ளே சிறு அறைகளும் வழிப்பாட்டு அறையும் உள்ளது. வரலாறு மற்றும் தொல்பொருள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடம் இது என்று எந்த வித சந்தேகமின்றி கூறலாம்.

Nikhil2789

பாக் குகைகள்

பாக் குகைகள்

மண்டுவிற்கு அருகில் இருக்கும் ஒன்பது குகைகள் தான் பாக் குகைகள் என்ற பெயரில் பௌத்த மடாலயங்களாக இருந்தன. இந்த குகைகளின் உட்புற சுவர்களில் இருக்கும் அழகிய அலங்கார வேலைப்பாடுகள் இந்த குகைகளை கண்டிப்பாக காண வேண்டிய இடமாக வைத்திருக்கின்றன. இந்த குகைகள் இருந்த காலம் சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் கி.பி. 400 முதல் கி.பி. 700-ம் ஆண்டுகள் வரையிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Asitjain

 ஓவியங்கள்

ஓவியங்கள்


இந்த குகைகளில் காணப்படும் ஓவியங்கள் காலத்தைக் கடந்து அழியாமல் நின்றதோடு மட்டுமல்லாமல், இயற்கையின் புண்ணியத்தால் மேலும் அழகு படுததப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. உண்மையில் இந்த மடாலயங்கள் 'குகை' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தாலும், இந்த குகைகள் இயற்கையாக உருவானவை அல்ல. இவை விந்திய மலைகளைக் குடைந்து மனிதர்களால் அரைக்கோள வடிவத்தில் உருவாக்கப்பட்ட பாறைக்குடைவு மனித-வாழிடங்களாகும். இந்த குகைகள் அஜந்தா குகைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

Bernard Gagnon

பார்வதி குகை

பார்வதி குகை


போஜேஷ்வரர் கோவிலை பார்த்தவாறு நேர் எதிரே அமைந்திருக்கிறது பார்வதி குகை. பெட்வாவின் தெற்கே அமைந்திருக்கும் பார்வதி குகை, பாறையினால் ஆன ஒரு தங்குமிடம் போல இருக்கிறது. இப்போது இந்தக் குகையில் ஆன்மீகத் துறவிகளின் உறைவிடமாக, அன்றாட வாழ்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கட்டிடக் கலை நுணுக்கங்களும், பண்டைய சிற்பங்களின் அழகும், நம்மை 11 ஆம் நூற்ற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும். இவ்விடம் ஆன்மீகத் துறவிகளின் மையமாகத் திகழ்வதால், இன்றளவிலும் மாசுபடாமல் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த எழிலுடன் அப்படியே அமைந்திருக்கிறது. சுற்றுலாத் திட்டமிடும்போதே, போஜேஷ்வரர் திருக்கோவில், பாறை ஓவியங்கள் மற்றும் கற்சிற்பங்கள், பார்வதி குகை மற்றும் போஜர் அரசரின் மாளிகை போன்ற இடங்களை பார்க்கும் வகையில் திட்டமிட்டு, தொன்மையான இந்தியாவின் சிறப்பை உணரலாம். -
wiki

போஜேஷ்வரர் திருக்கோவில்

போஜேஷ்வரர் திருக்கோவில்

கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில், மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான இது, ஒற்றைப் பாரையில் இருந்து வடிவமைக்கப்பட்டதாகும். சுமார் 7.5 அடி உயரமும், 17.8 அடி சுற்றளவும் கொண்ட அழகிய சிவலிங்கத்தின் சிறப்பை பெற்றதனால் இதனை கிழக்கு சோம்னாத் என்று அழைக்கின்றனர். 11,12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டமைப்பை கொண்டதாக விளங்குகிறது போஜேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தொன்மையான இந்தியாவின், அதிசயமாக திகழ்ந்திருக்குமாம். போஜேஷ்வரர் கோவிலின் எழில்மிகு மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகள், பாதைகள் மற்றும் சிற்பங்கள் காண்பவரை அதிசயப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
wiki

உதயகிரி குகை

உதயகிரி குகை


குப்த அரசரின் ஐந்தாம் நூற்றாண்டில் சந்தரகுப்தா இரண்டாம் மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்ட பல சிற்பங்களை கொண்ட குகைதான் இந்த உதயகிரி குகை. இது விதிஷாவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பெத்வா மற்றும் பீஸ் நதிக்கு இடையில் அமைந்துள்ளது. தனியாக மலையில் காணப்படும் இவ்விடத்தில் பல புத்த மதத்தவரை அவர்களின் அமைதியுடன் காண முடியும். இங்கு காணப்படும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று சிறப்பு கொண்டவை. இவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு கீழ் உள்ளது. இங்கு காணப்படும் பெரும்பாலான சிற்பங்கள் விஷ்ணுவின் புகழை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. குப்த காலத்தின் கலைநயத்தை எடுத்துரைக்கும் இடமாக திகழும் இவ்விடம் சிற்பத்தலான அழகிய நுலைவாயிகளுடனும் தலைநகரத்துடன் காட்சி தருகின்றது.

Ms Sarah Welch

பிம்பெட்கா

பிம்பெட்கா

இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பீமரின் பெயரைத் தாங்கியுள்ள பிம்பெட்கா இந்தியாவிலேயே மிகவும் பழமையான குகைகளில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். பிம்பெட்கா குகைகள் மற்றும் பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ளன. இவை விந்திய மலைத்தொடர்களால் சூழப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. இங்கிருக்கும் 600-க்கும் மேற்பட்ட குகைளில் பழங்கால மனிதர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பல்வேறு ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல், புலி, நாய், பல்லி, யானைகள், எருதுகள் மற்றும் பல விலங்கினங்களின் ஓவியங்களும் இந்த குகைகளில் வரையப்பட்டுள்ளன.

Bernard Gagnon

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X