Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்ட் மாநிலத்தின் அழகிய குகைகள்

உத்தரகண்ட் மாநிலத்தின் அழகிய குகைகள்

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி’ என்றும் ‘

By Udhaya

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி' என்றும் 'பூலோக சொர்க்கம்' என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும்.ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை எல்லா அம்சங்களையும் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பயணிகளுக்கு வழங்குகின்றன. அப்படிப்பட்ட உத்தரகண்ட்டில் இருக்கும் குகைகளைப் பற்றியும், அதன் அருகிலுள்ள இடங்களைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

ராபர்ஸ் கேவ்

ராபர்ஸ் கேவ்

குச்சு பாணி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ராபர்ஸ் கேவ் டேராடூன் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இது அனார்வாலா எனும் கிராமத்திற்கு அருகில் உள்ளது. ராபர்ஸ் கேவ் பிக்னிக் ஸ்தலத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் அனார்வாலா கிராமத்திற்கு சென்று அங்கிருந்து 1 கி.மீ மலையேற்றம் செய்து இந்த இடத்தை சென்றடையலாம். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்த குகை கொள்ளைக்காரர்கள் தங்கும் இடமாக இருந்ததாகவும், ஆங்கிலேயப்படைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் இங்கு பதுங்கி வசித்ததாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஒரு மலை அவ்வப்பொது மறைந்து மீண்டும் தோன்றுவதாகவும் கதைகள் உண்டு. சுற்றிலும் மலைகள் வீற்றிருக்க ஒரு அற்புதமான எழில் ஸ்தலமாக இந்த இடம் காட்சியளிக்கிறது.

Shivanjan

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சந்தளா தேவி கோயில்

சந்தளா தேவி கோயில் டேராடூன் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜய்துண்வாலா எனும் இடம் வரை பயணிகள் பேருந்தில் பயணித்து அங்கிருந்து பஞ்சாபிவாலா எனும் இடத்திற்கு வாகனத்தில் சென்று அதன்பின்னர் 2 கி.மீ மலையேற்றம் செய்து பயணிகள் இந்த கோயிலுக்கு வரவேண்டியுள்ளது. உள்ளூர் கதைகளின்படி, சந்தளா தேவி மற்றும் அவரது சகோதரர் இருவரும் முகலாயர்களை வெல்ல முடியாது என்றுணர்ந்த நிலையில் இந்த இடத்தில் தங்கள் ஆயுதங்களை வீசிவிட்டு இந்த இடத்தில் பிரார்த்தித்ததாகவும் அதன் பின் அவர்கள் தெய்வீக அருளினால் சிலைகளாக மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இங்கு பெருமளவில் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். அதுவே சந்தளா தேவி சிலையாக மாறிய கிழமையாக நம்பப்படுகிறது.

சந்திரபனி

சந்திரபனி எனும் இந்த பிரசித்தமான ஆன்மீக ஸ்தலம் டேராடூன் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. டேராடூன்-டெல்லி சாலையில் அமைந்திருக்கும் இந்த கோயில் இங்குள்ள கௌதம் குண்ட் எனும் எனும் தீர்த்தத்திற்கு பெயர் பெற்றுள்ளது. வேத காலத்தை சேர்ந்த 7 முக்கிய ரிஷிகளில் ஒருவரான கௌதம மஹரிஷி இங்கு தன் மனைவி அகலிகை மற்றும் மகள் அஞ்சனி ஆகியோரோடு வசித்ததாக சொல்லப்படுகிறது.

லச்சிவால

லச்சிவால எனும் இந்த இடம் டேராடூன் நகரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இப்பகுதியிலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றிருக்கிறது. சல் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியால் சூழப்பட்டிருக்கும் இந்த இடம் இயற்கை அழகோடு ஒளிர்கிறது. இங்குள்ள சுஸ்வா ஆற்றுக்குளம் பயணிகள் விரும்பி ரசிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகிலேயே உள்ள ஒரு பெரிய பூங்காவும் குழந்தைகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.

தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் எனப்படும் இந்த குகைக்கோயில் சிவபெருமானுக்கான கோயிலாகும். டேராடூன் நகர பேருந்து நிலையத்திலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் உள்ள இது ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் இது அமைந்திருக்கிறது. தபக் எனும் சொல்லுக்கு ஹிந்தியில் சொட்டுவது என்பது பொருளாகும். இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின்மீது நீர் சொட்டிக்கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. புராணிகக்கதையின்படி, இந்த குகைக்கோயிலிலிருந்து துரோணச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமாவுக்கு சிவபெருமான் பால் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தவிர இந்த கோயிலைச்சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகளும் காணப்படுகின்றன. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவராத்திரி திருநாளின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். அந்நாளில் இந்த கோயிலில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கான திருமணச்சடங்கு நிறைவேற்றப்படுகிறது.


dehradun.nic.in

 படல் ருத்ரேஷ்வர்

படல் ருத்ரேஷ்வர்

படல் ருத்ரேஷ்வர் என்ற குகை 1993-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த குகையின் நீளம் 40 மீட்டராகவும், அகலம் 18 மீட்டராகவும் இருக்கும். இந்த குகையில் சிவபெருமான் தவம் இருந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஒரு உள்ளூர்வாசியின் கனவில் துர்க்கை கனவில் வந்து தாம் இந்த குகையில் இருப்பதை கூறியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.
euttaranchal.com

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

பரஹி கோவில்

பரஹி கோவில் இந்துக் கடவுளான பரஹிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் சம்பவத்திலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள தேவிதுராஹ் என்னும் இடத்தில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள பெரிய கற்களை சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். இது பாண்டவர்களால் பயன்படுத்தப்பட்ட பந்துகள் என்று நம்பப்படுகிறது. இங்கு நடக்கும் பக்வல் விழாச்சந்தை ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தன் நாளன்று கொண்டாடப்படும். இந்த சந்தைக்கு நேபாளத்தை சேர்ந்த மக்களும், நாட்டில் பல ஊர்களில் இருந்து பல மக்களும் வந்துச் செல்வர். இந்த திருவிழாவின் போது இரண்டு குழுக்கள் ஆடியும் பாடியும் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்தும் விளையாடுவர். இரண்டு குழுவிற்கும் தற்காப்புக்காக பெரிய மர கவசங்கள் கொடுக்கப்படும். இது சமயஞ்சார்ந்த உணர்வு என்பதால், இதில் கலந்து கொள்பவர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த திருவிழாவை பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டாலும் இது வரை யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதாக எந்த ஒரு ஆவணமும் இல்லை

கிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில்

கிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில் கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டதாகும். இங்கு வாழும் மக்கள் இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானை கண்தேவ் மற்றும் குர்மபட் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில் சம்பவத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

கவால் தேவ்தா

கவால் தேவ்தாவை கோரில் அல்லது கோல் என்றும் அழைப்பர். இங்கிருப்பது நியாயக் கடவுளாகும். இந்த கோவில் கவாரயில் சௌர் என்ற கடவுளுக்காக கட்டப்பட்டதாகும். உள்ளூர் மக்களின் நம்பிக்கை படி இந்த கடவுள், தன் சித்தியுடன் ஏற்பட்ட பகையின் காரணமாக ஆற்றில் வீசப்பட்ட கட்யூரி ராஜாங்கத்தின் இளவரசர்.

பஞ்சேஷ்வர்

பஞ்சேஷ்வர் என்ற இடம் காளி மற்றும் சர்யூ ஆறுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இந்த ஆறுகள் சந்திக்கும் இடத்தில் முழுக்கு போடுவது மிகவும் புனிதமாக இந்துக்களால் கருதப்படுகிறது.

இந்த இடத்தின் எல்லை நேபாளத்தை ஒட்டி உள்ளது. இங்கு வருபவர்கள் 6000 மெ.வா. திறன் கொண்ட ஒரு பல்நோக்கு அணையை கண்டு களிக்கலாம்.

ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி குகைகள்

ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி குகைகள்

கௌஸனிலிருந்து, 12 கி.மீ தொலைவில், கௌஸனி-அல்மோரா சாலையில், ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி, மற்றும் குகைகள் அமைந்துள்ளன. புராணங்களில் இவ்விடம், சிவன் (ருத்ர) மற்றும் விஷ்ணு (ஹரி) உடன் தொடர்புடையகாதக இருந்தது. ஸொமேஸ்வர் சிவன் கோவில், இந்த நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுமித்ரா நந்தன் பந்த்

சுமித்ரா நந்தன் பந்த் கேலரி, கௌஸனியின் குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும். இந்த அருங்காட்சியகம், கௌஸனியில் பிறந்த புகழ்பெற்ற சம கால ஹிந்தி கவிஞரான, சுமித்ரா நந்தன் பந்த்தின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், அவரது கையெழுத்து பிரதிகள், கவிதைகள், மற்றும் அவரது பிற இலக்கிய படைப்புகளுடன், அவர் பெற்ற விருதுகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இங்கு, அவர் எழுதிய இந்தி மற்றும் ஆங்கில புத்தகங்கள், ஒரு பெரிய கண்ணாடி அலமாரியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாள் இங்கு மிக விமரிசையாக கொண்டடப்படுகிறது. அப்பொழுது அவரின் நினைவாக ஒரு கருத்தரங்கம் நடைபெறும்.

பைஜ்னாத் கோயில்

பைஜ்னாத் நகரில் அமைந்துள்ள பைஜ்னாத் கோயில் இந்து மத நம்பிக்கைகளில் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இது கௌஸனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், இந்துக்கள் மத்தியில் பெரும் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. இந்து மத புராணங்களின் படி, சிவனும் பார்வதி தேவியும், கோமதி மற்றும் காருர் ஆறுகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் திருமணம் செய்து கொண்டதாக கருதப்படுகிறது. பைஜ்னாத் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளின் போது `கத்யுரி' வம்சத்தின் தலைநகராக விள்ங்கியது. அப்பொழுது, இந்நகரம், `கார்த்திக்யாபுரா' என அழைக்கப்பட்டுள்ளது.

ருத்ர ஹரி மகாதேவர் கோவில்

ருத்ர ஹரி மகாதேவர் கோவில், கோஸி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கௌஸனியிலிருந்து ,8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த குடவரைக் கோவிலில், `கவுசிக முனிவர்' தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது.

Yann

Read more about: cave travel uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X