Search
  • Follow NativePlanet
Share
» »சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது

சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது

சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது

நரொதம்' குடும்பத்தை சேர்ந்த பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திர ஷாவின் வழித்தோன்றல்களால் பிற்காலத்தில் இங்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை அழிவின் விளிம்பில் இருந்தாலும் இன்றும் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.
சந்தெளளி சுற்றுலா

சந்தெளளியில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் ஹகியா காளி மந்திர்' மற்றும் பாபா லதீப்ஷா'வின் கல்லறை போன்றவை மிக முக்கியமானவை. சந்தெளளி வனவிலங்கு சரணாலயம் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு எல்லாம் சிகரமாக விளங்குகிறது. இந்தியாவில் அதிகம் அறியப்படாத சரணாலயங்களில் ஒன்றான இங்கு, விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.

சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது

Hyogushi

வெகுஜனசுற்றுலாவில் இருந்து தப்பித்து வரும் இந்த சரணாலயம் அதனுடைய உண்மையான அழகை தன்னுள் பாதுகாத்து வருகிறது. இது ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சரணாலயம் ஆகும். ஆசிய சிங்கங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதனால் இந்த சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது.

இந்த சரணாலயத்தில் பல்வேறு சுற்றுலா இடங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு மயிர்கூச்செரியும் ராஜ்தாரி' மற்றும் தேவ்தாரி' என்கிற இரண்டு நீர்வீழ்ச்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். சந்தெளளியை பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் மார்ச் வரை உள்ள 6 மாதங்களே சந்தெளளிக்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் ஆகும். சந்தெளளியை எவ்வாறு அடைவது? சந்தெளளியை விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக எளிதாக அணுகலாம்.
சந்தரப்ரபா சரணாலயம் சந்தெளளி மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். இது வரலாற்று சிறப்பு மிக்க வாரணாசியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது

Anup Sadi

இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அதிகம் அறியப்படாத சரணாலயங்களில் ஒன்று. பல கண்ணுக்கினிய சுற்றுலா இடங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி என்கிற இரண்டு நீர்வீழ்ச்சிகளும் அடர்ந்த பசுமையான காடுகளும் உள்ளன.

இந்த சரணாலயம் ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக 1957-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு சிங்கங்கள் தவிர முள்ளம்பன்றி, பிளாக்புக்களை, சீதல் மான், காட்டுப்பன்றி, சம்பார் மற்றும் நீலான் மான், மற்றும் இந்திய வகை அழகிய மான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன.

அதோடு இங்கு ஊர்வன இனத்தை சேர்ந்த காரியள் மற்றும் பைதான் போன்றவற்றையும் பார்க்க முடியும். இந்த சரணாலயம் பறவை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இங்கு சுமார் 150 இனங்களை சேர்ந்த உள்நாட்டு மற்றும் இடம் பெயரும் பறவைகள் காணப்படுகின்றன.

சரணாலயம் சுமார் 78 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விந்திய காட்டின் வரம்பில் உள்ள இந்த சரணாலயம் நௌகர்ஹ் மற்றும் விஜைகர்ஹ் போன்ற குன்றுகளை உள்ளடக்கியுள்ளது.

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களே இந்த சரணாலயத்தை பார்ப்பதற்கு உகந்த பருவமாகும். இங்கு நீங்கள் தங்குவதற்கு உண்டான விடுதி வசதிகள் இல்லை என்றாலும், சிற்றுண்டி வழங்கும் பல்வேறு சிற்றுண்டி சாலைகள் உள்ளன.

Read more about: uttar pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X