Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான 'ஷாப்பிங் மால்' எது தெரியுமா ??

இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான 'ஷாப்பிங் மால்' எது தெரியுமா ??

இப்போதெல்லாம் வார விடுமுறைகளை கொண்டாட ஷாப்பிங் மால்கள் மிகவும் விரும்பப்படும் இடமாக மாறிவிட்டது. ஒரே கூரையின் கீழ் எலெக்ட்ரானிக் பொருட்கள், துணி வகைகள் மற்றும் இதர விஷயங்களை வாங்கலாம், விதவிதமான உணவுகளை ருசி பார்க்கலாம், திரைப்படங்கள் பார்க்கலாம் என்பதால் நவீன வாழ்க்கை முறையின் இன்றியமையாத விஷயங்களில் ஒன்றாக 'மால்கள்' மாறிவிட்டன.

பிரம்மாண்டமான பல அடுக்கு மாடி கட்டிடங்களில் ஷாப்பிங் மால்கள் வருவதற்கு முன்பாக ஊர்களில் வார வாராம் கூடும் சந்தைகள் தான் ஷாப்பிங் செய்வதற்கான இடமாக இருந்தன. அப்படிப்பட்ட சந்தை கலாச்சாரம் மெல்ல அழிந்து வந்தாலும் டில்லியில் இருக்கும் ஓரிடத்தில் கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேலாக சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. முக்கியமாக உணவுப்பிரியர்கள் கண்டிப்பாக போக வேண்டிய இந்த இடத்தை பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு நெடுகவும் அதிகாரத்தின் மைய்யமாக இருந்து வந்திருக்கும் இந்திய நகரமென்றால் சந்தேகமே இல்லாமல் அது டெல்லி தான். இந்திய நாட்டின் தலைநகரமாக இருப்பதால் நவீன யுகத்தின் நகரமாக இது மாறிவிட்டாலும் பழைய டெல்லியின் உயிரோட்டமான இடங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் இந்த சாந்தினி சௌக்.

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

உருது மொழியில் நிலவொளியின் சதுக்கம் என பொருள் படும் இந்த இடத்தை நிர்மானித்தவர் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளமான தாஜ் மஹாலை கட்டிய முகலாய மன்னனான ஷாஹ் ஜஹான் ஆவார். குறிப்பிட்ட இடைவேளைகளில் கிணறுகளை அமைத்து அதில் நிலவின் ஒளி பிரதிபலிக்கும் வகையில் இத சந்தை வளாகத்தை வடிவமைத்தாவர் ஷாஹ் ஜஹானின் மகளான ஜாஹன் அரா ஆவார்.

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

கி.பி 1650ஆம் ஆண்டு ஷாஹ் ஜகானால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகலாய அரசின் தலைநகரத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டதே இந்த சாந்தினி சௌக் வளாகம் ஆகும்.

முகலாய அரசர்கள் தங்களின் அரச தர்பாருக்கு படை பரிவாளங்களுடன் இந்த சந்தை வழியாகவே சென்றிருக்கின்றனர். அந்த பாரம்பரியம் 1903ஆம் ஆண்டு முகலாயர்கள் வீழும் வரை தொடர்ந்து வந்திருக்கிறது.

1903ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து மன்னரின் ஊர்வலம்.

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று இங்கே கிடைக்கும் உணவுகள் தான். நீங்கள் ஒரு உணவுப்பிரியரெனில் டில்லிக்கு வரும் போது கண்டிப்பாக வரவேண்டிய இடமாகும் இந்த சாந்தினி சௌக்.

Photo:Prateek Rungta

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

முகலாயர் காலத்திய உணவுகளை அதன் தனித்துவமான சுவையுடன் சாப்பிட நினைப்பவர்கள் கண்டிப்பாக இங்கு வர வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இங்கு கிடக்கும் இனிப்பு வகைகளான ஜிலேபிகள், ரசமலாய், பலூடா போன்றவை மற்ற இடங்களில் கிடைப்பதை காட்டிலும் இங்கு அதி சுவையானதாக இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

Photo:Saad Akhtar

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக்கில் இருக்கும் கந்தேவாலா ஹவேலி என்ற இனிப்பு பலகார கடை 1790ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடந்துவருகிறது. முகலாய மன்னர்கள், 1857ஆம் ஆண்டு கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்கள், பிரதமர் நேரு, ராஜீவ் காந்தி போன்ற பல அதிமுக்கியமானவர்கள் இந்த கடைக்கு வந்திருக்கின்றனர்.

Photo:Ekabhishek

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

இந்த கடையில் 'சோகன் ஹல்வா' மக்களால் தொடர்ந்து அதிகம் விரும்பி வாங்கப்படுவதாக இக்கடையின் தற்போதைய உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு மட்டும் இல்லாமல் ஆன்லைனிலும் இக்கடையில் தாயாராகும் இனிப்புகள் கிடைக்கின்றன.

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

உணவுகளுக்கு பெயர் போனது என்பதை தாண்டி சாந்தினி சௌக் காலணிகள், அலங்கார பொருட்கள் வாங்கவும் சிறந்த இடமாகும்.

Photo:Supratim Ghosh

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மொத்த உற்பத்தி சந்தையாகவும் சாந்தினி சௌக் திகழ்கிறது. இங்கே ஜவுளி விற்பனைகேன்றே பிரதேயகமாக ஒரு பகுதி செயல்படுகிறது.

Photo:Alan Morgan

சாந்தினி சௌக் :

சாந்தினி சௌக் :

மொத்தத்தில் ஷாப்பிங் செய்திடவோ அல்லது வயிறு புடைக்க சாப்பிடவோ உங்களுக்கு விருப்பமிருந்தால் வாழ்கையில் ஒருமுறையேனும் பழமை மாறாத இந்த சாந்தினி சௌக் வர்த்தக வளாகத்திற்கு வாருங்கள். டெல்லி நகரை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Photo:Debabrata Ray

Read more about: delhi chandini chowk tajmahal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X