Search
  • Follow NativePlanet
Share
» » சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!

சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!

சென்னை விமான நிலையத்திற்கு சீக்கிரமே வந்து செல்லுகிறீர்களா? அல்லது தரையிறங்கிய பிறகு (transit) அடுத்த விமானத்தை பிடிக்க அதிக நேரம் இருக்கிறதா? நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதா? எதற்குமே கவலை வேண்டாம். இனி உங்களுக்கு இருக்கும் நேரத்தை வீணடிக்காமல் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும், ஃபுட் கோர்ட் மற்றும் ஷாப்பிங் செய்தும் மகிழலாம். சென்னை விமான நிலையத்தின் புதிய மல்டி-லெவல் கார் பார்க்கிங்கில் (MLCP) திறக்கப்படும் இந்த புதிய மாலில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று பார்ப்போம்!

நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம்

நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம்

டிசம்பர் 23 2022 அன்று, சென்னை விமான நிலையத்தில் 60,375 பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் அதிகபட்ச வருகையே இது தான் என்று கூறப்படுகிறது. விமான நிலைய ஆதாரங்களின்படி, கோவிட்-க்கு முந்தைய ஆண்டுகளில் - 2018 மற்றும் 2019 இல் கூட, பயணிகள் வருகை 60000 ஐத் தொடவில்லை. ஒரு நாளைக்கு சுமார் 40,000 மட்டுமே இருந்தது. சென்னை சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாகவும், நாட்டில் சர்வதேச போக்குவரத்துக்கான மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாகவும் உள்ளது.

காத்திருக்கும் நேரத்தில் ஒரு சினிமா

காத்திருக்கும் நேரத்தில் ஒரு சினிமா

நீங்கள் சென்னை விமான நிலையத்தை முன்கூட்டியே அடைந்தால் அல்லது தரையிறங்கிய பிறகு உங்கள் இலக்கை அடைய போதுமான நேரம் இருந்தால் அல்லது நீங்கள் ஒரு போக்குவரத்து பயணியாக இருந்தால், உங்களுக்கு இப்போது ஒரு சிறந்த வழி உள்ளது. கூடிய விரைவில் கார் பார்க்கிங் வசதியில் திறக்கப்படும் ஐந்து திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ், இரண்டு உணவு விடுதிகள், சில்லறை கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களில் நீங்கள் உங்கள் பொழுதை கழிக்கலாம்.

ஒரே நேரத்தில் 1000 பேர் வரை படம் பார்க்க்கலாம்

ஒரே நேரத்தில் 1000 பேர் வரை படம் பார்க்க்கலாம்

சமீபத்தில் பொதுமக்களுக்காக சென்னை விமான நிலையத்தில் திறக்க்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி கடந்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. உணவு விடுதிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுடன் கூடிய இந்த மல்டிபிளக்ஸ் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். இந்த பாலம் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கங்களில் திறக்கப்பட்டால் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.

கூடிய விரைவில் சர்வதேச பொழுதுபோக்கு அம்சங்கள்

கூடிய விரைவில் சர்வதேச பொழுதுபோக்கு அம்சங்கள்

ஒலிம்பியா குழுமத்தின் இயக்குனர் சந்திரகாந்த் கன்காரியா கூறுகையில், சென்னை விமான நிலையத்தின் புதிய மல்டி லெவல் பார்க்கிங் இடத்தில் திறக்கப்படும் மல்டிபிளக்ஸ் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களின் உட்புறம் மற்றும் மற்ற அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. சில அனுமதிகளுக்காகக் மட்டுமே நாங்கள் காதிருக்கிறோம், அதைப் பெற்றவுடன், 30,000 சதுர அடியில் ஃபுட் கோர்ட் உடன் கூடிய திரையரங்குகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்ள மல்டிபிளெக்ஸில் திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம், போக்குவரத்தில் உள்ள விமானப் பயணிகள் விரைவில் தங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்மக்களே!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X