Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்

சென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்

சென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்

By Gowtham Dhavamani

இயற்கை மற்றும் ஆன்மீகத்தின் கலவையானது, இறந்த ஆத்மாவிற்கு புத்துயிர் அளிப்பதற்கும் மனசாட்சியை எழுப்புவதற்கும் சரியான கலவையாகும். நீங்கள் வாழ்க்கையின் சலிப்பான வளைவுகளில் இருந்து விலகிச் செல்ல விரும்பினால், திருப்பதிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள். செல்லும் வழி முழுவதும் பரவியிருக்கும் மிகச்சிறந்த பசுமை சூழல் உங்களை கவர்வதை உணர்வீர்கள்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகராக அறியப்படும் திருப்பதி, உடல், மனது மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மைப்படுத்த சிறந்த இடம் ஆகும். இது பல முறை சிறந்த பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருப்பதி நகரம் பழங்கால கோயில்கள், நீர்வீழ்ச்சிகள், பசுமை நிறைந்த மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளவும் உற்சாகப் படுத்திக்கொள்ளவும் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல விரும்புகிறீர்களா?

 திருப்பதி செல்ல சிறந்த நேரம்:

திருப்பதி செல்ல சிறந்த நேரம்:

கோடை காலத்தின்போது திருப்பதிக்கு செல்வது உகந்ததல்ல, ஈரப்பதமும், வறண்ட காலநிலையும் இருக்கும் சமயம் செல்வது நல்லது. அக்டோபரிலிருந்து பிப்ரவரி இறுதி வரை திருப்பதிக்கு செல்ல ஏற்ற காலமாகும். வானிலையும் வெப்பநிலையும் சாதகமாக இருக்கும்.

Pranav

செல்வது எவ்வாறு:

செல்வது எவ்வாறு:

விமான வழி:

சென்னைக்கு நீங்கள் விமானம் மூலம் வருவதானால் திருப்பதிக்கு விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு வண்டி எடுத்துக்கொள்ளலாம். அல்லது சென்னை நகருக்கு ஒரு வாடகை வண்டியை எடுத்து, அங்கிருந்து திருப்பதிக்கு ஒரு பேருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டிருக்கும் திருப்பதி விமான நிலையத்திற்கு நீங்கள் நேரடியாக விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம்

ரயில் பயணம்:

சென்னை 2 திருப்பதிக்கு ரயில் வசதிகள் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு நேரடியாக இரயில் பயணம் செய்ய முடியும். இந்த பயணம் 2 மணி 30 நிமிடம் தோராயமாக நேரம் எடுக்கும்.

சாலை பயணம்:

சென்னை நகரிலிருந்து சாலை வழியாக எளிதில் திருப்பதி சென்றடையலாம். சென்னை 2 திருப்பதிக்கு ஒரு வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் அல்லது சென்னையிலிருந்து திருப்பதிக்கு பஸ்சில் பயணம் செய்யலாம்.

நீங்கள் சொந்தமாக பயணிக்கிறீர்கள் என்றால், பின்வரும் வழிகளை கவனிக்கவும்..

வழி 1: சென்னை - புழல் - பெரியப்பாளையம் - புத்தூர் - திருப்பதி

வழி 2: சென்னை - திருவள்ளூர் - திருத்தணி - புத்தூர் - திருப்பதி

வழி 3: சென்னை - பெருமாள்பட்டு - திருவள்ளூர் - புத்தூர் - திருப்பதி

இருப்பினும், பாதை 1 வேகமானது, சிறந்தது.

நீங்கள் திருப்பதிக்குச் செல்லும்போது, பின்வரும் இடங்களில் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம், இது உங்கள் பயணத்தை மிகவும் சுவாரசியமானதாக அதிசயங்கள் நிறைந்ததாகவும் மாற்றும்.

புழல் ஏரி:

புழல் ஏரி:

பிரிட்டிஷ் காலத்தில் 1876 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இது மாநிலத்தில் முக்கிய மழை-நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். அதன் உருவாக்கத்தில் இருந்த, சுற்றியுள்ள நகரங்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. அமைதியான சூழலில் உட்கார்ந்து நேரம் செலவிட நீங்கள் எதிர்பார்த்திருந்தால், சென்னை வழியாக திருப்பதிக்கு செல்லும் வழியில் புழல் ஏரிக்கு வருகை தர வேண்டும்.
Puzhal

பெரியப்பாளையம்:

பெரியப்பாளையம்:


பெரியப்பாளையத்தின் பிரதான ஈர்ப்பான ஆரணி ஆற்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பார்வதி தேவியின் அவதாரமான பவானிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பெரும் விழாக்களுக்கு வருகிறார்கள். இந்த அற்புதமான கோயில் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளன.
official

கைலாசகோண நீர்வீழ்ச்சி:

கைலாசகோண நீர்வீழ்ச்சி:


சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் இந்த அருமையான நீர்வீழ்ச்சியை பார்க்காமல் செல்ல முடியாது. காலப்போக்கில், இது அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் பிடித்த நிறுத்தமாக மாறி உள்ளது. ஆன்மீகம் மற்றும் அமைதியின் சாராம்சத்தை இங்கே உணரலாம். நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலுக்கு செல்ல மறக்கவேண்டாம். விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் நீங்கள் உங்கள் ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்கலாம்.
wiki

நாகலாபுரம்:

நாகலாபுரம்:


கோயில்களிலிருந்து மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், சிறிய ஏரிகள் வரை, இந்த நகரம் ஒரு பயணி விரும்பும் அனைத்தையும் கொண்டுள்ளது. அழகிய நீர்த்தேக்கத்தில் உங்கள் ஆத்மாவை உயிர்ப்பிக்க அல்லது வேதநாராயணர் ஆலயத்தில் ஆசீர்வாதம் பெற இங்கே வரவும்.
amilyshy

திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்:

திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்:


நீங்கள் திருப்பதிக்கு வந்தவுடன், காற்றில் சிதறிக் கொண்டிருக்கும் ஆன்மீகத்தை அனுபவித்து மகிழலாம். திருப்பதியில் செல்ல வேண்டிய இடங்கள் பின் வருமாறு.

1. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்:

பயணிகள் மற்றும் பக்தர்களுக்காக திருவெங்கடேஷ்வரா கோவில் திருப்பதியில் முக்கிய இடமாக உள்ளது. இந்த கோவில் திருப்பதிக்கு ஒத்ததாக உள்ளது. பண்டிகை காலங்களில், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், இந்து பக்தர்களையும் இங்கு காணலாம்.

செவன் ஹில்ஸ் கோவில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கண்டிப்பாக ஒவ்வொரு வழிப்போக்கரும் பார்க்க விரும்பும் கோவிலாகும். திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் வருகை தரும் இடமாகும்.
wiki

கபிலா தீர்த்தம்:

கபிலா தீர்த்தம்:

இது ஒரு புகழ்பெற்ற சிவன் கோவில் ஆகும். திருமலா மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கபிலா தீர்த்தம் அதன் ஆதியில் இருந்து ஒரு பெரிய ஆன்மீக மையமாக விளங்குகிறது. இன்று ஆந்திராவின் புனித தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

கோயிலுக்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியின் புத்துயிரூட்டும் நீரில் குளித்து, உங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் இந்த வாய்ப்பை இழக்காதீர்கள்.

wiki

தலகோண நீர்வீழ்ச்சி:

தலகோண நீர்வீழ்ச்சி:

நீங்கள் இயற்கை விரும்பியாக, சாகசம் தேடுபவராக இருந்தால், திருப்பதிக்கு வருகை தந்து, தலக்கோண நீர்வீழ்ச்சிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். அதன் தெளிவான நீர் மற்றும் அழகிய சூழல், மழைக்காலங்களில் திருப்பதியில் இதனை ஒரு முக்கிய இடமாக மாற்றியுள்ளது.

vinothchandar

கோவிந்தராஜசுவாமி கோவில்:

கோவிந்தராஜசுவாமி கோவில்:


கோவிந்தராஜ சுவாமி கோவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரில் செல்ல செய்ய வேண்டிய முக்கியமான இன்னொரு கோவிலாகும். இந்த கோவிலின் அஸ்திவாரம் ஸ்ரீ ராமானுஜரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

அது மட்டுமல்லாது இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் ஏராளமான சுற்றுலா பயணிகளை இந்த கோவில் ஈர்த்து வருகின்றது.
azwegers

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X