Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்

சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்

By Venkatakrishnan S

சென்னை தொன்மையான பல நகரங்களை தன்னடக்கிய தமிழகத்தின் தலைநகரம். ஒவ்வொரு நகரமும் தன் வரலாற்று எச்சங்களை இன்றளவும் நமக்கு தந்து தன்னிகரில்லாமல் விளங்குகிறது. கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பே உருவான கோட்டைகள் ஆனாலும் ஆலயங்கள் ஆனாலும் நம் பண்டைய வீர வரலாற்றை, பண்பாட்டு கலாச்சார பெருமைகளை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது.

சென்னையை அடுத்து வேலூர் கோட்டைகளும் கோவிலும் சூழ்ந்த ஒரு பெருமை மிக்க நகரம். பல்லவ, சோழ, மவுரிய, கர்நாடக, மொகாலய, ஆங்கிலேய ஆட்சிகளின் பல்வேறு ஆளுமைக்கூறுகளின் வேர்களை வேலூர் நகர வரலாற்று சுவடுகள் மொத்த இந்திய வரலாற்று ஆய்வுகளில் ஆழமாக புதைத்துள்ளது. இதனால் தான் இந்திய அளவில் வரலாற்று நினைவிடங்களை சுற்றி பார்க்கும் ஆர்வலர்கள் அதிக அளவில் வேலூர் நகரத்தை நாடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இது தவிர மக்களின் மனம் கவர்ந்த மலை வாஸ்தலமான இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரியும் சுற்றுலா செல்ல விருப்பமான மக்களை மிகவும் ஈர்த்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களையும் கூட சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேலூர் கவர்ந்து வருகிறது.

செல்ல சிறந்த காலம்

செல்ல சிறந்த காலம்

கோடையில் வேலூர் கொதிநிலையில் தான் இருக்கும் என்பார்கள். அதனால் கோடையில் வேலூர் வெப்ப பூமி என்பதால் அப்போது வருவதை தவிர்ப்பதே நல்லது. ஆனால் அந்த சமயங்களில் ஏலகிரி மலை ஸ்தலம் ஏற்ற இடம். ஆனால் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வேலூர் நகரம் சந்தோஷமாக சுற்றி பார்க்க சொர்க்கம் தான்.

PC- Soham Banerjee

எப்படி செல்வது

எப்படி செல்வது

சென்னை ஏர்போர்டில் இருந்து வேலூருக்கு 130 கிலோ மீட்டர். அங்கிருந்து சென்னை நகருக்கு சென்று பஸ்ஸிலோ அல்லது ஏர்போர்டிலிருந்து நேரடியாக டாக்ஸியிலும் செல்லலாம்.

ரயிலில் என்றால் வேலூர் சென்னை உட்பட அனைத்து நகரங்களையும் நன்றாகவே இணைத்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வட வேலூர் பகுதியான காட்பாடி ஜங்ஷனுக்கு வரலாம். அங்கிருந்து டாக்ஸியில் வேலூர் நகருக்குள் செல்ல முடியும்.

சாலை மார்க்கமாக சென்னை வேலூர் சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் என்றாலும் இரண்டு வழிகள் உள்ளன.

ரூட் 1: சென்னை - செம்மரம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் - திருப்புட்குழி - வேலூர்

ரூட் 2: சென்னை - திருவள்ளூர் - அரக்கோணம் - வேலூர்

ஆனால் ரூட் 1 தான் விரைவில் செல்ல ஏதுவானதாக கருதப்படுகிறது. சரி சென்னை முதல் வேலூர் வரை செல்லும் வழியில் ஆங்காங்கே கண்டுகளித்து மகிழ ஏற்ற இடங்களை இனி காண்போம்.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம்

அடையார் ஆற்றின் ஆதிமூலம் தான் செம்பரம்பாக்கம் ஏரி. ஏரியின் பெயராலயே இந்த இடம் செம்பரம்பாக்கம் ஆனது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தண்ணீர் தேவைகளை செம்பரம்பாக்கம் ஏரி தான் இதுவரை செவ்வனே தீர்த்து வருகிறது.

ஏரி கரையில் உள்ள உள்ள சிவ ஆலயமும் பிரசித்து பெற்ற ஸ்தலம் தான். ஏரியின் அழகை ரசித்துக் கொண்டே சிவனையும் வழிபட்டு, சிறிது ஓய்வெடுத்து விட்டு வேலூரை நோக்கி பயணிக்கலாம்.

PC- ViNo G

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர்

பொதுவாக சென்னை முதல் வேலூர் வரையிலான பாதையில் ஏரளமான ஏரிகளும் கோவில்களும் நிறைந்துள்ளன. செல்லும் வழியில் ஆன்மீகத்தையும் அழகையும் தரிசித்த படி வேலூரை நோக்கி பயணிக்கலாம். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூரின் பிரசித்தி பெற்ற உப்பு ஏரியும் அதனை சுற்றியுள்ள கோவில்களுமே கண்டு ஓய்வு எடுத்து செல்ல ஏற்ற இடம் தான்.

திருப்புட்குழி

வேலூர் செல்லும் வழியில் திருப்புட்குழி நகர் இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தான். 13வது நூற்றாண்டில் விஜயராகவசாமிக்கு அர்பணிக்கப்பட்டுள்ள கோவில் தான் திருப்புட்குழி ஊரின் சிறப்பம்சம். இது பாண்டியர் காலத்தில் கட்டபட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த கோவிலின் வருடாந்திர விழா மிகவும் விஷேசமானது ஆகும். ஆன்மிக சுற்றுலா பயணிகள் வேலூர் செல்லும் வழியில் தங்கிச் செல்ல திருப்புட்குழி சிறந்த இடம்.

வேலூரை சுற்றியுள்ள இடங்கள்

வேலூரை சென்று அடைந்த பிறகு நீங்கள் முதலில் காண வேண்டியது வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை தான். கோட்டையின் கம்பீரமும், நவீன கட்டிடக் கலையும் நம்மை பிரமிக்க வைக்கும். வேலூர் பல புண்ணிய திருத்தலங்களையும், புராதன வரலாற்று சின்னங்களையும் தன் அடையாளமாக கொண்ட அற்புத நகரம் என்றால் அது மிகையல்ல.

PC- Destination8infinity

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

வேலூர் தமிழகத்தின் கோட்டை நகரம் என்றே அழைக்கப்படுகிறது. வேலூர் பல அற்புதமான கோட்டைகளையும், பண்டைய கட்டிங்களையும் கொண்டது. விஜயநகர மன்னர்களின் காலம் தொட்டு கற்காலம் வரை இன்னும் பல கோட்டைகள் நம் கண்முன்னே தன் பழங்கால பெருமைகளை பேசியபடி கம்பீரமாக நின்று நம் கவனத்தை ஈர்க்கிறது.

பரந்த கரையோரம், பிரமாண்ட அரண்மனைகளோடு பரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி மற்றும் செயின்ட் ஜான்ஸ் சர்ச் வேலூர் மத்தியில் நின்றபடி மதசார்பின்மையை மாண்போடு பறைசாற்றுகிறது. கோட்டைக்குள் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் குறிப்பாக கோவிலின் உச்சியில் அமைந்துள்ள அழகு சிற்பங்கள் பண்டைய கால கட்டிக்கலையின் உச்சம் தான் என்பதை அதை பார்த்து ரசிக்கும் போதே நீங்கள் பெருமையாக உணர்வீர்கள்.

PC- Fahad Faisal

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

விஜயநகர காலகட்டத்தில் இந்த திருக்கோவிலின் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விஜயநகர கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. விஜயநகர பேரரசுகளின் கட்டிட கலை திறனுக்கான மாஸ்டர் பீஸ் இந்த திருக்கோவில் என்பது தான் வேலூரின் பெருமைகளுள் ஒன்று.

வேலூர் கோட்டையின் ஈர்ப்பு மையம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. கோட்டையால் சூழப்பட்ட இந்த கோட்டையின் செயின்ட் ஜான்ஸ் சர்ச் மற்றும் பிற பாழடைந்த அரண்மனைகளுக்கு அருகில் உள்ளது.

மரத்தாலான வாயில்கள் மற்றும் கோயில்கள், பல்லி மற்றும் பாம்பு சிற்பங்கள் போன்றவை தவிர சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய இடமாக உள்ளது. வரலாற்றின் செழுமையை ஆராய நீங்கள் ரசிக்க விரும்பினால், இந்த கோவில் உங்களின் சரியான தேர்வாகவே அமையும்.

PC- Kumar Appaiah

ஸ்ரீலெட்சுமி தங்கக் கோவில்

ஸ்ரீலெட்சுமி தங்கக் கோவில்

வேலூர் நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பெரிய கோயில் ஸ்ரீலக்ஷ்மி தங்கக் கோயில் ஆகும். இது ஸ்ரீரங்கம் ஆன்மீக பூங்காவில் அமைந்துள்ளது. லட்சுமி நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் 1500 கிலோ கிராம் தூய தங்கத்துடன் அலங்கரிக்க பட்டுள்ளது. இந்த புகழ்பெற்ற தங்க கோவிலை தரிசிக்க நகரம் முழுவதும் மற்றும் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மற்றும் வழிபாடு செய்பவர்கள் இங்கே சுற்றி பரவி ஆன்மீகத்தில் திளைப்பதை காணலாம்.

PC- Ag1707

ஏலகிரி

ஏலகிரி

வேலூருக்கு சென்று விட்டு ஏலகிரி மலையில் ஏறாமல் திரும்பினால் நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை. அழகிய மலை நகரமாய், இயற்கை எழில் கொஞ்சும் அற்புத மலை வாஸ்தலம் தான் ஏலகிரி. மனதில் என்ன சஞ்சலங்கள் இருந்தால் ஏலகிரி மலையில் ஏறிவிட்டால் உங்கள் மனதில் அமைதியும் ஏற்றம் கொண்டு விடும் என்பார்கள். மனதை மயக்கும் பசுமைத் தோட்டங்களும், பார்த்தாலே பரவச படவைக்கும் பழத்தோட்டங்களும், பற பறவென காற்று வீசும் கண்ணை கவரும் பள்ளத்தாக்குகளும் ஏலகிரி அழகின் அடையாளங்கள் ஆகும்.

ஏலகிரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1110 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அழகு சோலை. இந்தியாவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட மலை பிரதேசங்களின் பட்டியலில் ஏலகிரியும் உண்டு. நீங்கள் இயற்கையோடு பேச விரும்பினால் ஏலகிரி உங்களுக்கு ஏற்ற சாய்ஸ் தான்.

PC- solarisgirl

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more