Search
  • Follow NativePlanet
Share
» » சென்னை to ஏற்காடு – இரண்டு நாட்கள் பட்ஜெட் சுற்றுலா பிளான் இதோ!

சென்னை to ஏற்காடு – இரண்டு நாட்கள் பட்ஜெட் சுற்றுலா பிளான் இதோ!

அடுத்த வாரத்தில் தொடர் விடுமுறை வரவிருக்கிறது அல்லவா? அலுவலகம், வேலைப்பளு, டென்ஷன், மன அழுத்தம் இப்படி எல்லாவற்றிலும் இருந்து விடுபட ஒரு சின்ன சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா! இந்தப் பதிவு உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும். ஆம்! சென்னையில் இருந்து இரண்டு நாட்கள் பட்ஜெட் சுற்றுலா செல்ல உங்களுக்கான டூர் கைடு இதோ!

"ஏழு காடுகளின் நிலம்", "ஏழைகளின் ஊட்டி" என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காடு தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும்.

ஏராளமான பசுமைகள் நிறைந்த ஏற்காடுக்கும் சுற்றுலாவிற்குமான தொடர்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உண்டு எனலாம். கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

சென்னை to ஏற்காடு ரோடு ட்ரிப்

சென்னை to ஏற்காடு ரோடு ட்ரிப்

வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது! அதே நேரத்தில் அடுத்த வாரம் நீண்ட விடுமுறையும் வரவிருக்கிறது. இதைக் கண்டிப்பாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து ஏற்காட்டிற்கு சென்று வர இரண்டு நாட்கள் தாரளாமாக போதும்.

சென்னையிலிருந்து ஏற்காடு வரையிலான பயணத்திற்கு சிறந்த தரத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் தேவைப்படும், இது உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

நீங்கள் உங்கள் சொந்த காரில் அல்லது பைக்கில் புறப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தொடங்குவதற்கு முன் அதன் பாகங்களை சரிபார்த்து, பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள். வாகனத்தின் சான்றுகள், டிரைவிங் லைசென்ஸ், ATM கார்டு, பணம், பேக் ஆகியவற்றை ரெடி செய்துக் கொள்ளுங்கள்.

சென்னை to ஏற்காடு பயணம்

சென்னை to ஏற்காடு பயணம்

அனைத்து ரெடி தானே, இப்போது கிளம்பலாம் அல்லவா! நீங்கள் சென்னையில் இருந்து இரவுப் பயணம் மேற்கொள்ளலாம் அல்லது அதிகாலையில் பயணத்தை தொடங்கலாம். நீங்கள் சென்னையின் எந்த இடத்தில் இருந்தாலும் GST சாலை எனப்படும் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு (எ) தேசிய நெடுஞ்சாலை 45 பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்! நீங்கள் எங்கு இருந்தாலும் NH 45 இல் வந்தடையவும். ஆம்!அதில் தான் 50 கிமீ தூரத்திற்கு பயணிக்க போகிறோம்.

பின்னர் சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை (எ) NH 68 இல் பயணிக்க வேண்டும். அதன் பிறகு அயோத்தியாப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் 9 கிமீ பயணித்தப் பின்னர், குப்பனூரில் ஏற்காடு காட் சாலையை நீங்கள் காண்பீர்கள்!

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் காட் சாலையில் தேக்குமரக் காடுகளின் அழகிய காட்சியை ரசிக்கலாம். ஈரமான காற்று, பசுமையான மரங்கள் மற்றும் சிட்ரஸின் வலுவான வாசனை உங்களை மேல்நோக்கி பயணத்திற்கு வரவேற்கும். 20 ஹேர்பின் வளைவுகள் இருப்பதால் நீங்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏற்காட்டில் முதல் நாள்

ஏற்காட்டில் முதல் நாள்

நீங்கள் சென்னையில் இருந்து ஏற்காட்டை வந்தடைய எப்படியும் ஆறு மணி நேரம் ஆகும். ஏற்கனவே சொன்னபடி நீங்கள் இரவே கிளம்பியிருந்தாலும் அல்லது அதிகாலை கிளம்பியிருந்தாலும் உங்களுக்கு சற்று ஓய்வு என்பது தேவை.

ஆகவே, உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம். உங்கள் அறைகளில் ஓய்வெடுத்தப் பின்னர் குளித்து ரெடியாகி, சைட்சீயிங்கிற்கு செல்லலாம்.

முதல் நாளில் நீங்கள் இந்தியாவின் தாவரவியல் ஆய்வின் தெற்கு வட்டத்தால் பராமரிக்கப்படும் ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, லேடி சீட், லேடி சீட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஏற்காட்டின் பட்டுப் பண்ணை, டிப்பரரி வியூ பாயின்ட், கிரேஞ்ச், மான் பூங்கா, அண்ணா பூங்கா ஆகியவற்றை ஆராயலாம்.

மதிய உணவு நீங்கள் வெளியிலேயே அருந்திக் கொள்ளலாம். சைட்சீயிங் முடித்துவிட்டு ரூமுக்கு திரும்பிய பின்னர் கேம்ப்ஃபைர் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை ஆசுவாசப்படுத்தலாம்.

ஏற்காட்டில் இரண்டாம் நாள்

ஏற்காட்டில் இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் காலையில் குளித்து ரெடியாகி, காலை உணவுக்கு பின்னர் நீங்கள் சைட்சீயிங்கிற்கு செல்லலாம். இரண்டாம் நாளில் நீங்கள் முதலில் ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படும் எமரால்டு ஏரியைத் தான் பார்வையிட வேண்டும். ஏரியில் படகு சவாரி செய்யும் வசதியும் உண்டு.

பின்னர் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள பகோடா பாயின்ட், இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, செவ்வராய் டெம்பிள் வியூபாயின்ட், 32-கிமீ லூப் ரோடு, பியர்ஸ் குகை, கொட்டச்சேடு தேக்கு காடு, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயில் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம்.

ஏற்காடு to சென்னை பயணம்இந்த நேரத்தில் ஏற்காடு ரோடு ட்ரிப் செல்வது தான் மிகச் சரியாக இருக்கும்.

ஏற்காடு to சென்னை பயணம்இந்த நேரத்தில் ஏற்காடு ரோடு ட்ரிப் செல்வது தான் மிகச் சரியாக இருக்கும்.

அனைத்தையும் கண்டுவிட்டாகி விட்டது. இனி சென்னையை நோக்கி பயணிக்கலாம் தானே! உங்களுக்கு ஷாப்பிங் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் கிளம்பலாம்.

ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது இந்த நேரத்தில் ஏற்காடு ரோடு ட்ரிப் செல்வது தான் மிகச் சரியாக இருக்கும்.

ஆகவே நீண்ட நேரம் யோசிக்க வேண்டும்! மேற்கண்ட அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏற்காட்டை சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக மாற்றுகிறது. உங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடனோ அல்லது சோலோ ட்ரிப் ஆகவோ ஏற்காடுச் செல்ல உடனே திட்டமிடுங்கள்!

Read more about: yercaud salem tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X