Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை தனது 383 வது வயதில் கால் எடுத்து வைக்கிறது – சென்னை களைகட்டியது!

சென்னை தனது 383 வது வயதில் கால் எடுத்து வைக்கிறது – சென்னை களைகட்டியது!

இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி என்றால் அது சென்னை மாநகராட்சி தான். இன்று சென்னை தன் 383 வது வயதில் காலெடுத்து வைக்கிறது. தற்போதைய சென்னை ஆனால் முன்னாள் மெட்ராஸ் - இந்த நகரம் ஒவ்வொருவரின் இதயத்திலும் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை எப்போதுமே அதன் செழுமையான கலாச்சாரம், அதன் இயற்கை காட்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பலவற்றின் பல்வேறு பக்கங்களைக் காட்டிய நிலமாக இருந்து வருகிறது.

தலைநகராக இருப்பதால், சென்னை தமிழகத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னகத்திற்கும் கலாச்சார, வணிக, காஸ்மோபாலிட்டன், கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையமாக எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று பிறந்தநாள்! சென்னையின் சென்னையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும், சென்னை தினக் கொண்டாட்டங்கள் பற்றியும் காண்போம்!

சென்னை உருவான வரலாறு

டச்சுக்காரர்கள் 1599-ம் ஆண்டு ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் ஆக உயர்த்தியவுடன், லண்டனில் உள்ள வர்த்தக மையத்தில் வியாபாரிகள் ஒன்று கூடி விலை உயர்வை எதிர்த்து 1600-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிழக்கிந்திய கம்பெனி நிறுவினார்கள். முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர்.போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை கம்பெனி அதிகாரிகள் வெங்கடப்பா, அய்யப்பாவிடமிருந்து மதராஸ் பட்டணம் என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர்.

இந்த அனுமதி பத்திரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி எழுதப்பட்டது. இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள். ஆம் இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்தன.

chennaiday20222-1661161038.jpg -Properties

சென்னை தினக் கொண்டாட்டம்

மதராஸப்பட்டணமாக இருந்து ஆக சென்னைப்பட்டினம் ஆக மாறி, பின்னர் சென்னையாக மாறி, இப்போது பெருநகர சென்னை மாநகராட்சியாக அதாவது சிங்கார சென்னையாக மாறிய நம் சென்னைக்கு இன்று 383 வது பிறந்தாள். ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கிய மெட்ராஸ் வார கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பல நிகழ்வுகளுடன் நடைபெறும்.

· பழைய மெட்ராஸின் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவுகூரும் வகையில், பாரம்பரிய நடைப்பயணங்கள் மூலம் இடங்களை மீண்டும் பார்வையிடலாம்.

· மெட்ராஸ் லோக்கல் ஹிஸ்டரி குரூப், நகர வரலாற்றாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்த விண்டேஜ் படங்கள் மற்றும் போஸ்ட் கார்டுகளின் கண்காட்சி.

· மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியில் 'மெட்ராஸ் மேப்ஸ்' எனும் வரைபட நிகழ்ச்சியில் நகரத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதையும், அதே நேரத்தில் காலத்தால் அழியாத பல அரிய வரைபடங்களையும் காணலாம்.

· சென்னை வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

· வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கோலாகலமாக நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

· தமிழ்நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம், சென்னையின் வரலாறு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

· மேலும் பல விளையாட்டுப் போட்டிகள், பல வகையான சுவைமிகு உணவு ஸ்டால்கள், கைவினைப் பொருட்களின் ஸ்டால்கள், ஷாப்பிங் பொருட்கள் ஆகியவை அங்கு இருந்ததால் மக்கள் பலரும் ஆரவாரமாக சென்னை தினத்தைக் கொண்டாடினர்.

பல சாதனைகளையும், பல வரலாற்றையும் அடைந்த சென்னை மென்மேலும் செழிக்க நாம் பிரார்த்திப்போம்.

Read more about: chennai day chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X