Search
  • Follow NativePlanet
Share
» »சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

By Naveen

தமிழ்நாட்டில் மதுரை நகருக்கு இணையான பழமையும், ஆன்மீக செழுமையும் கொண்ட நகரம் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் ஆகும். சைவ திருத்தலங்களுள் மிக முக்கியமானதாக கருதப்படும் தில்லை நடராசர் கோயில் இங்கே தான் அமைந்திருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலை பற்றிய குறிப்புகள் ஏழாம் நூற்றாண்டில் சைவக்குரவர்கள் பாடிய தேவாரத்தில் காணப்படுகின்றன. பொற்கூரை வேயப்பட்ட கருவறையின் உள்ளே தில்லை நடராசர் அருள்பாலிக்கிறார். எண்ணற்ற பெருமையும், சிறப்பையும் கொண்டிருக்கும் இக்கோயிலை பற்றிய முக சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் நடராசர் கோயிலானது தமிழ்நாட்டில் இருக்கும் சைவ கோயில்களுள் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என தென்னிந்தியாவை ஆண்ட அனைத்து அரசர்களும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோயிலுக்கு கொடை அளித்ததோடு, கட்டுமானப்பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகளையும் செய்துள்ளனர்.

Peter Liu

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

இப்போதிருக்கும் கோயிலானது 12அல்லது 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இக்கோயில் மூலவராக 'கூத்தன்' என்றழைக்கப்படும் தில்லை நடராசர் வீற்றிருக்கிறார்.

n m

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

அண்ட சராசரங்களையும் படைப்பதற்காக சிவன் நடனத்தின் அரசராக ஆனந்த தாண்டவமாக கூத்தடியிருக்கிறார். இதுவே இவருக்கு கூத்தன் என்று பெயர் வரக்காரணம் ஆகும்.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

உலகில் சிவன் மூலவராக இருக்கும் கோயில்களில் இந்த சிதம்பரம் கோயிலில் மட்டும் தான் லிங்க வடிவாக இல்லாமல் மானுட உடலோடு சிவபெருமான் காட்சியளிக்கிறார்.

Sankara Subramanian

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

நடராசரின் உமையாளாக பார்வதி தேவி சிவகாமி தேவியாக இங்கே காட்சியளிக்கிறார். அதோடு விநாயகர், முருகன் மற்றும் பெருமாள் ஆகியோருக்கும் தனித்தனி சந்ததிகள் இங்கே இருக்கின்றன.

Peter Liu

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

நடராசரிடம் இருந்து தான் பரத நாட்டியக்கலை பிறந்ததாக சொல்லப்படுகிறது. சிதம்பரம் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் தான் பரதக்கலைக்கு அடிப்படை எனவும் கூறப்படுகிறது.

lomaDI

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

தில்லை நடராசர் கோயில் பஞ்ச பூத ஸ்தலன்களுள் ஆகாயத்தை குறிக்கும் கோயிலாகும். சிவ பெருமானிடம் இருந்து நேரடியாக யோகக்கலையை பயின்றவர் என்ற சிறப்புடையவரான பதஞ்சலி முனிவர் தனது 'திருமந்திரம்' என்ற நூலில் இக்கோயிலை புகழ்ந்து பாடல்கள் எழுதியுள்ளார்.

lomaDI

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை நடராசர் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்துதான் இயற்றியிருக்கிறார்.

Jean-Pierre Dalbéra

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

ஆதிகாலத்தில் இக்கோயில் 'தில்லை' என்ற மரங்கள் சூழ்ந்த வனத்தின் நடுவே இருந்ததாலேயே 'தில்லை நடராசர் கோயில்' என அழைக்கப்படுகிறது.

மேலும் மேடை என பொருள்படும் 'சிற்றம்பலம்' என்றே இவ்விடம் விளிக்கப்பட்டிருக்கிறது. பின்னாளில் இதுவே 'சிதம்பரம்' என மருவியிருக்கிறது.

gordontour

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

பஞ்சாபில் இருக்கும் பொற்கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தங்ககூரை வேயப்பட்ட பெருமையும்தில்லை நடராசர் கோயிலுக்கு உண்டு.

இந்த அருங்காரியத்தை செய்தவர் சோழ மன்னன் முதலாம் பிராந்தாகன் ஆவர். 'தில்லையாம்பலதுக்கு பொன் கூரை வேய்ந்த தேவன்' என்ற அடைமொழியையும் இவர் பெற்றுள்ளார்.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

முதலாம் குலோத்துங்க சோழன், முதலாம் ராஜராஜ சோழன், விக்கிரம சோழன் ஆகியோரும் இக்கோயிலுக்கு பெருங்கொடைகளை வழங்கியிருக்கின்றனர்.

புதுக்கோட்டை மகாராஜா சேதுபதி அவர்களால் அளிக்கப்பட மரகதக்கல் இன்றும் நடராசரை அலங்கரிக்கிறது.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

பண்டைய தமிழர்களின் அறிவியல் ஞானத்திற்கு ஒரு சாட்சியாகவும் இக்கோயில் திகழ்கிறது. காலகஸ்தி, காஞ்சிபுரம் கோயில் மற்றும் தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று பஞ்சபூத கோயில்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கின்றன.

பலநூறு கி.மீகள் தள்ளியிருக்கும் இக்கோயில்கள் மிகச்சரியாக ஒரே நேர்க்கோட்டில் இருப்பது எப்படி என்பது இன்றைய நவீன அறிவியலுக்கும் புரியாத புதிர் தான்.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

இக்கோயிலுக்கு ஒன்பது நுளைவுவாயில்கள் இருக்கின்றன. இந்த ஒன்பதும் மனித உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும்.

கருவறையின் மேல் 21,600 தங்க தகடுகள் 72,000தங்க ஆணிகளை கொண்டு பதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே21,600 என்பது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக சுவாசிக்கும் கணக்கு ஆகும். அதோடு72,000 என்பது மனித உடலில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

இக்கோயில் வளாகத்தினுள் சித் சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை மற்றும் தேவ சபை என ஐந்து சபைகள் இருக்கின்றன.

இக்கோயிலில் இருக்கும் புனித குளம் 'சிவ கங்கை' என அழைக்கப்படுகிறது.

Karthik Easvur

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயில்

சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களையும், சிதம்பரத்தில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Varun Shiv Kapur

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X